பாரதி கண்ணம்மா 2:வீட்டுக்கு வந்த கண்ணம்மா..பாரதி கொடுத்த அதிர்ச்சி..வீட்டுக்குள்ளே நடக்கும் சூழ்ச்சி
வீட்டுக்கு வந்த சித்ரா தன்னை கண்ணம்மா என்று அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.
சென்னை: சித்ரா கண்ணம்மாவாக அவருடைய வீட்டிற்கு வந்து அவருடைய அம்மாவிடம் நான் தான் கண்ணம்மா என்று கூறுகிறார்.
கண்ணம்மாவின் அப்பா நீ தான் கண்ணம்மா என்பதற்கு ஆதாரம் என்ன என்று கேட்க வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உடுத்திருந்த உடையை எடுத்துக்காட்டுகிறார்.
கண்ணம்மா ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார் என்ற செய்தியை கேட்ட பாரதி தன்னுடைய நண்பனை கொலை செய்து விட்டு போனவள் தானே என்று திட்டுகிறார்.

வீட்டுக்கு வந்த கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2வின் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் டாக்டர் கண்ணம்மாவின் அம்மாவை செக் பண்ணி பார்த்துவிட்டு அவர் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அவரை குணப்படுத்த வேண்டும் என்றால் கண்ணம்மாவால் மட்டும் தான் முடியும் அவர் வரவேண்டும் என்று கூறுகிறார். வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. அங்கிருந்த நபர் கண்ணம்மாவின் அக்காவை வெளியே வர கூப்பிடுகிறார்.

தம்பி கூறிய வார்த்தை
கண்ணம்மாவின் அக்கா வெளியே வந்து பார்க்கும்போது ஆட்டோ டிரைவர் இதுதான் உன்னுடைய தங்கச்சி கண்ணம்மா வந்துவிட்டார் என்று சொன்னதும், ஆசையாக ஓடிப்போய் கட்டிப்பிடித்து ஏன் இவ்வளவு நாட்களாக வரவில்லை என்று திட்டிவிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்று தம்பி இடம் நம்முடைய கண்ணம்மா வந்து விட்டாள் என்று சொல்ல சின்ன வயசுல ஓடிப்போனவ தானே இப்ப எதுக்கு வந்திருக்கா என்று போனை பார்த்தபடியே ஏளனமாக பேசுகிறார். கண்ணம்மா இதை பார்த்து அப்படியே நகர்ந்து போகிறார்.

அப்பாவின் சந்தேகம்
பிறகு அம்மாவிடம் அழைத்துச் சென்ற அவர் கண்ணம்மாவை கண் கலங்கி அழுகிறார். அப்போது கண்ணம்மாவின் அப்பா அங்கே வர சித்ரா அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, நான்தான் கண்ணம்மா என்று சொல்ல, நீ தான் கண்ணம்மா என எப்படி நம்புவது என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா உங்களுக்கு இப்படி சந்தேகம் வருவது தவறு கிடையாது என்று சொல்லி கண்ணம்மா சிறுவயதில் ஊரை விட்டு ஓடி போகும்போது அணிந்திருந்த துணிமணிகளை எடுத்துக் காட்டுகிறார். அதை பார்த்த சுப்பிரமணி வாத்தியாரும் நம்பி வருகிறார்.

பாரதியின் எதிர்பாராத பதில்
அதற்குப் பிறகு கண்ணம்மாவின் அக்கா பாரதியின் ஸ்கூல் பிரண்ட் மதுவுக்கு போன் போட்டு சின்ன வயசுல ஓடிப்போன கண்ணம்மா வந்திருப்பதாக சொல்கிறார். அதற்கு மது ரொம்பவே சந்தோஷப்பட்டு வீட்டில் அனைவரிடமும் கண்ணம்மா வந்த விஷயத்தை கூறுகிறார். பாரதியிடம் இந்த விஷயத்தை சொல்லும்போது அஞ்சலியும் சந்தோஷப்பட அங்கே இருந்த பாரதி நம்ம பிரண்ட் செல்வாவை கொன்னுட்டு ஓடிப்போனாவ தானே அவளை பத்தி கேட்கவும், விரும்பல பார்க்கவும் விரும்பல என்று கோபமாக பேசுகிறார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

வீட்டில் நடக்கும் சூழ்ச்சி
அடுத்ததாக சௌந்தர்யா பாரதிக்கு பெண் பார்ப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஷர்மிளா அதாவது பாரதியின் அத்தை தன்னுடைய கணவரை தனியாக அழைத்து பாரதிக்கு வெண்பாவை கட்டி வைப்பது பற்றியும் விஜய்க்கு அஞ்சலியை கட்டி வைப்பது பற்றியும் பேசுமாறு கூறுகிறார். அவரும் எப்படி பேசுவது என்று யோசித்தப்படியே இருக்கிறார். இத்தருடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications