இந்த கோபி இப்படியா இருப்பாரு.. உண்மையை சொல்லாம பாக்கியாவை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போறாரே! ட்விஸ்ட்!
சென்னை: உண்மையை மறைத்து மனைவி பாக்கியலட்சுமியை கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார் கோபி. அப்போது கோபியிடம் கேள்வி கேட்டு திக்குமுக்காட வைக்கிறார் பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வெற்றி நடை போடும் இந்த சீரியலில் கதாநாயகன் கோபி, அதாவது பாக்கியலட்சுமியின் கணவருக்கு ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்புள்ளது.
பிள்ளைகள் வளர்ந்து அதில் ஒரு பிள்ளைக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையிலும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் வாழ்வதற்கு கோபி முடிவு செய்கிறார். அதன்படி ராதிகா ஒரு வக்கீலை பார்த்து டைவர்ஸ் நோட்டீஸை கோபியின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு போன் செய்கிறார்.

கோர்ட் நோட்டீஸ்
உடனே பதறியடித்துக் கொண்டு அந்த நோட்டீஸ் வீட்டில் உள்ளவர்களிடம் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஓடி வருகிறார். அப்போது பாக்கியாவிடம் போய் கோர்ட்டில் இருந்து ஏதாவது லெட்டர் வந்ததா என கேட்கிறார். அய்யோ ஆமாங்க, ஆனா எங்கள் வச்சனு தெரியலை என சொல்ல அந்த லெட்டரை ஜெனி, இனியா ஆகிய இருவரும் லெட்டரை தேடுகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்
அந்த லெட்டரை தேடும் நேரத்தில் கோபியின் முகத்தில் பதற்றமும் கலவரமும் தெரிகிறது. இதனால் மகன் எழிலுக்கு சந்தேகம் வருகிறது. இந்த நிலையில் லெட்டரை பாக்கியா கோபியிடம் கொடுக்கிறார். இதற்கு அடுத்து பாக்கியா நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு ராதிகா சொல்கிறார்.

சொல்லாமல் அழைத்து செல்லும் கோபி
அதன்பேரில் பாக்கியலட்சுமியை எங்கே போகிறோம் என்று கூட சொல்லாமல் குடும்ப நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார் கோபி. நாம எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என கோபியிடம் பாக்கியா கேட்க அதற்கு பதிலே சொல்லாமல் அழைத்து செல்கிறார் கோபி. நீதிபதி வந்ததும் அவர்களுக்கு பாக்கியாவும் கோபியும் வணக்கம் வைக்கிறார்கள்.

நீதிபதியிடமே கேள்வி கேட்கும்
நீங்கள்தான் கோபிநாத்- பாக்கியலட்சுமியா என கேட்கிறார் நீதிபதி. இரண்டு பேருக்கு சம்மதம் தானே என நீதிபதி கேட்கிறார். அதற்கு பாக்கியலட்சுமி, "இவர் சொன்னாருங்க எனக்கு சம்மதம்தான்" என்கிறார். கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகிறது என நீதிபதி கேட்க, அதற்கு பாக்கியா, 25 வருஷம் ஆகுது மேடம் என்கிறார். இத்தனை வருஷம் கழிச்சி இப்ப என்ன பிரச்சினை, ஏன் இந்த முடிவுக்கு வந்தீங்க என நீதிபதி கேட்கிறார். அதற்கு கோபியிடம் பாக்கியா, என்ன பிரச்சினைங்க என கேட்டு கோபிக்கு டிவிஸ்ட் தருகிறார். கோர்ட்டில் என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் வெளியாகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications