பாக்கியலட்சுமி சீரியலில் யாருக்கும் தெரியாமல் அமிர்தா செய்த செயல்... அப்போ எல்லாமே நடிப்பா?
பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் ரித்திகா நடித்து வருகிறார்.
ரித்திகாவிற்கு நிஜ வாழ்க்கையில் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இருந்தது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலிலும் அமிர்தாவுக்கு இப்போது தான் திருமணம் முடிவடைந்தது.
இந்த நிலையில் திருமண நேரத்தில் அமிர்தா தனக்குத்தானே தாலி கட்டிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால் தான் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இந்த சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு அதிகமான பெண் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கடந்த வாரத்தில் இந்த சீரியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வரைக்கும் இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் இருக்கிறது. எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று கடைசி வரைக்கும் ட்விஸ்ட் வைத்து இருந்தனர்.

எழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை
அதில் அமிர்தாவின் திருமணத்திற்கு கடைசி நேரத்தில் பாக்கியா உதவி செய்ய, வீட்டில் பெரும் எதிர்ப்போடு பிரச்சனைகளும் புதியதாக வந்து இருந்தது. வீட்டிற்கு பாக்கியாவின் பெயரை வைத்ததால் எழில் மீது இருந்த கோபத்தில் கோபி இந்த வீட்டை நான் விற்க போகிறேன் என்று கூற, அதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று எழில் சபதம் இட எழிலால் எவ்வளவோ அழைந்தும் ஒரு மாதத்திற்குள் பணம் புரட்ட முடியாததால் வீட்டில் எழில் பாட்டியின் வற்புறுத்துதல் மற்றும் மிரட்டுதலால் வர்ஷினியை திருமணம் செய்ய சம்மதித்திருந்தார்.

தாலி இப்படித்தான் கட்டப்பட்டது
கடைசி நேரம் வரைக்கும் எழில் அமிர்தாவை காதலித்து வருகிறார் என்ற உண்மையை தெரிந்ததும் ராதிகா அமிர்தாவை கூட்டி வந்து மேடையில் நிற்க வைத்து கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தி இருந்தார். பிறகு பலருடைய எதிர்ப்பையும் மீறி கடைசி நேரத்தில் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார். இந்த நிலையில் திருமண நேரத்தில் தனக்கு எழில் தாலி கட்டவில்லை என்று தனக்குத்தானே அமிர்தா தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டு, அமிர்தாவுக்கு இப்படித்தான் திருமணம் முடிந்தது என்று கேப்ஷன் ஒன்றை ரித்திகா கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி செய்கின்றனர்.

செல்ப் லவ்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகாவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ஒரு பதிவு வெளியிட்டாலும் அதை லைக் மற்றும் ஷேர் செய்ய அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் ரித்திகா வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சி ஆகி பலர் இதுக்கு பேரு தான் செல்ப் லவ்வா என்று கேட்க? இன்னும் ஒரு சில ரசிகர்கள் பழைய ஆன்ட்டிகள் சிலர் இந்த சீரியல்ல பொண்ணுங்க எத்தனை கல்யாணம் பண்ணுவாங்க என்று கேட்பார்கள் அவர்களிடம் இந்த வீடியோவை போட்டு காட்டுங்க இப்படித்தான் எங்களுக்கு கல்யாணம் நடக்குது என்று, இன்னும் புரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இது யூஸ் ஆகும் என்று கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications