கண்ணம்மாவை நினைத்து உருகும் பாரதி...சௌந்தர்யாவின் திடீர் மன மாற்றம்.. எதிர்பாராத கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியை கண்ணம்மா வேண்டாம் என்று வெறுத்துவிட்டு தன் குழந்தைகளோடு வீட்டிற்கு சென்று விட்டார்.

கண்ணம்மாவின் மனமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத பாரதி குடும்பத்தினரிடம் உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அனைவரும் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாலும் சௌந்தர்யா பேசிய வார்த்தையை கேட்டு பாரதி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

ரிப்போர்ட்டை கிழித்த கண்ணம்மா

ரிப்போர்ட்டை கிழித்த கண்ணம்மா

பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் கண்ணம்மா பாரதி இடம் இந்த காகிதத்தை காட்டி தான் நீங்கள் இத்தனை நாளும் தப்பு மேல தப்பு பண்ணிட்டிருந்தீங்க, மனுஷங்களை நம்பாத நீங்க இந்த பேப்பரை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கீங்க, இனியாவது பேப்பரை நம்பாமல் மனுஷங்களை நம்புங்கள் என்று கையில் வைத்திருந்த டி என் ஏ டெஸ்ட் பேப்பரை கிழித்து கீழே எறிந்து விட்டு தன் குழந்தைகளோடு அந்த இடத்தை விட்டு கிளம்புகிறார். பாரதி தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். மொத்த குடும்பமும் என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது.

குழந்தைகளின் முடிவு

குழந்தைகளின் முடிவு

அடுத்து கண்ணம்மா வீட்டிற்கு வந்ததும் ஹேமா இந்த வெண்பா எவ்வளவு மோசமானவள் என்பதை தெரிஞ்சுக்காம அப்பா மீண்டும் மீண்டும் தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருந்திருக்கிறார். வெண்பா பேச்சைக் கேட்டு உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கிறார் என்று இப்போதுதான் எனக்கு தெரிகிறது. இனி அந்த அப்பா நமக்கு வேண்டாம் .இதற்கு முன்பு நான் அப்பா யாரு என தெரியாமல் அழுது கொண்டு இருந்தேன். ஆனா இப்போ எதற்காக அப்பா யார் என்பது தெரிந்தது என வேதனையாக இருக்கிறது என சொல்ல, லட்சுமியும் ஆமாம் அம்மா இனி நமக்கு அப்பாவும் வேண்டாம் இங்கே யாரும் வேண்டாம். இங்கே நாம இருக்க வேண்டாம் இங்கிருந்து எங்கேயாவது சென்று விடுவோம் என கூறுகின்றார்.

கண்ணம்மாவின் சமாதானம்

கண்ணம்மாவின் சமாதானம்

லட்சுமியும் ஹேமாவும் இங்கு இருந்து நாம் சென்று விடுவோம் என்று சொல்ல, கண்ணம்மாவும் ஆமாம் இங்கு இருந்தால் ஒவ்வொருத்தராக வந்து நம்மளை தொந்தரவு பண்ணுவார்கள். அதனால் இங்கு இருந்து சென்று கண்காணாத இடத்தில் நாம் மூன்று பேரும் மட்டுமே சந்தோஷமாக வாழலாம் என கூறி குழந்தைகளை தூங்க வைக்கிறார். அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் பாரதி இடம் குடும்பத்தினர் அனைவரும் நாங்கள் எத்தனை முறை சொன்னோம் இந்த வெண்பாவை நம்பாதே என்று நீ வெண்பாவை நம்பி உன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்று சொல்ல பாரதி மீண்டும் கதறி அழுது கொண்டிருக்கிறார். இந்த வெண்பாவால் என்னுடைய மொத்த வாழ்க்கையும் சீரழிந்து விட்டது. இனியாவது நான் என்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக கண்ணம்மா மற்றும் குழந்தைகளோடு வாழ வேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார்.

சௌந்தர்யாவின் திடீர் மன மாற்றம்

சௌந்தர்யாவின் திடீர் மன மாற்றம்

பாரதி பேசிக் கொண்டிருக்க சௌந்தர்யா இனி நீ தான் கண்ணம்மாவை சமாதானம் செய்து வாழ வேண்டும். நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். பின்பு நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் எனக்கு எப்படியாவது கண்ணம்மாவோடு சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும் என்று கதற சௌந்தர்யா சரி கண்ணம்மாவிடம் குடும்பத்தோடு சென்று பேசுவோம் என சொல்கிறார். பிறகு அனைவரும் சென்றுவிட பாரதி பெட்ரூமில் அழுதுபடியே இருக்கிறார். அதே நேரத்தில் கண்ணம்மாவும் அவருடைய வீட்டில் தூங்காமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார். அடுத்த நாள் காலை சாமி கும்பிட்டபடி பாரதி அனைவரையும் கூப்பிட ஒவ்வொருவராக அங்க வந்து சேர்ந்து கண்ணம்மாவிடம் நேரில் சென்று பேசி எப்படியாவது கூட்டி வந்து விட வேண்டும் என்று காரில் கண்ணம்மா வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அங்கே கண்ணம்மா வீட்டு வாசலில் பாரதி நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் பக்கத்தில் வந்து என்ன ஆனது என கேட்க பாரதி பதில் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+