எனக்கு திருநெல்வேலிக்காரங்களை பார்த்தாலே பிடிக்காது! காரணம் இதுதான்! எழுத்தாளர் பவா செல்லதுரை பேச்சு
சென்னை: எழுத்தாளர், நடிகர், பிக் பாஸ் போட்டியாளர் என்ற பல திறமைகளை கொண்டிருக்கும் பவா செல்லதுரை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது எனக்கு திருநெல்வேலிக்காரர்களை பார்த்தாலே பிடிக்காது என்று பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு தனக்கு எதற்காக திருநெல்வேலிக்காரர்களை பிடிக்காது என்று பவா செல்லதுரை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் ஏழாவது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவா செல்லதுரை இரண்டாவது வாரத்தில் உடல்நிலை காரணமாக வெளியேறினார். இவர் சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், கதை சொல்லி, நடிகர் என்று பன்முக திறமை கொண்டவர். அது போல தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இருந்திருக்கிறார். திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய சொந்த ஊர் திருவண்ணாமலை தான்.

பவா செல்லத்துரை எழுதிய புத்தகங்கள்
அது மட்டுமில்லாமல் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, நீர் மற்றும் கோழி, எல்லா நாளும் கார்த்திகை உட்பட பல புத்தகங்களையும் இவர் வெளியிட்டு இருக்கிறார். ஜோக்கர், பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர் போன்ற திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, "எனக்கு திருநெல்வேலிக்காரர்களை பார்த்தாலே பிடிக்காது. ஏன்னா அவங்க கிட்ட நிறைய பெருமிதங்கள் இருப்பதாக சொல்லுவாங்க..."
பவா செல்லதுரை பேட்டி
"நான் திருநெல்வேலி காரர்களை பிடிக்காது என்று சொல்வது மாவட்ட பிரச்சனையால் சொல்லல்ல. எங்களிடம் தான் புதுமைப்பித்தான் இருந்தாரு, வண்ணதாசன் இருந்தாரு, கலாப்ரியா இருந்தாங்க என்று சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அப்போ நமக்கு ஆட்டோமேட்டிக்கா ஒரு கோபம் வரும். அப்போ எங்க கிட்ட ஒருத்தருமே இல்லையாடா? என்று கோபம் வரும். ஆனால் நாம இப்போ சொன்ன இவ்வளவு மாவட்டங்களுக்கும் சேர்த்து சமீபத்தில் இறந்து போன ராஜேந்திர சோழன் என்கிற ஒரே ஒரு எழுத்தாளனை இவங்க அவ்வளவு பேரும் முன்னாடி என்னால காட்ட முடியும்."
எழுத்தாளர் ராஜேந்திர சோழன்
தொடர்ந்து பவா செல்லத்துரை பேசும் போது, "ராஜேந்திர சோழன் பிரமாண்டமான எழுத்தாளர். இந்த புத்தக கண்காட்சியில் அவருடைய எட்டு கதைகள் என்கிற புத்தகம் தான் அதற்கு சாட்சி." இப்போ நான் வருவதற்கு முன்பு கூட ஒரு பிரபல பத்திரிக்கைக்கு ராஜேந்திர சோழன் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்துட்டு வந்திருக்கிறேன். ராஜேந்திர சோழன் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஆனால் அவருடைய எட்டு கதைகள் என்ற கட்டுரையில் தான் நான் சொன்ன 6, 7 மாவட்டத்தில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை, எட்டு கதைகளில் கொடுத்திருக்கிறார்.
40 வருட புத்தகம்
ஒரு பெரிய மாஸ்டரால் தான் அப்படி கதை கொடுக்க முடியும், அது ராஜேந்திர சோழனால் மட்டும்தான் முடியும். அந்த எட்டு கதைகளில் இவ்வளவு பெரிய மக்களின் வாழ்வு கதைகளை கொடுத்திருக்கிறார். அந்த கதைகள் எழுதப்பட்டு 40 வருடம் இருக்கலாம். அந்தக் கதைகளை இப்போது உள்ள தலைமுறைகளிடம் நீங்கள் படிக்க கொடுத்தால் நம்முடைய தாத்தா பாட்டிகள் எப்படி வாழ்ந்திருக்காங்க? அதற்கு முந்தைய நம்முடைய தலைமுறைகள் எப்படி வாழ்ந்து இருக்கிறது? நம்முடைய நிலப்பரப்பு எப்படி இருந்திருக்கிறது? என்ன மாதிரியான விவசாயம் நடந்திருக்கிறது? கிராமங்களில் எப்படி நம்முடைய விவசாயம் நடந்தது? என எல்லா விஷயமும் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த நிகழ்ச்சியில் பவா செல்லதுரை பேசி இருக்கிறார்.
விமர்சனங்கள்
பவா செல்லத்துரை பேசிய இந்த வீடியோ கிளிப்புகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அதற்கு முன்பு பவா செல்லத்துரை என்ன பேசினார் என்பது அந்த வீடியோவில் இல்லை. ஆனால் அவர் திருநெல்வேலிக்காரங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது என்று சொன்ன விஷயத்தை வைத்து இணையத்தில் பலரும் பவா செல்லத்துரையை விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications