பாக்யாவுக்கு வரும் தொந்தரவுகள்..ராதிகாவிடம் வீம்பு பிடித்த இனியா.. கோபிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் வீட்டில் இருக்கும் இனியா ராதிகாவிடம் பேச பிடிக்கவில்லை என்பதை முகத்துக்கு நேராக பேசி புது பிரச்சனையை தொடங்கி இருக்கிறார்.

தப்பு செய்த கோபியை விட்டுவிட்டு பாக்கியாவிடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் துக்கம் விசாரிப்பதை நினைத்து பாக்கியா புலம்பி கொண்டிருக்கிறார்.

பக்கத்து வீட்டு கேள்விகள்

பக்கத்து வீட்டு கேள்விகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் பாக்யா வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண்மணி உங்க வீட்டுக்காரர் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே தெருவுல வந்து இருக்காரு, உங்களுக்கு வருத்தமாக இல்லையா என கேட்க நான் எதற்கு வருத்தப்படணும் தப்பு செஞ்சவரே வருத்தப்படாமல் இருக்கும்போது என பாக்கியா பதிலடி கொடுக்க, உங்க பொண்ணு வேற அவங்களோட போயிட்டா? அது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா? என் பொண்ணை இப்படி எல்லாம் வளர்க்கலா? என பேச பாக்கியா அது உங்களுடைய இஷ்டம் நான் அதை பத்தி கேட்கவே இல்லையே என்று பதிலடி கொடுத்தபடியே அங்கிருந்து கிளம்ப செல்வி வந்து இவரோடு நடப்பதற்கு சேர்ந்து விடுகிறார்.

மகனுக்கு ஆறுதல்

மகனுக்கு ஆறுதல்

அடுத்ததாக அந்த ஏரியாவின் தலைவர் பாக்யாவிடம் கோபி செய்த செயலை பற்றி நீங்க தான் பாவம் என்கிற தோரனையில் பேச அவருக்கும் பதிலடி கொடுக்கிறார். இப்போது அங்கே வாக்கிங் செய்து கொண்டிருக்கும் கோபி, பாக்கியா பேசுவதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு வீட்டிற்கு வந்ததும் எழில் வருத்தமாக இருக்க பாக்யா நடந்த விஷயத்தை விசாரிக்கிறார். அப்போது அமிர்தா ஊருக்கு சென்று விட்ட விஷயத்தை சொல்கிறார். இது பற்றி பேசி ஏழில் வருத்தப்பட பாக்யா ஆறுதல் கூறுகிறார். உங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று இருந்தால் கண்டிப்பாக நடக்கும். அமிர்தாவிடம் நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அவளும் உறுதியாகத் தான் இருக்கிறார் அதனால் நீ கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார்.

ஒரு குட் மார்னிங் ஆல் வந்த வினை

ஒரு குட் மார்னிங் ஆல் வந்த வினை

அடுத்ததாக ராதிகாவின் வீட்டில் தாத்தாவும் இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அருகில் இருந்த இனியாவிடம் மயூ தன்னுடைய ப்ராஜெக்ட் ஒர்க்கை செய்து தரும்படி கேட்க முதலில் மறுத்த இனியா பின்பு தாத்தா சொன்னதால் சரி என்று செய்து கொண்டிருக்கிறார் .அப்போ ராதிகா வந்து உனக்கு சாப்பிட என்ன வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்க இனியா பதில் பேசாமல் இருக்கிறார். அதனால் ராதிகா கிளம்பி போய்விட்டார் .அப்போது வாக்கிங் சென்ற கோபி வரும் போது இனியா குட் மார்னிங் டாடி என்று சொல்ல, மயூவும் குட் மார்னிங் டாடி என்று சொல்லும்போது கோபமான இனியா அந்த ப்ராஜெக்ட்டை கோபத்தோடு தள்ளி வைக்கிறார்.

இந்த வயதில் இது தேவையா

இந்த வயதில் இது தேவையா

ராதிகா அனைவருக்கும் சாப்பாடு செய்து சாப்பிட வர சொல்ல, கோபி இனியாவை கூட்டிக்கொண்டு சாப்பிட செல்கிறார். அங்கே அனைவருக்கும் ஹெல்த் மிக்ஸ் சாப்பிட கொடுத்ததை பார்த்த இனியா இது எனக்கு வேண்டாம் என சொல்ல கோபி உடம்புக்கு ரொம்ப நல்லது சாப்பிடு என கட்டாயப்படுத்த, எனக்கு இது வேண்டாம்னா விடுங்க என சத்தம் போடுகிறார். கோபி குழந்தைகளுக்கு பிடித்ததை சமைச்சு தரலாம்லா என ராதிகாவிடம் சொல்ல, ராதிகா நான் கேட்டா பதில் சொல்லணும், அமைதியா இருந்தா நான் எப்படி தெரிந்துகொள்ள முடியும். நான் என்ன பேயா? என்னிடம் பேசினால் என்ன? என கேட்க எனக்கு உங்க கிட்ட பேச பிடிக்கல, நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? நீங்க யாரு? என கேட்க இந்த வயசுல இந்த ஆட்டிடியூட் ரொம்ப தப்பு என ராதிகா கோபப்பட, இனியா எழுந்து எனக்கு உங்க சாப்பாடு தேவை இல்லை என போகிறார். கோபி மட்டுமல்லாமல் ராதிகாவும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். இத்துடன் இங்கே எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+