சிம்புவோடு நடந்த சண்டை உண்மையா? இல்லையா? 16 வருடம் கழித்து சேனல் ரகசியத்தை உடைத்த பப்லு
சென்னை: விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் 1 சீசன் நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் போட்டியளராக இருந்த பப்லு பிரிதிவிராஜ்வுக்கு நடுவராக இருந்த சிம்புவுக்கும் இடையே பெரும் சண்டை நடந்தது. அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அந்த சண்டை குறித்து பல வருடங்கள் கழித்து பப்லு ப்ரீத்திவிராஜ் பேட்டி ஒன்றில் இப்போது சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது சிம்புவோடு தான் போட்ட சண்டை உண்மையா? அல்லது சேனல் தரப்பினர்கள் சொல்லிதான் அப்படி ஒரு சண்டை நடைபெற்றதா என்பது பற்றி அதில் பேச அவரோடு அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த உமாரியாஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்கள் எல்லோருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் ஆகத்தான் இருக்கும். இது விஜய் டிவியில் ஒளிபரப்பான நிலையில் அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி பற்றி பல வருடங்கள் கழித்து பப்லு ப்ரீத்திவிராஜ் பேசி இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது ஜோடி நம்பர் 1 சீசனில் உமா ரியாஸ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தனர்.அந்த நிகழ்ச்சியின் நடுவராக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். அப்போது ஒரு எபிசோடில் பப்லு டான்ஸ் சரியாக ஆடவில்லை என்று சிம்பு கூற அங்கு சண்டை பெரிய அளவில் வெடித்தது.
அப்போது என்னை எப்படி சிம்பு அப்படி சொல்லலாம் என்று பப்லு எகிற அங்கிருந்த எல்லோரும் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனாலும் சிம்பு மற்றும் பப்லு இடையே பெரிய அளவில் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் சிம்பு உடைந்து அழவே செய்திருந்தார். அப்போது எனக்கு நடிக்க தெரியாது என்று அந்த நேரத்தில் சிம்பு பேசிய டயலாக் இப்ப வரைக்கும் ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து 16 வருடம் கழித்து உமா ரியாஸூம் பிரித்விராஜும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது சிலர் அவரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர். அப்போது பப்லு பிரதிவிராஜ் இங்கிருக்கும் எல்லோருக்குமே ஜோடி சீசன் 1ல் நடந்தது குறித்த சந்தேகம் இருக்கிறது. அதெல்லாம் பேசி வச்சிட்டு தான் அப்படி பண்ணியிருப்பாங்கன்னு நினைத்தார்கள்.
ஆனால் அது தான் உண்மை. பேசி வச்சு தான்... என்று பப்லு சொல்ல அப்போது அருகில் இருந்த உமா ரியாஸ் அப்போ ஏன் நம்மள ஆட விடலை என்று அதிர்ச்சியோடு கேள்வி கேட்கிறார். அதற்கு பப்லு ஆடினோமே என்று சொல்ல, அதற்கு உமா ரியாஸ் எது டிஸ்குவாலிபை பண்ணுனாங்களே அதுவா என்று நக்கல் அடிக்கிறார். அதோடு நீங்க பேசி வச்சு தான் அந்த மாதிரி சண்டை போட்டீங்கனா? அதை என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று உமா ரியாஸ் கேட்க,
அதற்கு பப்லு உன்கிட்ட சொன்னா நீ அப்பவே அதை முடித்துவிட்டு இருப்பா, போதும் இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருப்ப, அதனாலதான் உன்கிட்ட சொல்லல்ல என்று பப்லு சொல்கிறார். அதோடு இந்த விஷயத்தை பப்லு தெளிவாக பேசாமல் இது பற்றி நீங்க எல்லோரும் சஸ்பென்ஸ் ஓட இருங்க என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போ டிஆர்பிக்காக பப்லுவும் சிம்புவும் சண்டை போட்டார்களா? ஒருவேளை இது பற்றி பப்லுவிடம் மட்டும் சொல்லிவிட்டு சிம்புவிடம் சொல்லாமல் இருந்தார்களா? அல்லது இருவருக்குமே தெரிஞ்சுதான் இப்படி நடித்தார்களா? என்று இப்போது பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications