பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த சம்பவம்.. எதிர்பாராத திருப்பம் வந்தாச்சு! இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் பாக்யா மற்றும் கோபி இருவரும் கழுத்தில் மாலையோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது இனியாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்று கடந்த மாதத்திலேயே தகவல் வெளியானது. அதனால் இந்த சீரியலில் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஏற்கனவே இந்த சீரியலில் இதுவரைக்கும் இழுத்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தது.

இனியாவின் காதல் விஷயம்
கோபியை இரண்டாவது திருமணம் செய்த ராதிகா விவாகரத்து செய்துவிட்டு விலகி போய்விட்டார். இதனால் கோபி பாக்யா வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் பாக்கியா அடுத்த அடுத்த பிரச்சனைகள் வந்தபோது கோபியை மீண்டும் வீட்டை விட்டு துரத்தி விட்டிருக்கிறார். கோபியோடு ஈஸ்வரியும் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார். அதுபோல இனியா பாக்யாவின் தோழியான செல்வியின் மகனை காதலிக்கும் விஷயமும் குடும்பத்திற்கு தெரிய வந்து பெரும் பஞ்சாயத்து நடந்தது.
விரட்டி விட்ட பாக்கியா
அதுபோல பாக்கியா சொன்னதற்காக இனியா தன்னுடைய காதலன் ஆகாஷிடம் பேசாமல் படிப்பை முடித்துவிட்டு இப்போது வேலைக்கு சேர்ந்திருக்கிறார் .இந்த நேரத்தில் தான் இப்போது பாக்கியாக்கு புது பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது சுதாகர் என்ற ஒரு தொழிலதிபர் ரெஸ்டாரண்டை தனக்கு தரும்படி மிரட்ட வந்திருக்கிறார். அதற்கு பாக்கியம் முடியாது என்று அவரை விரட்டி விட்டிருக்கிறார்.

அடுத்த திருமணம் ட்ராக்
ஆனால் பாக்கியாவை எப்படி இதற்கு சம்மதிக்க வைக்கலாம் என்று சுதாகர் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யாவிற்கு இனியா என்ற ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது. அதேபோல கோபி மற்றும் ஈஸ்வரி செழியன் மூன்று பேரும் சேர்ந்து இனியாவிற்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சுதாகரின் மாஸ்டர் பிளான்
அப்போது கோபி நான் பெரிய பணக்கார வீட்டில் தான் இனியாவை திருமணம் செய்து கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாக்யா மற்றும் கோபி இருவரும் கழுத்தில் மாலையோடு இருக்கிறார்கள்.
அடுத்த பரபரப்பு இதுதான்
இதனால் பாக்கியாவிற்கு பிரச்சனையாக வந்த சுதாகர் தன்னுடைய மகனுக்கு கோபியின் மூலமாக இனியாவை பெண் கேட்பார் என்று தெரிகிறது. அப்படி என்றால்தானே ரெஸ்டாரண்ட்டே தன்னுடைய பெயருக்கு வாங்க முடியும் என்று பிளான் போடுவது போல தெரிகிறது. ஏற்கனவே செல்வியின் மகன் எக்ஸாமில் பெயிலாகி இருப்பதால் இதை காரணம் காட்டி இனியாவிற்கு வேறு திருமணம் செய்வதற்காக கோபியும் ஈஸ்வரியும் பிளான் போடுகிறார்கள் என்று தெரிகிறது. இதனால் இனி இனியாவின் திருமணம்தான் அடுத்து பரபரப்பை ஏற்படுத்த போகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications