கோபியை பழிவாங்கும் தாத்தா.. ராதிகாவால் மாமியாரை மிரட்டிய பாக்யா.. கதை மொத்தமாக மாறி போயிடிச்சே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பழிவாங்குவதற்காக அவருடைய தந்தையான ராமமூர்த்தி ராதிகாவின் சமையலை குறை சொல்லி வருகிறார். அப்பாவால் ராதிகாவிடம் மாட்டிக் கொண்டு கோபி முழித்துக் கொண்டிருக்கிறார்.
இதுவரைக்கும் எதிர்த்து பேசாமல் இருந்து வந்த பாக்யா கோபி வெளியேறிய பிறகு தன்னுடைய மாமியார் ஆன ஈஸ்வரியை முதல் முறையாக மிரட்டி இருக்கிறார்.
ராதிகாவால் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் இருக்கிறார்கள்.

ராதிகாவை பற்றிய விசாரணை
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் தாத்தாவும் இனியாவும் கேரம்போர்ட் விளையாடிக் கொண்டிருக்க மயூ இதனை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க, பிறகு தாத்தா இனியாவிடம் ராதிகா கிட்ட பேசினியா? என கேட்கிறார். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு மயூ ரூமுக்குள் சென்ற பிறகு நான் பேசலை அவங்க நல்லா பாத்துக்கிறாங்க, அவங்க தான் ஏதாவது வேணும்னா கேட்பாங்க என சொல்ல அந்த பொண்ணு கிட்ட பேசுனியா என கேட்க யாரு மயூவா? என இனியா கேட்கிறார். ஆமாம் என்று தாத்தா சொன்னதும் அவளா வந்து பக்கத்தில் வந்து நிற்பாள் நான் எதுவும் பேசிக்கலா என்று இனியா கூறுகிறார்.

மயூவை ஏற்றுக் கொண்ட தாத்தா
இனியாவும் தாத்தாவும் பேசிக்கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும்போது மயூ அங்கே வந்து நிற்கிறார். பெரியவங்க பண்ணின தப்புக்கு குழந்தை என்ன செய்யும் என சொல்லி மயூவை கூப்பிட்டு உட்கார வைத்து கேரம் போர்டு விளையாட வைக்கிறார். அப்போது கடைக்கு சென்று இருந்த கோபி காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். இவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷமடைந்து ரூமுக்குள்ளே வருகிறார். அங்கே ராதிகா தனியாக சிந்தித்தபடி இருக்கிறார். ராதிகாவிடம் வெளியே வந்து இருக்க வேண்டியதுதானே என கேட்க எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல அப்பா அப்படி ஒன்னும் செய்ய மாட்டார் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே இனியா பசிக்கிறது என சொல்ல என்னுடைய பேத்திக்கு பசிக்கிறதாம் என தாத்தா கத்துகிறார்.

சாப்பாட்டுக்காக ஏற்பட்ட பிரச்சனை
ராமமூர்த்தியின் பேச்சைக் கேட்ட கோபி பாத்தியா அப்பா பசி தாங்கிக்கிட மாட்டார் கத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டில பாக்கியா எல்லோரையும் நல்ல சமைச்சு தான் தன் பக்கம் இழுத்து விட்டாள். நீ உன்னுடைய சமையல் மூலமாக எல்லோருடைய மனசிலும் இடம் பிடிக்கணும் என சொல்ல ராதிகா முறைக்கிறார். பின்பு தயக்கத்துடன் போய் சமையல் செய்கிறார். சாப்பாடு செய்து முடித்ததும் அனைவரையும் சாப்பிட கூப்பிடுகிறார். ராமமூர்த்தியை எப்படி கூப்பிடுவது என ராதிகா திணறிக் கொண்டிருக்கிறார். பிறகு கோபியிடம் உங்க அப்பாவை சாப்பிட கூப்பிடுங்கனு சொல்ல ,நீயே கூப்பிடு மாமா என்று கூப்பிடு என சொன்னதும் அதிர்ச்சியான இனியா, தாத்தா சாப்பிட வாங்க என்று சத்தமாக கூப்பிடுகிறார். நான் வரவில்லை நீங்க சாப்பிடுங்க என்று ராமமூர்த்தி கூற ,அடுத்தது கோபி கூப்பிடுகிறார் அதற்கும் வரவில்லை என்ற போது ராதிகாவே போய் சாப்பிட வாங்க என்று கூப்பிட்ட பிறகு சாப்பிட வருகிறார்.

செழியன் பக்கம் திரும்பிய கேள்வி
இந்தப் பக்கம் சமையல் வேலைகளை முடித்துவிட்டு பாக்கியா செழியன் மற்றும் ஜெனி ஆகியோரை சாப்பிட கூப்பிடுகிறார். ஈஸ்வரியையும் சாப்பிட கூப்பிடுகிறார் அவர் எனக்கு சாப்பாடு வேண்டாம் என சொல்ல, பிறகு பாக்கியா சாப்பிட வாங்க என அதட்டி கூப்பிட ,நீ என்ன கோபி போன பிறகு நீ என்னை முதல்முறையாக அதட்டி இருக்கிறாய் என சொல்ல பிறகு சாப்பிட வாங்க என கூப்பிட்டா குழந்தை மாதிரி அடம்பிடிச்சா அப்படித்தான் செய்வேன். வாங்க அத்தை சாப்பிடுங்க என பேசி சாப்பிட வைக்கிறார். சாப்பிடும்போது செல்வி, ராதிகா சரியான ஆளு முதலில் பாக்கியா அக்காவோட வீட்டுக்காரரை கூட்டிட்டு போயிடுச்சி, அப்புறம் இனியா பாப்பா, இப்ப அம்மாவோட வீட்டுக்காரர், ஜெனி நீ கொஞ்சம் சுதானமா இரு என சொல்ல ஈஸ்வரியும் ஜெனியும் நீ போவியா என செழியனிடம் கேள்விகளை கேட்கின்றனர். செழியன் அய்யய்யோ நான் போகமாட்டேன் என பதறியபடியே சொல்கிறார்.

பழி வாங்கலை தொடங்கிய தாத்தா
இந்த பக்கம் சாதம், சாம்பார், அப்பளம் போன்றவற்றை ராதிகா பரிமாற கோபி சூப்பர் என புகழ்ந்து தள்ள, இது என்ன காரகுழம்பா? என கேட்டு ராமமூர்த்தி நக்கல் அடிக்கிறார். ராதிகா இல்லை அது சாம்பார் என சொல்ல பருப்பையே காணேம் என கேட்க உள்ள இருக்கு என கூறுகிறார். சாம்பார்ல பருப்பு நிறைய போடணும் வாசனை அப்படி வரணும் என வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சாப்பாட்டை குக்கரில் வைத்தியா? எனக்கு சுகர் இருக்கறதுனால குக்கரில் வைக்கக் கூடாது. பானையில் வைத்து குலைய விட்டு வடிக்க வேண்டும் என கூற ராதிகா கோபியை பார்த்து முறைக்கிறார் .கோபி என்ன செய்வது என தெரியாமல் சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிட்டபடி சூப்பராக இருக்கிறது என்னுடைய வாழ்நாளில் நான் எப்படி சாப்பிட்டதே இல்லை என புகழ்ந்து தள்ளுகிறார். இனியாவும் தாத்தாவும் அதிர்ச்சியாக, இந்த சாப்பாடு சாப்பிட எவ்வளவு பொய்யை கேட்க வேண்டியது இருக்கு பாரு இனியா என தாத்தா சொல்ல, ராதிகா கோபியை பார்த்து இன்னும் அதிகமாக முறைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications