வாணிஜெயராமின் அந்த "ஈவேரா" பள்ளி பாசம்.. அதைவிடுங்க, வாணி ஜெயராம் பற்றி பாலச்சந்தர் சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எஸ்பிபி அற்புதமான மனிதர், கர்வமே இல்லாதவர், அவருடன் நான் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானவை" என்று மறைந்த பின்னணி பாடகி வாணிஜெயராம் நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். வாணிஜெயராமின் இந்த பழைய பேட்டிதான், இணையத்தில் மீண்டும் ரவுண்டு கட்ட துவங்கியிருக்கிறது. இந்த வீடியோவை வாணிஜெயராமின் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

வேலுார் கொசப்பேட்டை நல்லெண்ண பட்டறை தெருவில், சிறு வயதில் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர் வாணி ஜெயராம். அந்த பகுதியில் உள்ள ஈவெரா அரசு பள்ளியில், கலைவாணி என்ற பெயருடன் படித்துள்ளார்..

television vani jairam kannadasan

படித்த பள்ளி: புகழின் உச்சிக்கு சென்றிருந்தபோதும்கூட, இந்த பள்ளியை வாணி ஜெயராம் கடைசிவரை மறக்கவே இல்லை.. கடந்த 2015-ம் ஆண்டு இந்த பள்ளிக்கு வந்து, பள்ளி வளாகத்தில் விளையாடிய இடங்கள், வகுப்பறையை பார்வையிட்டு, தன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்திருந்தார். அதுமட்டுமல்ல, தான் படித்த கிளாஸ்ரூமில் உள்ள கரும்பலகையிலும், பழைய நினைவுகளை எழுத்து வடிவில் பதிவு செய்தார்.. பிறகு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, ஆசிரியர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனாராம்.

இந்நிலையில், வாணிஜெயராம் சில வருடங்களுக்கு முன்பு ஜெயா டிவிக்கு, பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இசையமைப்பாளர் எம்எஸ்வி, எஸ்பிபி பற்றியெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.. அனைவரையுமே மனம்நிறைந்து பாராட்டி, வாணிஜெயராம் பேசியிருந்தார்.

வாணிஜெயராம்: அதில், "எம்ஜிஆர் சார் நடித்த பல படங்களில் நான் பாடியிருக்கிறேன்.. உழைத்து வாழ வேண்டும், ஊருக்கு உழைப்பவன், இன்றுபோல் என்றும் வாழ்க, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மீனவ நண்பன், சிரித்து வாழ வேண்டும் இப்படி பல படங்களில் பாடியிருக்கிறேன். என்னுடைய குரல் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மிகச்சிறந்த நடிகை மட்டுமல்ல, அற்புதமான நடனமணி.. டான்ஸ் பாலே ஒன்று வெளியிட்டிருந்தார்கள்.. அதில், எல்லா பாடல்களையும் நான்தான் பாடணும்னு சொன்னாங்க.. அதன்படியே, 10, 15 பாடல்களை, நான்தான் பாடி தந்தேன்..

பாட்டும் பரதமும் படத்தில் நல்லா டான்ஸ் ஆடியிருப்பாங்க.. மியூசிக் அகாடமியில் அவருடைய நடன நிகழ்ச்சி நடந்தது. நான் சென்று அதை பார்த்துவிட்டு, நேரடியாகவே அவருக்கு பாராட்டு சொன்னேன்.. ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

இளையராஜா: "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தில் நிறைய பாடலை நான் பாடியிருந்தேன்.. தனிமையில் யாரிவள், நானே நானா, என் கல்யாண வைபோகம், இப்படி நிறைய பாடல் அதில் பாடியிருக்கிறேன்.. இந்த படத்துக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எனக்கு கிடைத்தது.. இளையராஜா மிகவும் அருமையாக இசையமைத்திருந்தார்..

எஸ்பிபி ஒரு அற்புதமான பாடகர். அருமையான குரல் வளம்.. ஒரு பாட்டை சொல்லி தந்தால், நானும், எஸ்பிபியும் உடனே கிரகிக்கக்கூடியவர்கள்.. அவருடன் தமிழ், கன்னட படங்களில் இணைந்து பாடியிருக்கிறேன். இதில் கன்னடத்தில் அதிக படங்களில் பாடியிருக்கிறோம்.. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலையில் முதல் ஃபிளைட்டில் பெங்களூர் கிளம்பி சென்று, அன்று இரவு 9.50 கடைசி பிளைட்டில் சென்னை திரும்புவோம்.

டிராக்குகள்: பெங்களூரில் 3 ஸ்டுடியோக்கள் இருக்கும். ஒவ்வொரு ஸ்டுடியோக்களுக்கும் சென்று, ஸோலோ பாடல்கள், டூயட், என 15, 20 பாடல்களை பாடிவிட்டு வருவோம். நாங்கள் பாடும் பாடல்களுக்கான டிராக்குகளை ரெடியா எடுத்து வெச்சிருப்பாங்க..
எஸ்பிபியுடன் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.. பழகுறதுக்கு மிகவும் எளிமையானவர்.. கர்வமே இல்லாதவர் எஸ்பிபி.

அபூர்வ ராகங்கள் படத்தில் நான் பாடிய "ஏழு ஸ்வரங்களுக்குள்" பாடல், கண்ணதாசனுக்கும் பிடிக்கும், பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்தமானது.. அது ஒரு சரித்திரம் படைத்த பாடல் என்பார்.. எங்கே இந்த பாட்டு கேட்டாலும், அங்கேயே நின்று முழுசா கேட்டுவிட்டுதான் போவாராம் பாலச்சந்தர்.

2 ஹீரோயின்கள்: எனக்கு பாரதியார் விருது வழங்கி, பாலச்சந்தர் ஒருமுறை மேடையில் பாராட்டி பேசியிருந்தார். அப்போது "அபூர்வ ராகங்கள் படத்தை பொறுத்தவரை 2 ஹீரோயின்கள்.. ஒருவர் ஸ்ரீவித்யா, இன்னொருத்தர் வாணி ஜெயராம். இவர்கள் 2 பேரும் இல்லாமல், அந்த படத்தை என்னால் நினைச்சுக்கூட பார்க்க முடியாது' என்று பாலச்சந்தர் சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது என்றெல்லாம் நெகிழ்ந்து அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் வாணிஜெயராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+