இனியா மற்றும் தாத்தா எடுத்த முடிவால் விரக்தியான ராதிகா.. கடைசியில் கோபி எடுத்த பரிதாபமான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மற்றும் தாத்தாவை தேடி செழியன் கோபியின் வீட்டிற்கு வந்து நிலையில் இனியாவும் தாத்தாவும் நாங்கள் வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
அடுத்தடுத்து கோபியின் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வந்து கொண்டிருப்பதை பார்த்த ராதிகா கடுப்பாகி கோபியிடம் சண்டையிட்டு வருகிறார்.
இரண்டு பக்கத்திலும் ஏற்படும் பிரச்சனைக்கு என்ன முடிவு எடுக்க என தெரியாத பரிதாபமான நிலையில் கோபி தவித்து வருகிறார்.

கடுப்பில் இருக்கும் ராதிகா
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில் ராதிகா ரூமுக்குள் கோபமாக இருக்ககிறார். அப்போது அங்கே வந்த கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார் இனியாவை நீங்க கூட்டிட்டு வந்ததில் ஒரு அர்த்தம் இருக்கு ,உங்க அப்பா எதுக்கு இங்க வந்தாரு எனக்கு பயமாக இருக்கு என சொல்ல கோபி எனக்கும்தான் தெரியவில்லை என்று மனதிற்கு உள்ளே சொல்லிக்கொண்டு இனியா இங்கே வந்ததால் அப்பாவால அங்கே இருக்க முடியாமல் வந்து விட்டார். அவரால் இனி எந்த பிரச்சனையும் வராது. பயப்படாதே என்று சமாதானம் சொல்ல மயூ வேற இருக்கா சண்டை ஏதாவது போட போறாரு என கோபத்தோடு கோபியிடம் பேசுகிறார் .அதற்கு அவர் ஏதாவது பிரச்சனை பண்ணா நான் பார்த்துக்கிறேன் .அதுக்கு நான் கேரண்டி என கோபி கூறுகிறார்.

திணறும் கோபி
வெளியே வந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருக்கும்படி ராதிகாவை கோபி கூப்பிட்டதற்கு அங்கே வந்து நான் இருப்பதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று கூறிகிறார். .அப்போ உள்ளேயே இருந்துகொள் என்று சொன்னதற்கு இங்கேயே நான் எத்தனை நேரம் உட்காருவேன் என்று ராதிகா கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கோபி முழித்தபடியே அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

கோபி வீட்டுக்கு வந்த செழியன்
பாக்யாவின் வீட்டில் அவர் எதுக்கு அங்க போகணும் இரண்டு பேரையும் இப்போ நீங்க கூட்டிட்டு வரணும் என ஒவ்வொருத்தரிடமும் ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார் .செல்வியிடம் நீ அங்கே சென்று இருவரையும் நான் சொன்னேன் என கூட்டி வந்துவிடு என சொல்ல, அங்கே நான் எப்படி போய் கூப்பிடுவது என்று கேட்பதற்கு நீதானே அன்னைக்கு இனியாவை போய் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னாய்? என எதிர் கேள்வி கேட்க, இனியா சின்ன பொண்ணு ஆனால் ஐயா பெரியவரு அவரை போய் நான் எப்படி கூப்பிட முடியும் என்று சொன்னதற்கு செழியன் நான் போய் கூப்பிட்டு வருகிறேன் என்று ராதிகா வீட்டுக்கு வருகிறார். கோபி செழியனை பார்த்ததும் உள்ளே அழைக்க நான் இனியாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு போக வந்தேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

இனியா மற்றும் தாத்தாவின் இறுதி முடிவு
ரூமுக்குள் அமர்ந்திருந்த ராதிகா வெளியே கேட்கும் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்க்கிறார். அங்கே செழியனும் வந்ததால் அதிர்ச்சி அடைகிறார் .அப்போது இனியா நான் வரல எல்லோரும் என்னை திட்டுவாங்க எனக் கூற கோபியும் இனியாவை அனுப்ப முடியாது அவ விருப்பப்பட்டு தான் என்கூட இருக்கா இனியா இங்கேயே இருக்கட்டும், தாத்தாவை வேணும்னா கூட்டிட்டு போ என சொல்ல ராமமூர்த்தி நான் என் பேத்தி இருக்கும் இடத்தில் தான் இருப்பேன் என சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். நான் இங்கேயே சந்தோஷமாக இருக்கிறேன் வரவில்லை என்று இறுதியாக இனியா சொல்லவும் நான் பார்த்துக் கொள்கிறேன் செழியா நீ போ என்று தாத்தா அனுப்பி வைக்கிறார்.

பாக்யாவின் ஆறுதலும் வருத்தமும்
பிறகு வீட்டுக்கு வந்த செழியன் இருவரும் வரமாட்டேன் என்று சொன்ன விஷயத்தை சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று ஈஸ்வரி கிளம்ப பாக்யா விடுங்க அத்தை எங்க இருக்கா அவங்க அப்பா கூட தானே இருக்க ,அவங்களுக்கு எங்க இருந்தா சந்தோஷமோ அங்க இருக்கட்டும். என கூறிக்கொண்டு அதுதான் மாமா பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே மாமா சாப்பாட்டுக்கு நம்ம வீட்டுக்கு தானே வருவேன் என்று சொல்லி இருக்கிறார் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று ஈஸ்வரிக்கு ஆறுதல் சொல்ல பாக்கியா உனக்கு இனியா இங்கே இல்லாதது வருத்தமா இல்லையா? என ஈஸ்வரி கேட்டதற்கு அது எப்படி இல்லாமல் இருக்கும் அத்த என கேட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார்.

தாத்தாவின் முடிவு என்னவாக இருக்கும்
அடுத்ததாக இனியா வரமாட்டேன் என்று சொன்னதை மீண்டும் மீண்டும் செழியன் சொல்லிக் கொண்டிருக்க ஜெனி செழியனை திட்டுகிறார். செழியன் இதை விட்டுவிடு இனி ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்காதே என்று சொல்ல மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் போய் கூப்பிட்டும் வரவில்லையே என்று செழியன் சொல்ல, எல்லோரும் ஜெனி கிடையாது நீ கூப்பிட்டதும் வருவதற்கு என்று செழியனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார் .அதை பார்த்து எழில் சிரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இனியாகவும் தாத்தாவும் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருக்க மயூ வந்து இவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டு நிற்க, தாத்தா மயூவை பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications