Barathi kannamma serial: ஒரு நாளைக்கு மருந்து குடுத்தா குழந்தை உண்டாகாதா?
சென்னை: ஒருத்தன் மேல எத்தனை பொண்ணுங்கதாங்க ஆசைப்படறது? நாட்டில் ஆண்களுக்கு சரிவிகித அளவில் பெண்கள் இல்லைன்னு வேற சொல்றாங்க.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மேல பொண்டாட்டி கண்ணம்மாவோட தங்கச்சி ஆசைப்படறா.
அதுக்கு முன்னால படிக்கும்போதே ரெண்டு பொண்ணுங்க ஆசைப்படறாங்க. இப்போ கூட படிச்சப்போ ஆசைப்பட்ட அந்த பெண்ணில் ஒருத்தி விடாம துரத்திக்கிட்டு பாரதி வீட்டுக்கே வந்துட்டா.

பாரதி வெண்பா
பாரதியுடன் படிச்ச வெண்பா பாரதியை லவ் பண்றா. தன் லவ்வை சொல்லி அனுப்பிய தோழியை பாரதி லவ் பண்றதா சொல்ல, அதிர்ந்து போகிறாள் வெண்பா. உடனே அந்த தோழியை கொன்னுட முடிவு செய்து, ஆக்சிடென்ட் ஏற்பாடு செய்யறா.அதில் பாரதியும் மாட்டிக்க, பாரதி தன்னை விட்டுப் போகக் கூடாதுன்னு உனக்கு குழந்தை பிறக்காதுடான்னு சொல்லி.. .ஆனால், தாம்பத்தியம் வச்சுக்கலாம்னு சொல்றா.

கண்ணம்மா பாரதி
கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலியை தம்பி அகிலனுக்கு பொண்ணு பார்க்க போக, அஞ்சலிக்கு பாரதியை பிடிச்சுப்போகுது.அன்றிலிருந்து அக்கா கண்ணம்மாவின் வாழ்க்கையை குறிவச்சு காய் நகர்த்துகிறாள் அஞ்சலி.இந்த நேரத்தில் வென்பாவும் சேர்ந்துக்க கண்ணம்மாவை பழி வாங்கும் படலம் ஆரம்பமாகுது.

அகிலன் பாரதி
அகிலனுக்கும் அஞ்சலிக்கும் எப்போது முதலிரவு நடக்குதோ, அப்போதுதான் நமக்கும்னு கண்ணம்மா சொல்லிவிட, ரெண்டு பேருக்கும் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குது. பாரதி தனக்கு குழந்தை பிறக்காதுன்னு வெண்பா சொன்னது உண்மைதான்னு நம்பிகிட்டு இருக்கான்.ஆனால், வெண்பா சொன்னது பொய்.

மருந்து வெண்பா
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்க கூடாதுன்னு ஒரு மருந்தை டானிக் மாதிரி இருக்குது..அதை குடிக்க சொல்றா வெண்பா.நான் பாரதி மாமாகிட்டே கேட்டுட்டு குடிக்கறேன்னு கண்ணம்மா சொல்ல,அவன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு சொல்லுவான்.நீ குடிச்சுரு..அப்போதுதான் சீக்கிரம் குழந்தை உண்டாகும்ன்னு சொல்றா வெண்பா.
ஒரு நாள் அந்த மருந்தை குடிச்சா எப்போதும் குழந்தை பிறக்காதா?.இதுக்கு பதில் சொல்லுவாங்களா?












Click it and Unblock the Notifications