நடிகைகள் பற்றி ராதிகா சொன்ன கருத்து..கோபத்தில் பாக்கியராஜ்... இப்படி எல்லாம் இல்லை.. மேடையிலே ஆவேசம்
சென்னை: பிரபல இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ராதிகா நடிகைகள் குறித்து பேசும்போது நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதைக்கேட்டு கோபமான பாக்கியராஜ் அப்படியெல்லாம் இல்லைங்க என்று பல உதாரணங்களையும் கூறியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கின்றனர். அதில் நடிகர் பாக்யராஜும் ஒருவர் இவர் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர் தான். ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் சில காலத்திற்கு பிறகு தனியாக படம் எடுக்க துவங்கினார்.

பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதுபோல பாக்கியராஜ் இயக்கிய பல திரைப்படங்கள் அதிகபட்சமாக குடும்ப திரைப்படங்களாக தான் இருந்திருக்கிறது. குடும்ப சூழலில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறும் படங்களாகவே அவை பெரும்பாலும் இருந்திருக்கிறது. அதனாலேயே அதிகமான ரசிகர்களுக்கு பாக்கியராஜ் திரைப்படங்கள் பிடித்திருக்கிறது.
அதிலும் தாவணி கனவுகள், இது நம்ம ஆளு, முந்தானை முடிச்சு போன்ற பல திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கும் இயக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்து திரைப்படங்களாக இருக்கிறது. அதனால்தான் அந்த காலகட்டத்தில் நடிகர் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக இவருடைய வீட்டில் அத்தனை பேர் காவல் காத்திருப்பார்களாம். இவரை பார்ப்பதற்காகவும் இவரிடம் வாய்ப்புக்காகவும் வேண்டி பலர் இரண்டு மூன்று தெரு வரைக்கும் நின்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் இவர் அதிகமான திரைப்படங்கள் இயக்குவதில்லை. அதுபோல சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் youtube சேனல் ஆரம்பித்து பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். கடைசியாக இவருடைய youtube சேனலில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினியை பேட்டி எடுத்திருந்தார். அவர் பாக்கியராஜ் உடன் "தாவணி கனவுகள்" திரைப்படத்தில் நடித்த அனுபவங்களையும் பற்றி பேசி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியராஜ் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டிருந்தார். ராதிகா அங்கு பேசுகையில் சலுகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதாக மரியாதை இல்லை என்பது போல பேசி இருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த பாக்கியராஜ் கூறும்போது தமிழ் சினிமாவில் இருந்து வந்து முதலமைச்சரானவர் தான் ஜெயலலிதா. அதுபோல சினிமா ரசிகர்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டி உள்ளனர். நடிகை ரோஜாவும் கூட தற்சமயம் அரசியலில் நல்ல இடத்தில் இருக்கிறார். எனவே தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை என்று கூறாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications