கோடிகளில் பிசினஸில் லாபம் பார்த்த நடிகை! கடைசியில் சின்ன ரூமில் தஞ்சமடைந்த சோகம்.. கிரேட் பானுப்ரியா
சென்னை: 80-களின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை பானுப்பிரியா. கோடிக்கணக்கில் பணத்தை பார்த்த இந்த நடிகை, துரோகத்தால் துவண்டு, தன்னுடைய வீடு, வாசல் போன்றவற்றை இழந்து நடுத்தெருவுக்கு வந்த நிகழ்வும் உண்டு.. எனினும் பானுப்ரியாவுக்கு மீண்டும் இந்த திரையுலகம் வாய்ப்பு தர வேண்டும் என்பதே பலரது விருப்பமாக எழுந்துள்ளது.
கண்ணழகி நடிகை பானுப்ரியா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியவர்.. பெரும்பாலான இவருடைய படங்களில் நடனமாடும் கேரக்டராக அமைந்தன... அப்படி படங்கள் அமையாவிட்டாலும்கூட, வானமே எல்லை படம் போன்று, இவரது நடனத்துக்காகவே பாடல் பிரத்யேகமாக வைக்கப்படுவதுண்டு.

பானுப்ரியா - பங்க்சுவாலிட்டி
பானுப்பிரியா என்றாலே பங்க்சுவாலிட்டி என்பார்களாம். அதாவது ஷூட்டிங்கிற்கு நேரம் தவறாமல் வந்துவிடக்கூடிய நடிகை.. அந்தவகையில் அனைத்து படக்குழுவினரிடமுமே நல்ல பெயரை பெற்றவர்..
நடிகர் கார்த்திக்கை வைத்து வேலை வாங்குவது என்பதே அப்போது சில தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும் குதிரை கொம்பான விஷயமாக இருந்ததாம்.
ஒருமுறை கார்த்திக்குடன் பானுப்பிரியா சேர்ந்து படமொன்றில் நடித்து கொண்டிருந்தார்.. 2 நாள் தொடர்ந்து கார்த்திக் ஷூட்டிங் வருவதே பெரிய விஷயமாக இருந்துள்ளது.
அந்நேரத்தில் அந்த படம் முடியும்வரை இழுத்துக் கொண்டு வந்ததே பானுப்பிரியாதானாம்.. "எந்த சீன் என்றாலும், பாடல் காட்சிகளாக இருந்தாலும், ஆட வேண்டாம், நடிக்க வேண்டாம், எந்த வேலையும் செய்ய வேண்டாம், அமைதியாக வந்து ஷூட்டிங்கில் உட்கார்ந்திருந்தாலே போதும்" என்று கார்த்திக்கிடம் சொன்னாராம் பானுப்பிரியா.
ஏனென்றால், எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் ஆகிவிடக்கூடாது என்று நினைப்பவர் பானுப்பிரியா.. அந்தவகையில் தான் நடிக்கும் படங்களில் எப்போதுமே சின்சியராகவே இருப்பாராம்.
லாபத்தில் பிசினஸ்
பானுப்ரியா முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தில் இருந்த போதே, 1998ம் ஆண்டு ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005ல் விவாகரத்து பெற்று அமெரிக்காவில் இருந்து மீண்டும் சென்னைக்கே தன்னுடைய மகளுடன் வந்து செட்டில் ஆனார். கணவருடன் விவாகரத்துக்கு பிறகு மன உளைச்சலும் பானுப்பிரியாவுக்கு ஏற்பட்டது.
படங்களில் நடித்து ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்தும், அதை ரியல் எஸ்டேட், சொந்த படம் என்று இழந்தார்.. சகோதரரை வைத்து படங்களை எடுத்து, மொத்த சொத்துக்களையும் இழந்தார்.. சொந்த சகோதரர்கள் பானுப்பிரியாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வலம் வந்தன..
கோடிகளில் சம்பாதித்து - ஒரு அறையில் வாழ்ந்து..
இதனால் சொந்த வீடு வாசல் இல்லாமல் போய், நடுத்தெருவுக்கு வரு நிலைமை ஏற்பட்டதாம்.. அப்போதுதான் ஏவிஎம்மில் நடிக்க பானுப்பிரியாவுக்கு அழைப்பு வந்துள்ளது .. வாரம் ஒருமுறைதான் சம்பளம்.. வீடில்லாமல் இருந்த பானுப்பிரியாவை ஓட்டலில் தங்க வைக்க ஏவிஎம் முடிவு செய்தது. ஆனால், எத்தனை நாளைக்கு ஓட்டலுக்கு பில் தர முடியும்? பிறகுதான் ஏவிஎம்மிலேயே ஒரு ரூம் தந்து பானுப்பிரியாவை தங்க வைத்தனர்.
ஒரு காலத்தில் பெரிய பங்களாக்களிலும், ஸ்டார் ஓட்டல்களிலும் இருந்த நடிகை, ஒரு பெரும் ஸ்டுடியோவில் உள்ள ஒரு சின்ன அறையில் தனது வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் இது அவருக்கு மன நிம்மதி அளித்திருக்கிறது.
அவமானத்தில் பானுப்பிரியா
5 வருடங்கள் கழித்து பிரிந்து போன கணவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.. இதனால் கூடுதல் மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.. இறுதியில் பானுப்பிரியாவுக்கு நினைவாற்றலும் மெல்ல போய்விட்டதாக அடுத்த அதிர்ச்சி சோஷியல் மீடியாவில் பரவியது.. ஒருகாலத்தில் பக்கம் பக்கமாக டயலாக் பேசிய பானுப்பிரியா, ஒரு டயலாக்கை கூட சரியாக பேச முடியாமல் படப்பிடிப்பில் அவமானப்பட்டுள்ளார்..
"இந்தம்மாகூட ஏன் எங்களை நடிக்க வெக்கறீங்க? ஒன்னு அவங்களை மாத்துங்க, அல்லது எங்களை மாத்துங்க" என்று சூட்டிங்கில் இருந்தவர்கள் சொல்ல, பானுப்பிரியா அதைக்கேட்டு கண்ணீரோடு வெளியேறினாராம்.
ஒதுக்கப்பட்ட பானுப்ரியா
பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா, ஒரு பேட்டியில் கூறும்போது, சினிமா துறையினர் மற்றும் உடன் நடித்த சக நடிகைகள் பானுப்ரியாவை ஒதுக்குகிறார்கள், குறிப்பாக, 80-களின் பிரபலங்கள் கலந்துகொள்ளும் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் கூட என் அக்காவை யாரும் அழைக்கவில்லை என்று வேதனையுடன் கூறியிருந்தார்.
அன்றைய காலங்களில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வந்து, பிறகு அனைத்தையும், இன்று ஓரளவு வசதியுடன் பானுப்பிரியா வாழ்ந்து வருவது ஆறுதலான விஷயம்.. அதேபோல ஞாபக மறதி பிரச்சனையிலிருந்தும் மெல்ல மீண்டு வந்துள்ளதால், பானுப்ரியாவுக்கு சினிமாவில் மீண்டும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது..
சாவித்ரி, காஞ்சனா
எனினும், பெரும்பாலான நடிகைகள் உச்சத்தில் இருக்கும்போது தங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது? எவ்வளவு செலவாகிறது? என்பதை தெரிந்து வைத்து கொள்வதில்லை.. அப்படித்தான் பானுப்பிரியாவும்.
உச்சத்தில் இருக்கும்போதே பொருளாதார கட்டமைப்புகளை சீர்படுத்திக் கொள்ளாமல் திணறியிருக்கிறார்.. எத்தனையோ நடிகைகள் இப்படி சம்பாதித்ததை சொந்த பந்தங்களுக்காகவே இழந்து, பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. இதில் காஞ்சனா, சாவித்திரி வரிசையில், பானுப்பிரியாவும் விதிவிலக்கல்ல..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications