அடங்காத வெண்பா மீண்டும் செய்த சூழ்ச்சி..பாரதி கொடுத்த பதிலடி..கடைசியில் ரோகித் எடுத்த சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீண்டும் வெண்பா தான் மட்டும் நல்லவர் கண்ணம்மா தான் மோசம் என்று பாரதியிடம் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுவரைக்கும் நம்பி ஏமாந்தது போல இப்போதும் ஏமாந்து விடுவாரோ என்று எதிர்பார்த்த நிலையில் பாரதி கடைசியில் வெண்பாவின் சூழ்ச்சியை முறியடித்து அனுப்பி இருக்கிறார்.

வெண்பாவே நடுங்கி போகின்ற வகையில் ரோஹித் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

மீண்டும் வந்த வெண்பா

மீண்டும் வந்த வெண்பா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தல் பாரதி மருத்துவமனையில் பேஷண்ட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார் .அப்போது வெண்பா அங்க வந்து பாரதியிடம் பாரதி எப்படி இருக்கிறார் நீ ?என்னை எப்படி இருக்க என்று கேட்க மாட்டியா? உனக்கு வேணும்னா என் மேல அக்கறை இல்லாம இருக்கலாம், ஆனால் எனக்கு உன் மேல அக்கறை இருக்கு, நீ இப்போ டிப்ரஷன்ல இருக்கானு தெரிஞ்சி பேச வந்தேனு சொல்ல ,என்ன டிப்ரஷன்? என பாரதி கேட்க ,வீட்டில் நடந்த விஷயங்களை கேள்வி பட்டேன் என வெண்பா கூறுகிறார்.

நடிப்பு எடுபடவில்லை

நடிப்பு எடுபடவில்லை

அந்த கண்ணம்மா இந்த சந்தர்ப்பத்தை அவளுக்கு சாதகமாக பயன்படுத்தி உன்கிட்ட இருந்து ஹேமாவை பிரித்து கூட்டிட்டு போய்ட்டா? உனக்கு ஹேமாவை எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியம் அவள் ஒரு மனுஷியா? என பேசி பாரதியை உசுப்பேத்த முயற்சி செய்கிறார் .அப்போது பாரதி போதும் நிறுத்து கண்ணம்மா நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். நாங்க சண்டை போட்டு அடிச்சி கிட்டாலும் சரி, ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, எங்களுடைய வாழ்க்கையில் தலையிட உனக்கு எந்த அருகதையும் கிடையாது. நீ எனக்கு செஞ்ச துரோகத்தை விட கண்ணம்மா செஞ்சது குறைவுதான். நீ என் முகத்திலேயே முழிக்காத போ என்று வெண்பாவை திட்டி விட்டு பாரதி கிளம்பி விடுகிறார்.

மீண்டும் வில்லி

மீண்டும் வில்லி

பாரதி கிளம்பிய பிறகு ரோகித் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் உன்னை அடைகிறது தான் என்னுடைய லட்சியம். அது முடியாமல் போனால் உங்க வீட்ல ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டாங்க, உன்னையும் சேர்த்து தான். இதுவரைக்கும் தோழியாக பார்த்த வெண்பாவை இனி வில்லியாக பார்ப்பாய் என வெண்பா மனதுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கண்ணம்மா வீட்டில் கண்ணம்மா குழந்தைகளோடு குலோப்ஜாம் செய்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

வெண்பாவுக்கு பயத்தை காட்டிய ரோகித்

வெண்பாவுக்கு பயத்தை காட்டிய ரோகித்

அடுத்ததாக பாரதி வீட்டுக்கு வருகிறார் அப்போது சௌந்தர்யா அவரைக் கூப்பிட்டு நாளைக்கு தீபாவளிக்கு கண்ணம்மா வீட்டுக்கு போய் தீபாவளி கொண்டாட போறோம். நீயும் வா என சொல்ல நீங்க போய் சந்தோசமா கொண்டாடிட்டு வாங்க. என் பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும் .அவ எங்க இருக்கணும், அங்க இருக்கணும்னு இல்ல எங்கிருந்தாலும் அவ சந்தோஷமாக இருக்கணும் என கூறுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு எடுத்துக் கூறியும் ,பாரதி இல்லை நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்ததாக வெண்பா ஹாஸ்பிடலில் தூங்கிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் எழுந்து பார்க்க யாரோ தன்னை கட்டி பிடித்து படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி பார்த்தால் அது ரோகித் என தெரிய வருகிறது. வெண்பா கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ரோகித்தும் வெண்பாவை பார்த்து முதலில் பயப்பட்டு கத்தி விட்டு, பின்பு ரொமான்டிக்காக பேசி தல தீபாவளி கொண்டாட வீட்டிற்கு சென்று புது துணிகளை எடுத்து விட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார் .இதனால் வெண்பா கடுப்பாகிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+