ராதிகாவின் கேரக்டரை பார்த்து அதிர்ச்சியான இனியா.. இந்த நிலைமை தேவையா கோபி? எதிர்பாராத திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா வீட்டில் கோபித்துக் கொண்டு கோபியோடு ராதிகாவின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஏற்கனவே மயூவால் ராதிகாவோடு தனிமையில் பேச முடியாமல் தவித்து வந்த கோபி இப்போது இனியாவின் செயலால் மேலும் திணறி வருகிறார்.
இனியா, அவமதித்த ராதிகாவே அவருக்கு உடை வாங்கிக் கொடுத்து நன்றாக உபசரித்து வருகிறார். இதை பார்த்த இனியா குழப்பத்தில் இருக்கிறார்.

சோகத்தில் இருக்கும் பாக்கியா குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் இனியா கோபியுடன் போன வருத்தத்தில் பாக்கியா உட்பட எல்லோரும் அப்படியே சோகமாக இருக்கின்றனர். எழில் நான் போய் இனியாவை கூட்டிட்டு வரேன் என கிளம்ப தாத்தா வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். இனிய ஒண்ணும் குழந்தை கிடையாது. அவளுக்கு போதுமான வயது வந்துவிட்டது. அதனால் நல்லது எது கெட்டது எது என்பதை அவளே புரிந்து வந்து விடுவாள் என தடுக்கிறார். ஜெனி இவர்களோடு நின்று கொண்டிருப்பதை பார்த்து அனைவரும் ஜெனியை போய் படுத்து தூங்க செல்கின்றனர். செழியன் ஜெனியை கூட்டிக்கொண்டு உள்ளே கிளம்புகிறார். செல்வி நானாவது போய் இனியாவை கூட்டி வரவா? என கேட்க மொத்த குடும்பமும் வேண்டாம் என கூறுகிறது. எதற்காகத்தான் இந்த குழந்தைகளை எல்லாம் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்கிறோமோ? என தெரியலையே என செல்வி நொந்தபடி கிளம்புகிறார்.

ராதிகா செய்த எதிர்பாராத செயல்
அதே நேரத்தில் ராதிகாவின் வீட்டில் கோபி இனியா மற்றும் மயூ என மூவரும் கேரம் போர்டு விளையாடுகின்றனர். இனியா மயூவை பார்த்துக்கொண்டு முழித்தபடி இருக்கிறார். அப்போது ராதிகா இனியாவுக்காக புது துணிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க கோபி ராதிகாவுக்கு நன்றி சொல்லி பாராட்டுகிறார். எனக்கு கூட இது தோணவில்லையே, இனியா இவ்வளவு நேரம் யூனிபார்ம் ஓடே இருக்கா என்பதை நானே மறந்து விட்டேன் என்று கூற, ராதிகா நான் யோசித்தேன். அதான் போய் வாங்கிட்டு வந்தேன் எனக் கூற, சொல்லி இருந்தால் நானே போய் இருப்பேன் என கூறுகிறார் .அதற்கு ராதிகா நீங்கள் போய்விட்டால் இனியா என்னோடு சகஜமாக பேசுவாளா ?என தெரியாது அதனால்தான் நானே போயிட்டு வந்தேன் என்று கூற இனியா அந்த உடைகளை போட்டுவிட்டு வரும்படி கூறுகின்றனர். இனியாவும் உடைகளை போட்டு வந்து விட்டு சரியாக இருப்பதாக கூறுகிறார்.

கோபிக்கு கிடைத்த சிறு மகிழ்ச்சி
பிறகு ஹோட்டலில் இருந்து சப்பாத்தி ஆர்டர் செய்து இனியாவுக்கு கொடுக்கிறார். அனைவரும் சாப்பிடும் போது கோபி இன்று தான் நிம்மதியாக சாப்பிட்டதாக உணர்கிறார். இன்று நூடுல்ஸ், உப்புமாவில் இருந்து தப்பித்து விட்ட மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிகிறது. அதற்கு பிறகு இனியா தூக்கம் வருது என சொல்ல கோபி ராதிகாவுடன் சென்று இப்போ நாம நாலு பேரு இருக்கோம்..எங்க தூங்குறது என கேட்க ராதிகா சின்ன வீடா பார்த்துட்டு எங்க தூங்குறதுன்னு கேட்டா என்ன சொல்றது என கேட்க இனியா மையூடன் கட்டிலில் படுக்கட்டும். நாம இரண்டு பேரும் ஹாலில் போய் படுக்கலாம் என சொல்ல கோபிக்கு ஒரே ஆனந்தம். இன்னைக்கு தான் நம்ம இரண்டு பேரும் தனியா இருக்க போறோம் என சந்தோஷப்படுகிறார்.

இனியாவால் அழும் பாக்யா
இனியா,மயூவோடு ரூமில் படுக்க வைத்து விட்டு ஹாலில் கோபியும் ராதிகாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இனியாவிற்கு கட்டிலில் மயூ உடன் படுத்திருப்பது தூக்கம் வராமல் ஹாலுக்கு வந்து கோபியிடம் நான் இங்கேவே படுத்துக்கவா? எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது என்று சொல்ல, ராதிகா நான் வேணா மயூடன் படுத்து கொள்கிறேன். நீ இங்கே படுத்துக் கொள் என்று எழுந்து மையூடன் போய் படுத்து விடுகிறார். கோபியின் மடியில் இனியா படுத்து தூங்கி விடுகிறார். இந்த பக்கம் பாக்யாவின் வீட்டில் எல்லோரும் வருத்தமாக அமர்ந்து கொண்டு இருக்க, எழில் எல்லோரையும் சமாதானம் செய்து தூங்க அனுப்பி வைக்கிறார். எல்லோரும் போய் தூங்குங்கள் நான் தூங்காமல் இருக்கிறேன் திடீரென ராத்திரி இனியா வந்தால் என்ன செய்வது என ஈஸ்வரி சொல்ல அவரையும் தூங்குவதற்கு பாக்கியா அனுப்பி வைத்துவிட்டு இனியாவின் போட்டோவை பார்த்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications