பாக்கியராஜின் மருமகள் தொடங்கிய புது பிசினஸ்..வந்து குவிந்த பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பாக்யராஜின் மகன் சாந்தனு மற்றும் அவருடைய மனைவி கிகி என்று அழைக்கப்படும் கீர்த்தியும் சேர்ந்து டான்ஸ் ஸ்டுடியோ ஒன்று தொடங்கி இருக்கின்றனர். அந்த பங்க்ஷனில் அதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படம் இப்போது அதிகமாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் திறமைகள் இருந்தும் ஜொலிக்க முடியாமல் இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் சாந்தனு. இவருடைய தந்தை பாக்கியராஜ் பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் ஹிட் அடித்து இருக்கிறார். பல இயக்குனர்களின் முன்மாதிரியாகவும், குருவாகவும் இருக்கும் பாக்கியராஜ் இப்போது அதிகமாக திரைப்படங்களில் நடிக்க மட்டும் செய்கிறார். அதுபோல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு இருக்கிறார்.

பாக்யராஜ் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி பூர்ணிமாவும் நடிகை தான். கதாநாயகியாக தொடங்கி இப்போது வெள்ளித்திரை சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய ஒரே மகன் சாந்தனு திறமை, அழகு, நடிப்பு என்று எல்லாம் இருந்தும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காமல் இருக்கிறது. வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் சாந்தனு சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. இந்த நிலையில் இது போன்ற திரைப்படங்களிலேயே இவர் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் சில வருடங்களுக்கு முன்பே தொகுப்பாளர் கி.கி. என்று அழைக்கப்படும் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2015 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணமானாலும் இன்னுமும் குழந்தை பிறக்கவில்லையே என்று சிலர் இவர்களிடம் கேள்வி கேட்க இதனால் கீர்த்தி கோபமடைந்திருந்தார். குழந்தை பெற்றுக் கொள்வது சம்பந்தப்பட்ட கணவன் மற்றும் மனைவி எடுக்கும் முடிவுதான் என்பது பலர் புரிந்து கொள்ளாமல் வெளியே செல்லும் இடத்தில் எல்லாம் தம்பதிகளை நச்சரித்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கீர்த்தி பதிலடி கொடுத்திருந்தார்.

சாந்தனுவோடு ஏற்காட்டில் ஹாலிவுட்டின் "மஞ்சும்மல் பாய்ஸ்".. யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
இந்த நிலையில் தான் கீர்த்தி மற்றும் நடிகர் சாந்தனு இருவரும் இணைந்து kikisdance studioவின் இரண்டாவது கிளை ஆரம்பித்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்டுடியோ திறப்பு விழாவிற்கு வருகை தந்த சுகாசினி, பரத், ஐஸ்வர்யா போன்றோர் ஸ்டுடியோவை திறந்து வைத்திருக்கின்றனர்.

அதுபோல இந்த விழாவில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையை சார்ந்த பலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருக்கின்றார்கள். அந்த புகைப்படங்களை கீர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications