சவுந்தர்யாம்மா.. கேளுங்க.. கருப்பு கண்ணம்மாவை பாரதி கல்யாணம் செய்துக்க போறானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல், கருப்பு சருமம் வெறுப்பு அல்ல என்று சொல்ல வரும் ஒரு விழிப்புணர்வு சீரியலாக இருக்கு.

பாரதி, அகிலன்னு பெரும் தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு ரெண்டு பிள்ளைகள்.அதில் அகிலன் கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலியை எங்கோ பார்த்துட்டு ஆசைப்படறான்.

சவுந்தர்யா அம்மாவுக்கும் அழகுதான் பிடிக்கும். அதுவும் கறுப்புன்னா வெறுப்பு. அஞ்சலி அழகா இருக்கவே பிள்ளையின் ஆசைக்கு சவுந்தர்யா அம்மா சம்மதிச்சுட்டாங்க.

பாரதியின் மேல்

பாரதியின் மேல்

அகிலனுக்கு பார்த்த அஞ்சலி பாரதி மேல் ஆசைப்படறா. இதுக்காக அவள் பல கீழ்த்தரமான வேலைகளை எல்லாம் செய்ய, பாரதி கடுப்பாகிறான். அவனுக்கு ஏனோ, கருப்பு கண்ணம்மாவை அப்பவே பிடிச்சுருது.

சவுந்தர்யா

சவுந்தர்யா

கண்ணாம்மாவை கண்டாலே சவுந்தர்யா அம்மாவுக்கு சுத்தமா பிடிக்காது. அதனால, கல்யாணத்துக்கு பிறகு அவ என் கண்ணுல படவே கூடாதுன்னு கண்டிஷன் போட்டுடறாங்க. கண்ணாம்மாவின் சித்தி பெண்தான் அஞ்சலி. கண்ணாம்மாவுக்கு சித்தி கொடுமை வேறு.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அஞ்சலியின் பாட்டி கண்ணம்மாவுக்கு கிராமத்தில் ஒரு பொறுக்கி மாப்பிள்ளை பார்த்து வச்சுட்டு, கண்ணம்மாவின் அப்பாகிட்ட ரொம்ப நல்ல பையன், 25 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன்னு பொய் சொல்லிகண்ணம்மாவின் அப்பாவை சம்மதிக்க வச்சுடறாங்க.

உண்மைகள்

உண்மைகள்

பாரதி வீட்டில் அஞ்சலி, அவங்க பாட்டி, அவ அம்மா, கணபதி எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கும்போது, கண்ணாம்மாவுக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை பத்தின உண்மையை சவுந்தர்யா அம்மாகிட்ட பேசறாங்க இதைக் கேட்ட பாரதிக்கு மனம் கொதிச்சு போகுது.உடனே கண்ணம்மாவின் அப்பாவுக்கு போன் செய்து பேசணும்னு சொல்றான்.

இப்படி பண்றீங்களே

இப்படி பண்றீங்களே

என்ன மாமா கண்ணம்மாவுக்கு கேடுகெட்ட ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து அவ வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களேன்னு சொல்லி எல்லா விவரத்தையும் சொல்றான். அவர் கூரைப் புடவை எடுத்தாச்சு மாப்பிள்ளை, தாலி வாங்கிட்டேன்னு சொல்லி அழுகிறார்.

நானே கண்ணம்மாவை

நானே கண்ணம்மாவை

மாமா...இனிமே யாரு அவளை கட்டிக்குவாங்கன்னு புலம்பாதீங்க.. உங்களுக்கு பிரச்சனை இல்லேன்னா நானே கண்ணாவை கட்டிக்கறேன் மாமான்னு பாரதி சொல்ல அதிர்ச்சி அடையறார் மாமா. மாப்பிள்ளை நெசமாத்தான் சொல்றீங்களான்னு கேட்க, நிஜமாத்தான் மாமான்னு சொல்றான் பாரதி.

எனக்கு ஒரு குறை

எனக்கு ஒரு குறை

மாமா என்னை பத்தின உண்மையையும் நான் சொல்லிடறேன்.. என்னால தாம்பத்திய வாழ்க்கையில ஈடுபட முடியும். ஆனா, ஒரு குழந்தையை கண்ணம்மாவுக்கு தர முடியாது மாமான்னும் சொல்றான்.

பிறகு

பிறகு

எனக்கு பிறகு கண்ணம்மா மேல இவ்ளோ அன்பு வச்சுருக்கற ஒருத்தர் உங்களைத்தான் மாப்பிள்ளை பார்க்கறேன். என் பொண்ணு நல்லாருக்கணும். நிம்மதியா இருக்கணும். குழந்தை பெத்துக்க முடியலேன்னா என்ன மாப்பிள்ளை இதை பத்தை பிறகு பார்த்துக்கலாம்னு சொல்றார் மாமா.

இங்க நம்ம ரெண்டு பேர் சம்மதம் முக்கியமில்லை மாமா.. கண்ணம்மாகிட்ட எண்ணெய் பத்தின உண்மையை சொல்லி சம்மதமான்னு கேளுங்கன்னு சொல்றான் அகிலன்.

குழந்தை பெத்துக்க டெஸ்ட் டியூப் பேபி எல்லாம் வந்தாச்சு.. இல்லே ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிட்டா போச்சு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+