கனகா “அவருக்காக” காத்திருக்கிறார்.. கமலுடன் நடிக்காதது இதனால்தான்.. பகீர் கிளப்பும் பயில்வான்
சென்னை: நடிகை கனகா பற்றி நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சில அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகள் பற்றி தொடர்ச்சியாக பேசி வரும் நிலையில் தற்போது கனகா குறித்தும் பேசியிருக்கிறார்.

அதில் அவர் எதனால் நடிகர் கமல்ஹாசனோடு நடிக்கவில்லை என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
சிரிச்சுக்கிட்டே இருப்பாரே மதன் பாபு.. மனைவி இந்த பிரபலம்? கடத்தல் திருமணம்.. மகள் செய்தது தெரியுமா?
அதுபோல நடிகை கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் அந்த பேட்டியில் பயில்வான் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை கனகா கரகாட்டக்காரன் திரைப்படத்தில் பலருடைய மனதையும் கவர்ந்தவர் தான். இவருடைய நடிப்பு மற்றும் கண் அசைவு பலருடைய ஃபேவரைட். அதிலும் அந்த மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கும் கனகா உடைய எக்ஸ்பிரஷன் 80ஸ் 90ஸ் கிட்ஸ் களின் மனதை பறித்து விட்டது.
புகழின் உச்சத்தில் இருந்த கனகா திடீரென்று சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதற்கு பிறகு வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்கும் நிலையில் அவரைப் பற்றிய எந்த விவரமும் வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரோடு நடித்த நடிகர்களும் அவரை திரையில் அறிமுகப்படுத்திய கங்கை அமரன் போன்ற இயக்குனருளும் கூட அவரிடம் பேச முயற்சி செய்தாலும் அவர் அதற்காக செவிசாய்க்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் மற்றும் பத்திரிக்கையாளராக இருக்கும் பயில்வான் ரங்கநாதன் நடிகை கனகா பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது கனகா தன்னுடைய முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் உடன் மட்டுமே நடிக்கவில்லை. அந்த நேரத்தில் முன்னிலையில் இருந்து பல நடிகர்களோடு நடிகை கனகா நடித்திருந்தார். ஆனால் கமலுடன் நடிக்காததற்கு காரணம் அவருடன் நடித்த காட்சியில் நடிக்க வேண்டும் என்பதுதான்.
கமலோடு நடிகை கனகா நடிக்காததற்கு காரணம் அவருடைய அம்மா எடுத்த முடிவு தான். அது தன்னுடைய மகளின் இமேஜை பாதித்துவிடும் என்று அவர் நினைத்ததால் கனகாவை நடிக்க வைக்கவில்லை என்று பயில்வான் கூறியிருக்கிறார். அதோடு கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க அழகாவுக்கு வாய்ப்பு வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். பிறகு கனகாவுக்கு காதல் ஏற்பட்டது அவர் யாரை காதலித்தார் என்பது இன்னமும் யாருக்கும் தெரியாத ரகசியம்.

ஆனால் தன்னுடைய காதலனுடன் சில காலம் ஒன்றாக வாழ்ந்து வந்தது மட்டும் அல்லாமல் காதலனுடன் வெளிநாட்டிற்கும் சென்றிருந்தார். பிறகு அங்கு அவர் கனகாவை பார்க்க வரவில்லை. அதனால் கனகா தனிமையில் இருந்தார். பிறகு கனகா அம்மா கட்டிய பங்களாவில் உதவியாளருடன் தங்கி இருந்தார். யார் இன்டர்வியூக்கு போனாலும் வெளிச்சத்திற்கு வரவும் பேசவும் தயாராக இல்லை என்று சொல்கிறார்கள்.
அதனால் கனகா மனநல பிரச்சனை உள்ளது போல இருக்கிறார். அதுபோல கனகா வீட்டில் சண்டை ஏற்பட்டதும் போலீஸ் வந்து பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் பழக்கம்தான். சமீபத்தில் கூட அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டில் தீப்பிடித்த போது வீட்டிற்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் கனகா கோபப்பட்டு திட்டி இருந்தார். அவர்களையும் வீட்டிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.
இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு தான் கனகாவுக்கு மனநல பிரச்சனை இருந்ததா? என்ற கேள்வி எழ தொடங்கியது. ஆனால் கனகா யாரையும் வீட்டிற்குள் வந்து பேசவிடாமல், சிகிச்சை எடுக்கவும் தயாராக இல்லாமல் இருக்கிறார். எப்போதுமே தனியாக இருப்பதையே அவர் விரும்புகிறார். காரணம் அவர் அவருடைய காதலனுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் அதற்கு பதிலாக இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
-
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications