Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாந்தி வாந்தியா? கஸ்தூரி பேசக்கூடாது.. "பேட் கேர்ள்" குட்டி ப்ளூபிலிம்னு எப்படி தெரிஞ்சதாம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் எவ்வளவு நாளைக்குதான் பிராமண சமூகத்தை கிண்டல் செய்து படம் எடுத்துட்டு இருக்க போறீங்க? இப்படியே செய்து கொண்டிருந்தால், பிராமண சமுதாயத்தை கேட்க ஆள் இல்லை என்பதுபோல ஆகிவிடாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா. அத்துடன் நடிகை கஸ்தூரி பேட் கேர்ள் படத்தை விமர்சித்திருந்ததற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் Dinamalar சேனலுக்கு நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்று தந்திருந்தார்.. அதில், "பேட் கேர்ள் படத்தில் பிராமண சமூகம் காட்டப்படுகிறது.. அதிலும் ஜெயலலிதா மேடம் நெத்தியில் வெச்சிட்டு இருப்பாங்களே, அதுபோலவே நாமம் வெச்சிட்டு இருக்காங்க.. ஒரு நிமிட டிரெய்லரிலேயே இத்தனை குறியீடுகள் உள்ளன.

Television Bad girl Brahmin sanga

"அஞ்சரைக்குள்ள வண்டி", திரிஷா இல்லன்னா நயன்தாரா, இருட்டு அறையில் முரட்டு குத்து, இப்படி வெவ்வேறு காலகட்டங்களில் வயசுக்கோளாறு அல்லது பாலியல் இச்சைகளை வெளிச்சமிடும் படங்கள் நிறைய வந்துள்ளன. அப்படியிருக்கும்போது பேட்கேர்ள் படம் வயசு கோளாறை நியாயப்படுத்தக்கூடிய அலலது வயசு கோளாறை சித்தரிக்கக்கூடிய ஒரு அசட்டு பிசட்டு படம்..

அவுசாரி பெண் - வாந்தி வருது

10ம் கிளாஸ்ல படிக்கிறதுக்கு பதிலாக ஏதோ பசங்க பின்னாடி அலைற ஒரு அவுசேரி பெண்ணுடைய கதை. வாந்தி எடுக்கிற காட்சிதான் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. ஒரு பெண்ணின் வயசு கோளாறை படமாக எடுப்பதே தவறுதான்.. இந்த டிரெயிலரை பார்த்தால், குட்டி மினி ப்ளூபிலிம் மாதிரி இருக்கு.

பிராமண சமூகத்து குடும்பம்

ஆசாரியமான குடும்பத்தை சேர்ந்த பெண், அவுசாரியாக போவதுதான் கதை என்றால், சிறந்த பக்தி மிக்க குடும்பங்கள், சிறந்த ஒழுக்கமிக்க குடும்பங்கள், பிராமண சமூகத்தை தவிர வேறு எங்குமே இல்லை என்று படத்தின் டைரக்டர் நினைக்கிறாரா? அல்லது வெற்றிமாறன் நினைக்கிறாரா? ஒழுக்கமான குடும்பம் என்றால், பிராமண குடும்பத்தைதான் காட்டுவீங்களா? அப்படியென்றால், அது தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேருக்குமான ஒரு இழிவுதான்" என்றெல்லாம் ஆவேசத்துடன் கூறியிருந்தார் கஸ்தூரி.

இந்நிலையில், TNMedia Digital சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட் கேர்ள் படம் குறித்து பேசியிருக்கிறார்.. அப்போது அவரிடம் கஸ்தூரி பயன்படுத்தியிருந்த, குட்டி ப்ளூ பிலிம், அவுசாரி, அஞ்சரைக்குள்ள வண்டி என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சேகுவேரா சொன்னதாவது:

சாதியை அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது

"மேல் சாதியோ, கீழ் சாதியோ, குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. அவா, இவா என்று எல்லா தரப்பு மக்களுமே சொல்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.. கிடையாது, அவா, இவா என்று எல்லாருமே சொல்வதில்லை.. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சொல்கிறார்கள்..
பேட் கேர்ள் என்று படத்துக்கு பெயர் வைத்துவிட்டு, அந்த பெண் பேசும் மொழியை வைத்து அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது. எந்த காரணம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது,.

குட்டி ப்ளூ ஃபிலிம், அவுசாரி, வாந்தி வருது போன்ற வார்த்தையை கஸ்தூரி சொல்கிறார்கள் என்றால், அவரிடமிருந்து அந்த வார்த்தைகள்தான் வரும். முதல்ல கஸ்தூரியெல்லாம் இதை சொல்வதற்கு தகுதியே இலலை.. அல்வா காட்சியெல்லாம் நாம பார்த்தோமா இல்லையா?

கஸ்தூரிக்கெல்லாம் தகுதியே கிடையாது

நீங்களே அல்வா வாங்கிட்டு ஏமாறுவதுபோல நடிச்சிட்டு, இப்போ வந்து பேசக்கூடாது இல்லையா? அப்படியே பேசினாலும் திரைப்படத்தை நாகரீகமான வார்த்தைகளால் விமர்சிக்கவேண்டும். உடனே நடிகைகளுக்கு எதிரானவன் என்று என்னை சொல்கிறார்கள். பேட் கேர்ள் படம் பற்றி பேசும்போது, நடிப்பை மட்டுமே பேச வேண்டுமே தவிர, கஸ்தூரி கொச்சையாக பேசியிருக்ககூடாது

"பேட்கேர்ள்" படத்திலுள்ள சில வசனங்கள் ஏற்புடையதாக இல்லை.. அந்த டீசரை வெளியிடாமலும் இருந்திருக்கலாம். தற்குறித்தனமான வசனங்கள், இருக்கின்றன. ஏற்கனவே இங்கே பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் நடந்துகொண்டிருக்கும்போது, இதுபோன்ற படங்களை கொண்டுவந்தால், மேலும் பேரழிவை நோக்கி நாம போய்விடக்கூடாது என்பதை கருத்தியலாக சொல்கிறேன்..

குட்டி ப்ளூ பிலிம்

ஆனால், குட்டி ப்ளூ பிலிம் என்கிறாரே கஸ்தூரி.. இவங்களுக்கு எப்படி அது தெரிந்தது? இவங்க பார்த்தாங்களா? படத்தை பார்க்காமலேயே எப்படி சொல்லலாம்? படுக்கையறை காட்சியை காட்டினாலே ப்ளூ பிலிமா? அந்த அளவுக்கெல்லாம் கஸ்தூரி வார்த்தையை தூக்கி போட வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த பேட் கேர்ள் படம் வெளியே வராமல் இருந்தாலே நல்லது. அப்படியே வந்தாலும் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். இப்படியொரு படம் வந்துதான் மக்கள் மாறிட போறாங்களா? இதுபோன்ற படங்கள், விஷத்தை தூவுவதுதான்.. இந்த வளர்ந்த சமுதாயத்தில், இதுபோன்ற படங்களையெல்லாம் அடித்து நொறுக்கி புறந்தள்ளிவிடுவார்கள் மக்கள்..

எவ்வளவு காலத்துக்கு கிண்டல் அடிப்பீங்க

எனவே, சினிமாவை விமர்சனம் செய்ய கஸ்தூரிக்கு தகுதி கிடையாது. கருத்துரிமை இருக்கலாம்.. அதுக்காக போற போக்குல அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதேபோல, பேட்கேர்ள் படம் புரட்சிகரமான கருத்தை பேசட்டும், ஏன் சாதியை அடையாளப்படுத்தறீங்க?

இன்னும் எவ்வளவு நாள் இப்படியே செய்வீங்க? பார்த்திபன் ஏற்கனவே இப்படித்தான் மடிசார், கருப்பு கண்ணாடி அணிந்து குரூப் டான்ஸர்களை ஆடவிட்டு காட்சிகளை வைத்தார். எத்தனை நாளுக்கு இப்படி கேலி கிண்டல் செய்வீர்கள்?

தளபதி படத்தில், அவரை குறிப்பிட்ட சமூகமாக ஏன் காட்டணும்? அனுதாபமாகவே காட்டினாலும், சாதியை ஏன் காட்டறீங்க? "தேவர் மகன்" என்று இன்று டைட்டிலுடன் படம் எடுக்க முடியுமா? இப்படியே செய்து கொண்டிருந்தால், பிராமண சமுதாயத்தை கேட்க ஆள் இல்லை என்பதுபோல ஆகிவிடாதா?" என்றெல்லாம் காட்டமாக கேட்டுள்ளார் சேகுவேரா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+