கடைசி நேரத்தில் அமிர்தா உடன் வந்து திருமணத்தை நிறுத்திய பாக்யா... ஈஸ்வரி எடுத்த எதிர்பாராத முடிவு
எழில் வர்ஷினியின் திருமணத்தை கடைசி நேரத்தில் அமிர்தாவோடு வந்து பாக்யா தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் பணத்திற்காக தான் வர்ஷினியை திருமணம் செய்வதற்கு சம்மதித்திருக்கிறார் என்ற உண்மை பாக்கியாவிற்க்கு தெரிகிறது.
எழில் மற்றும் வர்ஷினியின் திருமணத்திற்கு அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து பாக்கியா அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஏற்கனவே பிடிக்காத திருமணத்தை செய்து நான் பட்ட கஷ்டத்தை என்னுடைய மகன் கூடாது அதனால் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று உறுதியாக பாக்கியா கூறுகிறார்.

பாக்யாவுக்கு தெரிய வந்த உண்மை
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோட் ஆரம்பத்தில் அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்ட எழில், பிறகு அங்கு சதீஷ் வர அவரிடம் அமிர்தாவை கொண்டு வீட்டில் விட்டு விடு என்று அனுப்பி வைக்கிறார். பாக்யாவும் ஜெனியும், எழிலும் அமிர்தாவும் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் பிறகு தனியாக யோசித்தபடி பாக்கியா நிற்கிறார். அப்போது பாக்கியாவிடம் ஜெனி எனக்கு இது ஏற்கனவே தெரியும். எழில் பணத்திற்காக தான் இந்த கல்யாணத்தை செய்யப்போகிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால் எழில் எதையும் உங்ககிட்ட சொல்ல கூடாது என்று சொல்லிட்டான் என்று சொல்ல இது அவனுடைய வாழ்க்கை ஜெனி என்று பாக்கியா யோசித்தபடியே இருக்கிறார்.

திருமணத்திற்கு ரெடியான எழில்
மறுநாள் எழில் கல்யாணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்க அப்போது சதீஷ் அங்கு வருகிறார். சதீஷிடம் அமிர்தாவை வீட்டில் விட்டு விட்டியா என்று கேட்க என்னுடைய நண்பனின் காரில் அனுப்பி வைத்துவிட்டேன் என்று சதீஷ் கூறுகிறார். பிறகு அய்யர் மணமேடைக்கு அழைத்து வரச் சொல்ல,செழியன் எழிலை அழைத்து செல்கிறார். அதே நேரத்தில் வர்ஷினியும் திருமணத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கு அவருடைய தந்தை வந்து இன்று நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியா எங்கே
உனக்கு பிடித்து இருக்கு என்கிற ஒரே காரணத்துக்காக தான் என்னால இந்த கல்யாணத்தில் எதுவும் சொல்ல முடியல என்று வர்ஷினியின் அப்பா அவரிடம் கூறுகிறார். பின்பு மண்டபத்திற்கு கோபி ராதிகாவுடன் வர அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அப்போது பாக்கியா எங்கே என ஈஸ்வரி கேட்க, ஜெனி அத்தை வீட்டுக்கு போய் இருக்காங்க நைட்டு போனாங்க இன்னும் வரல வந்துட்டு இருக்கிற தான் சொன்னாங்க என்று கூறுகிறார்.

மன்னிப்பு கேட்கும் பாக்கியா
பிறகு மணமேடையில் எழில் உட்கார்ந்து இருக்க, அங்கே அப்போது பாக்கியா வருகிறார். மேடையில் இருக்கும் எழிலை பார்த்த மாதிரி நிற்க செல்வி, அக்கா எங்க போயிருந்தாய் என்று கேட்கிறார். பிறகு அப்போது வர்ஷினி மணமேடையில் வந்து எழில் அருகில் உட்கார இருக்கிறார். அப்போது பாக்கியா ஒரு நிமிஷம் என்று வர்ஷினியை தடுக்கிறார். அதற்கு ஈஸ்வரி ,பாக்யா என்ன பண்ணுற என்று கேட்க? மணமேடையில் உட்காருவதற்கு முன்னாடியே உன்னை தடுத்துட்டு என்ன மன்னிச்சிடுமா என்று வர்ஷினிடம் கூறுகிறார்.

எதிர்த்து பேசும் பாக்கியா
எனக்கு வேற வழி தெரியல ஆனா இந்த கல்யாணம் நடக்காது என்று கோபத்தோடு பாக்யா சொல்ல, அனைவரும் அதிர்ச்சியாக இருந்தனர். ஈஸ்வரி பாக்கியா உனக்கு பைத்தியம் பிடித்து போச்சா? கல்யாண மேடையில் வந்து கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கா நீ பேசாத என்று கூறுகிறார். அதற்கு பாக்கியா இல்லை அத்தை இந்த கல்யாணம் நடக்கவே கூடாது என்று கூறுகிறார். பாக்கியா பிறகு வர்ஷினியிடம் மேடை வரைக்கும் வந்து ஒரு கல்யாண நின்னு போறது அதுவும் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டம் எனக்கு தெரியும். ஆனா எனக்கு வேற வழி தெரியல, இந்த நேரத்துல நான் எழில் பக்கம் நிற்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி என்ன நீ எழில் பக்கம் நிக்கிற? எதையாவது உலராத என்று திட்டுகிறார்.

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
பிறகு பாக்கியா அமிர்தாவை கூட்டிக்கொண்டு வருகிறார். கூடவே குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர். அமிர்தா உடைய குடும்பத்தை பார்த்ததும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர். அமிர்தாவின் கையைப் பிடித்தபடி பாக்கியா கூட்டிட்டு வர, இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த ப்ரோமோவில் எழில் இந்தப் பொண்ணை தான் விரும்புனான். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான். இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என்று கூறுகிறார். அதற்கு வர்ஷினியின் அப்பா இதற்கு மேல் இங்க நின்று எங்களால் அவமானப்பட முடியாது என்று கூறி, வர்ஷினியிடம் உனக்கு எப்படி கல்யாணம் பண்ணனும் என்று எனக்கு தெரியும் என்று கூப்பிட அதற்கு ஈஸ்வரி நில்லுங்க, உங்க பொண்ணு கலுத்தில் தான் எழில் தாலி கட்டுவான் என்று கூறுகிறார்.












Click it and Unblock the Notifications