சோகத்தின் உச்சத்தில் பாக்கியராஜ்.. நடிகை பூர்ணிமா செய்த செயல்.. இதற்கெல்லாம் தனி துணிச்சல் வேணும்
சென்னை: நடிகராகவும் இயக்குனராகவும் பலருக்கும் பரிட்சயமான பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமானது.
நடிகர் பாக்கியராஜ் முதல் மனைவி இறப்பினால் சோகத்தில் இருந்த நேரத்தில் அதற்கு மருந்தாக பூர்ணிமா செய்த செயல் இருந்திருக்கிறது.

அந்த வகையில் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா காதல் எப்படி ஏற்பட்டது. அவர்களுடைய திருமணம் எதனால் முடிவடைந்தது என்பது பற்றிய கதையை விரிவாக பார்க்கலாம்.
நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பாக்யராஜுக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. ஆனாலும் இவர் இயக்குனராக உச்சத்தில் இருந்தபோது ஒரு நாள் அவரிடம் வாய்ப்பு கேட்பதற்காக பூர்ணிமா வந்திருக்கிறார். அப்போது பூர்ணிமா பாக்யராஜ் இடம் ஒரு இயக்குனர் என்ற முறையில் இங்கிலீஷில் பேசிகொண்டே இருந்திருக்கிறார்.
அதற்கு நடிகர் பாக்கியராஜ் ஓகே சி யூ என்று இரண்டே வார்த்தையில் முடித்துவிட்டு போய்விட்டாராம். இதனால் பாக்கியராஜ் ரொம்பவும் திமிர் பிடித்த ஆள் போல என்று பூர்ணிமா நினைத்திருக்கிறார். அதற்குப் பிறகு பாக்யராஜை பற்றி பூர்ணிமாவும் மறந்து விட்டாராம். அந்த நிலையில்தான் டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்திற்காக கதாநாயகியை பாக்யராஜ் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் பூர்ணிமாவின் நினைவு பாக்யராஜிற்கு வந்திருக்கிறது. இந்த கேரக்டருக்கு பூர்ணிமா சரியாக இருப்பார் என்று பூர்ணிமாவை வரச் சொல்லி அவரிடம் கதை சொல்லி இருக்கிறார். அப்போதுதான் நீங்கள் ஏன் முதலாக முறையை நான் உங்களை சந்திக்கும் போது அப்படி நடந்து கொண்டீர்கள் என்று பூர்ணிமா கேட்க, அதற்கு பாக்கியராஜ் நீங்கள் பேசிய ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. அதனால் தான் உங்களை அங்கிருந்து கிளப்புவதற்காக அப்படி சொன்னேன் என்று பாக்கியராஜ் சொல்ல பூர்ணிமாவும் சிரித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற படம் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த திரைப்படத்தின் போது கூட பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா இடையே இயக்குனர் நடிகை என்ற உறவு தான் இருந்திருக்கிறது. அப்போது பிரவீனா உயிரோடு இருந்திருக்கிறார். அதுபோல பூர்ணிமா பாக்யராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து இருக்கிறாராம். பிரவீனா மற்றும் பூர்ணிமா இடையே நல்ல நட்பும் இருந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பாக்யராஜ் மற்றும் பிரவீனாவின் திருமண நாளும் பூர்ணிமாவின் பிறந்த நாளும் ஒன்றுதானாம். அந்த நேரத்தில் தான் திடீரென பிரவீனா உடல்நிலை குறைவு காரணமாக காலமாகி இருக்கிறார். அதனால் பாக்கியராஜ் மிகவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் தன்னுடைய மன நிம்மதிக்காக பாக்கியராஜ் கோவா போயிருந்தாராம். அப்போது பாக்யராஜின் வீட்டில் அவருடைய அண்ணன் பாக்யராஜை அடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருந்திருக்கிறார்.

ஆனால் பாக்கியராஜ் பிரவீனாவை மறக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கை பாதை மாறி போய்விடக்கூடாது என்று பயந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் தான் மீண்டும் பூர்ணிமாவை சந்தித்த பாக்யராஜுக்கு அவருடைய எளிமை பிடித்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பாக்கியராஜ் அவரிடம் அதை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து இருக்கிறார்.
அப்போது பூர்ணிமா அடுத்த நாள் நான் பாரிஸூக்கு ஒரு பட பிடிப்புக்காக போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு பாக்கியராஜ் சரி நீங்க அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். சரி என்று கிளம்பிய பூர்ணிமா அடுத்த நாள் பாரிஸிலிருந்து பாக்கியராஜ்க்கு போன் செய்திருக்கிறார். அப்போது பாக்யராஜ் போன் எடுக்கவில்லையாம். அவருடைய உதவியாளர் தான் போன் எடுத்து இருக்கிறேன். அவர் என்ன நினைச்சி இருக்கிறார் என்றால் ஏதோ ஒரு ரசிகையாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
பிறகு தான் பாக்கியராஜிடம் போன் வந்தது பற்றி சொல்ல பாக்கியராஜ் அவரை திட்டி விட்டு போன் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். அடுத்த நாள் பூர்ணிமா போன் செய்ததும் பாக்யராஜ் பேசி இருக்கிறார். அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது தான் பூர்ணிமாவிடம் தன்னுடைய காதலை பாக்கியராஜ் கூறினாராம். அதற்கு பூர்ணிமா தன்னுடைய அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம். அதைத் தொடர்ந்து பாக்கியராஜ் பூர்ணிமாவின் குடும்பத்திடம் பேசி அனைவருடைய சம்மதத்தையும் பெற்று திருமணம் முடித்து இருக்கிறார்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications