கோபியை அடிக்க பாயும் எழில், செழியன்.. பழனிச்சாமி விஷயத்தில் ஈஸ்வரி எடுக்கப் போகும் முடிவு..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ராதிகாவுக்கு ஜெனிக்கு உதவியதற்கு நன்றி கூறுகிறார்.
பாக்யாவும் பழனிச்சாமியும் உறவில் இருப்பதாக கோபி ஈஸ்வரியிடம் கூற இருக்கிறார்.
கோபி சொன்ன வார்த்தையை கேட்டு எழிலும் செழியனும் கோபியை அடிக்க பாய இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதுவரைக்கும் எலியும் பூனையும் ஆக பாக்யாவும் ராதிகாவும் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது ராதிகாவும், பாக்யாவும் மீண்டும் ஒன்றாக சேர இருக்கின்றனர்.
ஈஸ்வரி சொன்ன வார்த்தையை அப்படியே நம்பிய கோபி நீ எதற்காக ஜெனியை கீழே பிடித்து தள்ளினாய்? என்று ராதிகாவை இன்றைய எபிசோடில் திட்டுகிறார். அதனால் கோபமாகும் ராதிகா உங்க அம்மா சொல்றதை நம்புறீங்க, என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நான் கர்ப்பமாக இருக்கிற பொண்ணை பிடித்து தள்ள கொலைகாரியா? என்னை இப்படி பேசிட்டீங்களே என்று திட்டி தீர்க்கிறார்.

அதே நேரத்தில் பாக்கியா ராதிகாவை புரிந்து கொண்டு ஜெனிக்கு யாரும் இல்லாத நேரத்தில் உதவியதற்காகவும், மருத்துவமனையில் சேர்த்ததற்காகவும், தாங்கள் வரும் வரைக்கும் மருத்துவமனையில் காத்திருந்து ஜெனிக்கு ஆறுதலாக இருந்ததற்காகவும் நன்றி கூறுகிறார்.
அதைவிட நீங்க ரொம்பவே தைரியமான ஆளு, எவ்வளவோ பிரச்சனைகளை எதிர்த்து சுயமாக இருந்த தைரியமான பெண்ணாகத்தான் உங்களை பார்த்தேன். ஆனா இப்போ எல்லாரும் இருந்து தனிமரமாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது ராதிகா, என்றும் பாக்கியா பேச ராதிகா பீல் பண்ணுகிறார்.

இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டில் கோபி ஈஸ்வரி இடம் ராதிகாவுக்கும் பழனிசாமிக்கும் தப்பான உறவு இருக்கிறது என்று கூற இருக்கிறார் என்றும், அதை கேட்டு எழில் மற்றும் செழியன் கோபியை அடிக்க பாய்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இனிவரும் எபிசோடுகள் வேகமாகவும் அதே நேரத்தில் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று ஏற்கனவே கோபியாக நடிக்கும் சதீஸ் வெளியிட்டிருந்த நிலையில் தற்போதைய தகவல்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications