அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடி ஆன கண்ணம்மா .. பரிதாபமான நிலையில் பாரதி... சௌந்தர்யாவின் கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தீபாவளி பண்டிகை கொண்டாட கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவின் குடும்பம் முடிவு செய்து இருக்கிறது.

தன்னுடைய வருமானத்தில் ஹேமா மற்றும் லட்சுமிக்கு புது துணியை எடுத்து கண்ணம்மா மகிழ்ந்து இருக்கிறார்.

ஹேமாவை நினைத்து பாரதி தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஹேமாவை சமாதானம் செய்த கண்ணம்மா

ஹேமாவை சமாதானம் செய்த கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில், மருத்துவமனையில் இருந்து கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். அப்போது ஹாலில் லட்சுமி மட்டும் தனியாக இருக்க அவரிடம் ஹேமா எங்கே என கண்ணம்மா கேட்க ஹேமா கோபத்தில் இருக்கிறார் என்று லட்சுமி சொல்கிறார். என்னாச்சி? எதற்கு கோபம் என கண்ணம்மா கேட்க, நீதான் ஹேமாவின் அம்மா என்பதை நான் ஏற்கனவே சொல்லவில்லை என்று ஹேமா என் மீது கோபத்தில் இருக்கிறாள் என்று கூறுகிறார். கண்ணம்மா உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன் ஒன் டூ த்ரீ எண்ணும்போது யாரு முதலில் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்களோ ,அவங்களுக்கு தான் அம்மா மேல பாசம் அதிகம் என சொல்லி ஒன் டூ த்ரீ என சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரே நேரத்தில் ஹேமாவும் லட்சுமியும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர்.

சௌந்தர்யா பேச்சுக்கு மறுப்பு

சௌந்தர்யா பேச்சுக்கு மறுப்பு

பிறகு ஹேமாவை சமாதானம் செய்து லட்சுமி இடம் கண்ணம்மா பேச வைக்கிறார். அடுத்தது மூவரும் ஒன்றாக அமர்ந்து கீரை கிள்ளி கொண்டிருக்கும்போது சௌந்தர்யா வீட்டிற்கு வருகிறார். கண்ணம்மாவிடம் தனியாக பேச வேண்டும் அதனால் கீழே சென்று இருவரும் விளையாடுங்கள் என்று கீழே அனுப்பி விட்டு கண்ணம்மாவிடம் தீபாவளி கொண்டாட வீட்டுக்கு வர சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார் .ஆனால் நான் ஒத்துக்கொண்டாலும் பசங்க அங்க வர மனநிலையில் இல்லை என கண்ணம்மா அதற்கு மறுப்பு சொல்லி விடுகிறார்.

கொண்டாட்டத்துக்கு சம்மதித்த கண்ணம்மா

கொண்டாட்டத்துக்கு சம்மதித்த கண்ணம்மா

தீபாவளிக்கு துணி எடுப்பதற்காகவும், செலவுக்கும் சௌந்தர்யா பணம் கொடுக்கும் போது கண்ணம்மா வேண்டாம் நான் இப்போது வேலை செய்து என்னுடைய குழந்தைகளுக்கு தேவையானதை என்னால் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று கூறிவிடுகிறார். பிறகு நீங்கள் எல்லோரும் இங்கே வாருங்கள் கொண்டாடலாம் ஒரு மாற்றமாகவும் இருக்கும் என்று சொன்னதும் சௌந்தர்யா சந்தோஷமாகி நான் இதை நினைத்தேன் ஆனால் நீ என்ன சொல்வியோ என்று தெரியலையே என்று தான் நான் தவித்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லி ஓகே நாளைக்கு வரோம் என்று கிளம்புகிறார்.

குழந்தைகளின் பாசம்

குழந்தைகளின் பாசம்

அடுத்ததாக கண்ணம்மா, ஹேமா, லட்சுமி மூவரும் தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்கு சென்று இருக்கின்றனர் அங்கே தன்னுடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி துணிகளின் விலைகளை பார்த்து பார்த்து கண்ணம்மா எடுத்துக் கொண்டிருக்கிறார் .குழந்தைகள் இருவருக்கும் மட்டும் துணி எடுத்ததும் போதும் போய்விடலாம் என்று சொன்னதற்கு லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் அம்மா உங்களுக்கும் எடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். தனக்கு மருத்துவமனையில் தந்த துணி இருக்கிறது அதுவே போதும் என்று கண்ணம்மா கூறியதை கேட்காமல் நீங்கள் புது துணி எடுக்க வில்லை என்றால் எங்களுக்கும் வேண்டாம் என்று குழந்தைகள் சொன்னதால் இவரும் கண்ணம்மாவும் துணி எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிந்திருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது பாரதி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+