சௌந்தர்யாவிடம் பொய் சொல்லி நடிக்கும் பாரதி..ஹேமாவின் ஆறுதல்..கோபத்தில் கண்ணம்மாவின் எதிர்பாராதமுடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மாவின் ஊரில் யாரும் மளிகை சாமான்கள் கொடுக்காததால் சாப்பாடு இல்லாமல் பட்டினியாக தவிக்கிறார்.
ஹேமா அனைவருக்கும் முன்பு பாரதியை திட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் பாரதி மீது வைத்திருக்கும் பாசத்தை பேப்பரில் எழுதி காட்டுகிறார்.

கோபத்தில் குழந்தைகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், ஹேமா லட்சுமி மற்றும் பூஜா என மூவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்க, அங்கு வரும் பாரதியை ஹேமா பிடித்துக் கொண்டு நான் பூஜாவை பிடித்து விட்டேன் என்று சந்தோஷமாக குதிக்க ,பூஜா இல்லை டாடி என பாரதி குரல் கொடுக்க, ஹேமா கண் திறந்து பார்த்து கோபப்படுகிறார். பாரதி, ஹேமாவிடம் எப்படி இருக்க நல்லா இருக்கியா? என்று விசாரித்தபடியே லட்சுமி இடமும் விசாரிக்கிறார். பின்பு இருவரும் புது ஸ்கூலில் சேர்ந்து இருக்கீங்க என கேள்விப்பட்டேன். ஸ்கூல் பிடித்திருக்கிறதா? என்று கேள்வி கேட்க, ஹேமாவும் லட்சுமியும் உங்களுடைய தொந்தரவு இருக்கக் கூடாது என்று தான் இவ்வளவு தூரம் பிரிந்து வந்தோம் இங்கேயும் வந்து தொந்தரவு பண்றீங்க என திட்டுகின்றனர்.

சிரித்து வெறுப்பேற்றும் பாரதி
பின்பு பாரதியிடம் எங்களுக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? என கேட்க பாரதி என்னன்னு சொல்லு ஹேமா எதுவாக இருந்தாலும் பண்றேன் என்று கேட்க, தயவு செய்து இந்த ஊரை விட்டு போய் விடுங்க என கூறுகின்றார். அதற்கு பிறகு இருவரும் வீட்டுக்குள் போய் கண்ணம்மாவிடம் பாரதி வந்து பேசிய விஷயத்தை சொல்ல, கண்ணம்மா வெளியே வந்து பாரதியிடம் கோபப்பட பாரதி சிரித்து சிரித்து வெறுப்பு ஏத்துகிறார். என்கிட்ட பேசுறவங்களையும் இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். இப்போ நீதான் என்கிட்ட வந்து பேசிகிட்டு இருக்க அப்படின்னா உன்னையும் இந்த ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டால், குழந்தைகளையும் ஸ்கூல்ல இருந்து நிறுத்திடுவாங்க, நாம எல்லோரும் சேர்ந்து சென்னை போக வசதியாக இருக்கும் என சொல்ல கண்ணம்மா கோவப்பட்டு உள்ளே செல்கிறார்.

பொருள்கள் கொடுக்க மறுக்கும் ஊர்காரர்கள்
பின்பு வீட்டு வாசலில் பாரதியும் கணபதியும் பேசிக் கொண்டிருக்க உள்ளே இருந்து பேப்பரில் லவ் யூ டாடி, நம்பிக்கையோடு இருங்க என இரண்டு லெட்டர் எழுதி அதை கசக்கி தூக்கி எறியப்படுகிறது. இதை படித்து பார்த்த பாரதி ஹேமா தான் எழுதியிருக்க வேண்டும் என நினைத்து சந்தோஷப்படுகிறார். அதற்கு பிறகு கணபதி மார்க்கெட்டில் சமையலுக்கு பொருட்கள் வாங்க செல்கிறார் அங்கு எந்த பொருள்களும் யாரும் எதுவும் தராமல் துரத்தி அடிக்கின்றனர். இதனால் இருவரும் பசியில் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது சௌந்தர்யா தன்னுடைய மகன் பாரதி சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது போல எனக்கு தோன்றுகிறது என்று வீட்டில் கண் கலங்கியபடி இருக்கின்றார்.

பசியில் நடிக்கும் பாரதி
பாரதியின் அப்பா பாரதிக்கு போன் செய்து பாரு என்று சொன்னதும், பாரதிக்கு சௌந்தர்யா போன் பண்ணும் போது, இங்கே கணபதி விதவிதமாக சமைச்சு கொடுத்து சாப்பிடுவது போல நடித்து பேசி சமாளிக்கிறார். பாரதி போனில் விதவிதமாக சாப்பாடு இருப்பது போன்று பேசி நடித்துக் கொண்டிருக்கும் போது லட்சுமியும், ஹேமாவும் ஜன்னல் வெளியே பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களோடு சேர்ந்து பாரதியை பார்த்துவிட்டு ஹேமா மற்றும் லட்சுமியை இருவரையும் உள்ளே செல்லும்படி கூறி ஜன்னல் கதவு சாத்துகின்றனர். சௌந்தர்யா போனை வைத்ததும் பாரதியும் கணபதியும் இருவரும் பசியில் கதறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications