அடடா... தேள் கொட்டியும் தடவுங்க.. தடவுங்கன்னு ரொமான்ஸ் அருவியா கொட்டுதே...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமியை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தது, மகாலட்சுமியின் ஓரகத்திக்கு பிடிக்கலை.
கொழுந்தன் ரவி மேல ஆசைப்படற பொண்ணுக்கும் பாக்கியலட்சுமியை பிடிக்கலை. ஸோ, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துக்கறாங்க. எப்படியாவது பாக்கிய லட்சுமியை வீட்டை விட்டு வெளியேத்தணும்னு ரெண்டு பேரும் பாடுபடறாங்க.
யார் யாரோ எதுக்கெல்லாமோ பாடுகள் படும்போது, இவங்க ரெண்டு பேரும் எதுக்காக பாடு படறாங்க பாருங்க. உண்மைதான்.. குடும்பத்துல இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்யறாங்க.

தேள்
பாக்கியலட்சுமி படுக்கையில தேள் விட்டுடு.. அவளை தேள் கொட்டட்டும்னு ரவி மேல ஆசைப்படற பொண்ணு, ரவியோட சின்ன அண்ணிக்கு சொல்லித் தர்றா.. தேளையும் அவளே அனுப்பி வைக்கறா.

கொட்டிடுது
பாக்கியலட்சுமி ரூமில் அவளுடன் பேசிக்கிட்டு இருந்த ரவி, போனை மறந்து அங்கேயே வச்சுட்டு வந்துடறான். எடுக்கலாம்னு போக, இவனை அந்த தேள் கொட்டிடுது. பாக்கியலட்சுமி அவன் கைக்கு மேல் விஷம் ஏறாமல் இருக்க, மணிக்கட்டில் ஒரு கட்டு போட்டுவிட்டு,தேளை அடிச்சுட்டு பதறிப் போய் வெங்காயத்தாள் எடுத்துட்டு வர ஓடறா..

ஊசி
அதுக்குள்ளே ரவியின் சின்ன அண்ணி, அண்ணன் ரெண்டு பேரும் டாக்டருங்க வேறயா.. அதனால ஊசி போட்டு குணப்படுத்திடறாங்க. இவன் மொட்டை மாடி மேல போய் வலியில்லாமதான் நிக்கறான். பாக்கிய லட்சுமியைப் பார்த்ததும் ஐயோ..ஐயோன்னு வலியில் துடிப்பவன் போல நடிக்கறான்.

தேய்க்கறேன்..
கொஞ்சம் பொறுத்துக்கோங்க ரவி.. தேள் கடிச்ச இடத்துல வெங்காயத்தாள் போட்டு தேய்ச்சா விஷம் போயிருமாம்.. வலியும் கொஞ்சம் கொஞ்சமா நிக்குமாம் இது எங்க தாத்தா சொன்னதுன்னு சொல்லி தேய்ச்சு விடறா. தடவிவிட்டு ஊதியும் விடறா..

நீங்க போயி தூங்குங்க
சரியாகிரும்ங்க.. நீங்க போயி தூங்குங்கன்னு சொல்றா.. தூங்கறதா.. வலிக்குதுங்க.. அப்படியே தடவிகிட்டு இருங்க.. வலி நிக்கும்னு இவன் சொல்ல, அப்படியா.. இதை என் தாத்தா சொல்லவே இல்லையேன்னு சொல்லிட்டு மெதுவா.. இதமா.. பக்குவமா தடவி விட்டு ஊதியும் விடறா பாக்கியலட்சுமி. இவன் அவளை ரொமான்ஸா பார்த்துகிட்டே இவளை இப்படியே இரவு முழுக்க பக்கத்துல இருக்கவிடணுமேன்னு நினைக்கறான்.

விடிய
உங்களுக்கு தெரியாதா.. விஷக்கடி பட்டவங்க ராத்திரி தூங்க கூடாதுங்க.. தூங்கினா தலைக்கு விஷம் ஏறிடும் லட்சுமி.. இந்த நேரத்துல அண்ணிக்கும் உடம்பு சரியில்லை. அவங்களையும் தொந்திரவு பண்ண முடியாது.. நான் மட்டும் தனியா எப்படி முழிச்சு இருப்பேன்னு சொல்றான். சரி உங்களுக்கு நான் கம்பெனி தர்ரேன்ன்னு சொல்றா பாக்கியலட்சுமி.

பாட்டு
தூங்காம இருக்க ஒரு ஐடியா பண்ணலாம்னு சொல்லும்போது பாட்டுக்கு பாட்டு, அதாவது அந்தாக்ஷரி ரவுண்டு விளையாடலாம்னு முடிவெடுக்கறாங்க. காதல் பாட்டா பாடறான் ரவி. அதை முறியடிக்கும் பாட்டா பாடறா பாக்கியலட்சுமி. இப்படியாக போய்க்கொண்டு இருந்த நேரத்தில் மிக நெருக்கமாக ஒரு காதல் டூயட்டே கற்பனையில் பாடி விடுகிறான் ரவி

குருவிக்கூடு
இடைப்பட்ட நேரத்துல வீணான ஒயரில் தூக்கணாங் குருவிக்கூடு ஒண்ணு செய்து தர்ரான். அதுக்குள் இரண்டு குருவிகளை வச்சு பரிசை தர்றான் ரவி. பாக்கியலட்சுமி ரவி ரொமான்ஸ் உண்மை போலவே இருக்குதுங்க.. நடிப்பா தெரியலை.. ரசிக்கலாம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications