கத்துக்கிட்ட எல்லாமே மறந்த கண்ணழகி நடிகை பானுப்ரியா? கணவரை இழந்து தவித்த வெற்றிட வாழ்வு: பிரபலம்
சென்னை: குடும்பத்தில் துணை இல்லாதபோது, வாழ்க்கையே வெற்றிடமாக உள்ள நிலையில், அனைவருக்குமே ஒருவித மன உளைச்சல் இருக்கவே செய்யும்.. அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும், அவரால் முழுமையாக அந்த வெறுமையிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது மனரீதியாகவும் பாதிப்பை பானுப்ரியாவுக்கு தந்துவிட்டது..இப்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டார் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
அதில், நேரம் தவறாமை, காலம் தவறாமை போன்றவற்றில் நல்ல பெயரை பெற்றவர் பானுப்பிரியா.. சொந்த படம், ரியல் எஸ்டேட், தம்பியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து, மொத்த சொத்துக்களும் போய்விட்டது. கடைசியில் நினைவாற்றலும் போய்விட்டது. இதனால் டயலாக் பேச முடியாமல் அவமானப்பட்டுள்ளார்..

நினைவுகளை மறந்த பானுப்பிரியா
"இந்தம்மாகூட ஏன் எங்களை நடிக்க வெக்கறீங்க? ஒன்னு அவங்களை மாத்துங்க, அல்லது எங்களை மாத்துங்க" என்று சூட்டிங்கில் இருந்தவர்கள் சொல்ல, பானுப்பிரியா அதைக்கேட்டு கண்ணீரோடு வெளியேறினார்.
அன்றைய காலங்களில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வந்து, இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறார் பானுப்பிரியா.. சினிமாவில் எத்தனையோ நடிகைகள் பாவம்.. நடிகைகள் சாவித்திரி பாவம், சில்க் பாவம், ஷோபா பாவம், பானுப்பிரியாவும் பாவம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "200 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தவர் பானுப்ரியா.. அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டானது.. சத்யராஜூடன் பானுப்ரியாவுக்கான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.. பிரம்மா, தெற்கு தெரு மச்சான் உள்ளிட்ட படங்களில் நல்ல காம்பினேஷன்..
ஓரம் கட்டப்பட்ட நடிகை
விஜயகாந்த், பாக்யராஜூடன் பானுப்ரியா நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் கேரக்டரில் நடித்திருந்தார்.. பானுப்பிரியா நல்ல டான்சர்.. சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்.. பிறகு புது புது ஹீரோயின்கள் வரவால், மெல்ல ஓரம் கட்டப்பட்டார் பானுப்ரியா.. அந்த நேரத்தில் டிவி சீரியல்களில் நடிக்க துவங்கினார்..
பிறகு படங்களை எடுத்தார்.. அந்தவகையில், பானுப்பிரியா சம்பாதித்த பணத்தை எல்லாம், அவரது சகோதரர், சகோதரியிடமும் இருந்திருக்கும். பிறகு பானுப்பிரியா திருமணமாகி அமெரிக்காவுக்கு கணவருடன் செட்டிலாகிவிட்டார்..
ஆனால், திடீரென கணவர் மாரடைப்பால் உயிரிழந்தது, பானுப்ரியாவை உலுக்கி போட்டுவிட்டது,. ஒருகாலத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த நடிகை பானுப்பிரியா.. காலை முதல் இரவு வரை ஓயாமல் நடித்து வந்த நிலையில், கணவரும் இறந்துவிட்டபோது, இனம்புரியாத வெறுமை, தனிமைக்குள் தள்ளப்பட்டார் பானுப்ரியா.
மன உளைச்சல் - பானுப்ரியா
குடும்பத்தில் துணை இல்லாதபோது, வாழ்க்கையே வெற்றிடமாக உள்ள நிலையில், அனைவருக்குமே ஒருவித மன உளைச்சல் இருக்கவே செய்யும்..
அவ்வப்போது வந்து ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும், அவரால் முழுமையாக அந்த வெறுமையிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது மனரீதியாகவும் பாதிப்பை பானுப்ரியாவுக்கு தந்துவிட்டது.. இப்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டார்.
ஆனால், தன்னுடன் நடித்த நடிகர்கள் இன்று வேறு மாதிரியாக நடிக்க துவங்கிவிட்டார்கள்.. பிரபு, சத்யராஜ் போன்றோர் அப்பா கேரக்டர்களில் நடிக்க சென்றுவிட்டனர்.. அந்த தலைமுறை நடிகர், நடிகைகள் முடிந்து, இன்றைய தலைமுறை வந்துவிட்டனர்.. இன்றுள்ள நடிகர், நடிகைகளுக்கு பானுப்ரியாவின் சாதனை பற்றி தெரிய வாய்ப்பில்லை..
சொத்துக்கள் - பானுப்ரியா
எனவே, இனியாவது பானுப்ரியாவுக்கு அம்மா, அக்கா கேரக்டர்களில் வாய்ப்பு தந்து நடிக்க வைக்கலாம்.. படங்கள் வாய்ப்பு அவருக்கு அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டாலே, மீண்டும் பழையபடி உற்சாகமாகிவிடுவார்.
பானுப்பிரியாவுக்கு பணப்பிரச்சனை இல்லை, சொத்துக்களும் இருக்கவே செய்கின்றன.. .. எனவே சம்பள விஷயத்திலும் கறார் காட்ட மாட்டார், அதிகம் சம்பளம் எதிர்பார்க்க மாட்டார்.. வீட்டிலிருக்கும் வெறுமையிலிருந்து வெளியே வர, படவாய்ப்புகள் கிடைத்தாலே அவருக்கு போதும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications