பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் திடீர் மாற்றம்.. இனி நடக்க போவது இதுதானா? இது சூப்பர் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி பாக்யா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலின் பாக்கியா இப்போது புடவையில் மாடலாக மாறி இருக்கிறார். இந்த மாற்றத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி இப்போது நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடர்ந்து 5 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீரியலிலும் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.
கதையில் மாற்றம்
சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கதை ஒரே இடத்தில் பயணித்துக் கொண்டிருந்தது
கோபி பாக்யா வீட்டை வீட்டு கோபித்துக் கொண்டு கிளம்பி போவார், பிறகு அவர் இரண்டு வாரத்தில் மீண்டும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி பெட்டியை தூக்கி கொண்டு பாக்கியா வீட்டிற்கு வந்துவிடுவார். கோபியை தொடர்ந்து ராதிகாவும் பாக்கியா வீட்டிற்கு வருவார். இவர்களை தொடர்ந்து ஈஸ்வரியும் நான் கோபியோடு போறேன் என்று வீட்டை விட்டு கிளம்பி போவார். இப்படியாக பாக்யா வீட்டை விட்டு ஒருத்தர் கிளம்புவார் இன்னொருவர் வருவார் என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தார்கள். இது ரசிகர்களை கடுப்பாக்கி வைத்திருந்தது.
அதிகமான ட்ரோல்
இது குறித்து அதிகமான ட்ரோல்களும் எழுந்து வந்தது. இந்த நிலையில் இப்போது அதிரடியாக சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இனியாவுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இனியாவின் மாமனாரே பாக்கியாவிற்கு எதிரியாக வருகிறார். அதுபோல இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலித்து வந்தார். அதனால் அவர்களுக்கு தான் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரியான சுதாகரின் மகனுடன் திருமண நடந்திருக்கிறது.
எதிர்பாராத சம்பவம்
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாக்யாவின் இரண்டு ரெஸ்டாரண்டையும் சுதாகர் ஏமாற்றி வாங்கி இருக்கிறார். ஆனால் இப்போது பாக்கியா சரியான முடிவு எடுத்திருக்கிறார். அதாவது தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு உரிய பணத்தை தரும்படி சுதாகர் வாயாலேயே குடும்பத்தினரிடமும் சொல்ல வைத்து இருக்கிறார். சுதாகர் பாக்யாவிடம் ஒரு பேச்சு பேசுகிறார் ஆனால் வீட்டு குடும்பத்தினரிடம் வேறு மாதிரி பேசுகிறார்.
பாக்யா வைத்த செக்
இந்த நிலையில் பாக்கியா இப்போது சுதாகருக்கு செக் வைத்திருக்கிறார். இப்படியான நிலையில் பாக்யாவிற்கு இரண்டு ரெஸ்டாரண்டுகளும் இல்லை, அவருடன் வேலை பார்த்தவர்களுக்கு கை செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது பாக்கியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியா புடவையில் மார்டனாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
புதிய கெட்டப்
இதனால் பாக்கியா இனி புதியதாக என்ன பிசினஸ் செய்யப் போகிறார்? எப்படி வாழ்க்கையில் முன்னேற போகிறார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது சுசித்ரா வெளியிட்ட புகைப்படத்தில் அவர் தொழிலதிபர் போல இருக்கிறார் அதனால் பாக்கியா மீண்டும் புதியதாக ரெஸ்டாரண்ட் தொடங்க போகிறார் என்று தெரிகிறது.

பாக்கியா போஸ்ட்
அதே நேரத்தில் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு பெட்டியில் வைரத்தை வைத்தால் அது நகை பெட்டியாக மாறும், ஒரு பெட்டியில் ஒரு குச்சியை வைத்தால் அது குப்பை தொட்டியாக மாறும். நாம் எதை நம் தலையில் வைக்கிறோமோ அதுதான் நாம்" என்று கூறி இருக்கிறார்.
உங்கள் கருத்து
இது சுசித்ரா பலருக்கும் சொல்லும் பாடமாக இருக்கிறது. இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை உங்களுக்கு பிடிக்குமா? அல்லது இந்த சீரியலில் யாரை பிடிக்கும்? யாரை பிடிக்காது நண்பர்களே?
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications