மாலை மாற்றும் போது எழில் செய்த செயல்.. அமிர்தாவை திட்டி அவமானப்படுத்தும் ஈஸ்வரி..கடைசியில் ட்விஸ்ட்!

நிச்சயதார்த்த மண்டபத்துக்கு வந்த அமிர்தாவை பார்த்து எழில் அதிர்ச்சியாக, ஈஸ்வரி அமிர்தாவை தனியாக அழைத்து சென்று திட்டுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நிச்சயதார்த்த மேடையில் பாக்யா உடன் சேர்ந்து கோபி தட்டு மாற்றுகிறார். இதை பார்த்த ராதிகா கோபத்தில் இருக்கிறார்.

அமிர்தா மண்டபத்திற்கு வந்து எழிலை தேட அங்கு மாப்பிள்ளைக்காக எழில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அமிர்தாவை பார்த்த ஈஸ்வரி அதிர்ச்சியாகி அமிர்தாவை தனியாக அழைத்து சென்று திட்டுகிறார்.

ராதிகாவுக்கு அவமானம்

ராதிகாவுக்கு அவமானம்

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் பாக்யாவை மேலே கூப்பிட, பிறகு பாக்யா மேலே வருகிறார் . பிறகு பையனோட அப்பா அம்மா மட்டும் இங்க இருக்கட்டும் அவங்க கொஞ்சம் பின்னாடி இருக்கட்டும் என சொல்ல ,ஈஸ்வரி ராதிகாவை நீ கொஞ்சம் பின்னாடி போக என சொல்ல, அவமானத்தோடு ராதிகா பின்னாடி நகர்ந்து நின்று, பிறகு கோபத்தோடு கீழே சென்று விடுகிறார். பிறகு பாக்யாவும் கோபியும் சேர்ந்து எழிலுக்காக ஒன்றாக தட்டை மாற்றி நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர்.

பழசை நினைத்துப் பார்க்கும் எழில்

பழசை நினைத்துப் பார்க்கும் எழில்

அடுத்ததாக மாலை மாற்ற கூறுகின்றனர். அப்போது வர்ஷினி எழில் கழுத்தில் ஆசையாக சந்தோஷமாக மாலையை போட எழில் மாலை போடும்போது ஏற்கனவே அமிர்தாவிடம் பேசியதை எல்லாம் நினைத்து பார்க்கிறார். அப்படியே திகைத்துப் போய் நிற்க அங்கிருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி பின்னாடி நின்று மாலையை போடு எழில் என்று கூறுகிறார்ய பிறகு வேறு வழி இல்லாமல் மாலையை மாற்றுகிறார். அடுத்ததாக மோதிரம் மாற்றுகின்றனர். அப்போது கடற்கரையில் உட்கார்ந்து அமிர்தாவிடம் நான் உங்களை விட்டுட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணுவேன்னு நினைக்கிறீங்களா? அப்படி நடக்காது, நீங்க நான் நிலா மூவரும் சந்தோஷமாக இருப்போம் என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறார்.

எழிலின் எதிர்பாராத செயல்

எழிலின் எதிர்பாராத செயல்

எழில் மோதிரத்தை வர்ஷினியின் கையில் போடாமல் யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து வர்ஷினியின் அப்பாவின் முகம் மாறுகிறது. பின்பு ஈஸ்வரி மோதிரத்தை போடு என்று கூற எழில் மோதிரத்தை மாற்றுகிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கும்போது கோபியும் பாக்கியாவும் ஜோடியாக நிற்க இதை கீழே இருந்து பார்த்த ராதிகா கோபப்பட அதை பார்த்து கோபி அங்கிருந்து நைசாக கிளம்பி கீழே வந்து விடுகிறார்.

அமிர்தாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

அமிர்தாவுக்கு கிடைக்கும் அதிர்ச்சி

பிறகு எல்லோரும் சாப்பிட போக, பாக்கியா சாப்பிடாமல் அப்படியே உட்கார்ந்து இருக்க ராமமூர்த்தி எதற்காக என்று காரணம் கேட்கிறார். அதற்கு இரண்டு மூன்று ஜூஸ் குடித்துவிட்டேன் அதனால் பசி இல்லை என்று சொல்லி அங்கிருந்து பாக்கியா கிளம்பி விடுகிறார். பிறகு அமிர்தா மண்டபத்துக்கு வந்து இறங்கி எழிலை தேட, அப்போது செழியனை பார்க்கிறார். அதே நேரத்தில் செழியன் மேடையில் இருந்த கேமராமேனை கொஞ்சம் விலக சொல்ல அவர்கள் விலக அங்கு எழில் வர்ஷினி இருப்பதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது எழிலும் அமிர்தாவை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைகிறார்.

அவமானப்படுத்தும் ஈஸ்வரி

அவமானப்படுத்தும் ஈஸ்வரி

வர்ஷினி சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க அதை பார்த்த கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அதை அங்கே வரும் ஈஸ்வரி பார்த்து விடுகிறார். பின்பு அமிர்தாவை அழைத்து சென்று ஓர் இடத்தில் நிற்க வைத்து இங்கே எதற்கு வந்த என்று கேட்க, அதற்கு அமிர்தா பாட்டி எழிலுக்கு கல்யாணமா? என்று கேட்க, பின்ன அவன் உன்னை கல்யாணம் பண்ணிப்பான்னு நீ நினைச்சியா? நீ வீட்டுக்கு வரும்போது தெரியும், என் பேரனை வளைச்சி போட பாக்குறனு என திட்ட, அமிர்தா அதிர்ச்சியாகி அழுகின்றார். ஜெனி எவ்வளவோ தடுத்தாலும் ஈஸ்வரி அமிர்தாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+