பாரதியோடு லட்சுமியின் புது பிளான்..ஏமாற்றத்தில் கண்ணம்மா..இனி இதுதான் கதையா? எதிர்பாராத கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவுடன் சேர்வதற்கு லட்சுமி பாரதியை அனைவரும் முன்னிலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

லட்சுமியின் திடீர் மாற்றத்தை பார்த்து ஹேமா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

கண்ணம்மாவின் முகத்துக்கு நேராகவே எனக்கு அப்பா தான் முக்கியம் என்று லட்சுமி கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

லட்சுமியின் ஆசை

லட்சுமியின் ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட்டில் பாரதியும் கணபதியும் ரூபில் தனியாக இருக்க அப்போது லட்சுமி அங்கே ஓடி வருகிறார். உங்களை பார்க்கனும் போல இருந்துச்சு, உங்க கிட்ட பேசணும் போல இருந்துச்சு, அதனால்தான் வந்தேன் என சொல்கிறார். மேலும் யாருக்கும் தெரியாமல் தான் வந்து ஆனா எல்லோரும் பார்க்கிற மாதிரி தான் நான் உங்களோட சந்தோசமாக பேசி பழகணும், உங்களோட சேர்ந்து சாப்பிடணும் எனவும் அதற்காக ஏதாவது பண்ணுங்க என லட்சுமி பாரதியிடம் சொல்ல பாரதி யோசித்து புது ஐடியாவை கொடுக்கிறார்.

விளையாட்டை தொடங்கிய பாரதி

விளையாட்டை தொடங்கிய பாரதி

பாரதியின் ஐடியாவிற்கு லட்சுமி ஓகே சொன்னதும் அடுத்த நாள் காலையில் பாரதி கண்ணம்மா வீட்டுக்கு சென்று இன்னைக்கு வீகென்ட் குழந்தைகள் என்னோட கூட்டிட்டு போக வந்தேன் என சொல்ல, யாரும் உங்களோட வர மாட்டாங்க, நீங்க கிளம்புங்க என கண்ணம்மா சொல்கிறார். அதை குழந்தைகள் சொல்லட்டும் என பாரதி சொல்ல கண்ணம்மா இருவரையும் அழைக்க ஹேமா நான் உங்களோட வரமாட்டேன் கிளம்புங்க என சொல்கிறார். பின்பு பாரதி லட்சுமி ஒரு வார்த்தை சொல்லிட்டா நல்லா இருக்கும் என கூறுகிறார்.

ஸ்டைலாக மாறிய லட்சுமி

ஸ்டைலாக மாறிய லட்சுமி

இதே நேரத்தில் லட்சுமி ஸ்டைலாக வந்து நிற்க கண்ணம்மா ஹேமா இருவரும் திரும்பி பார்க்க, லக்ஷ்மி ஹாய் டாடி என பாரதியுடன் வந்து கொஞ்சி பேசுகிறார். உனக்கு புருஷன் வேணான்னு முடிவு பண்ணலாம் ஆனால் எங்களுக்கு அப்பா வேணும்னு நீ எப்படி முடிவு பண்ண முடியும்? அப்பாவோட பத்து வருஷம் இருந்ததுனால அவளுக்கு அப்பா மீது ஆசை இல்லாமல் இருக்கலாம், ஆனா எனக்கு அப்பா வேணும். நான் ஒரு நாள் கூட அப்பாவோட இருந்ததில்லை என சொல்லி பாரதியோடு கிளம்புகிறார்.

ஐஸ்கிரீமுக்கு அக்கப்போர்

ஐஸ்கிரீமுக்கு அக்கப்போர்

லட்சுமியின் திடீர் மாற்றத்தால் ஹேமாவும் கண்ணம்மாவும் அதிர்ச்சியாக இருக்கின்றனர். பிறகு லக்ஷ்மி ஐஸ்கிரீம் கேட்க, பாரதி வாங்கி கொடுக்க எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அதை பார்த்து கண்ணம்மா ஓடி வந்து குழந்தையை கூட்டிட்டு வந்து உங்களுக்கு எப்படி பார்த்துக்கணும் எந தெரியாதா? என சண்டை போடுகிறார். ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து இருக்கீங்க நாளைக்கு சளி பிடிக்கும் ஜுரம் வரும் என்று தெரியாதா என கேட்க, அவா என் பொண்ணு உனக்கு எப்படி அக்கறை இருக்குதோ அதே மாதிரி எனக்கும் இருக்கு, ஒருவேளை அவளுக்கு ஜுரம் வந்தால் என்ன மாத்திரை தர வேண்டும் எப்படி சரியாகணும்னு எனக்கு தெரியும் என பாரதி பதில் கூறி கண்ணம்மாவை மேலும் கோபம் ஆக்குகின்றார்.

அடுத்த பிளானுக்கு ரெடி

அடுத்த பிளானுக்கு ரெடி

லட்சுமி பாரதியோடு போனதுனால ஹேமா லட்சுமி மேல கோபமாக இருக்கிறேன். இனி அவ கிட்ட பேசவே மாட்டேன். அவங்க முகத்துல முழிக்க மாட்டேன் என கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு தாமரை அப்படி எல்லாம் பண்ண கூடாது, அவளுக்கு அவ அப்பாவோட இருக்கணும்னு ஆசை. அதனால போயிருக்க ரெண்டு நாள் கழிச்சு இங்கதான் வரப்போறா? என சமாதானம் செய்கிறார். அதற்குப் பிறகு பாரதி லட்சுமி மற்றும் கணபதி என மூவரும் கண்ணம்மாவின் மனதை எப்படி மாற்றலாம் என யோசித்து கொண்டு இருக்க, அப்போது கணபதி கணவனே கண்கண்ட தெய்வம் அந்த மாதிரி ஏதாவது நாடகம் போடலாம் என சொல்ல, எதுவும் காரணம் இல்லாமல் எப்படி நாடகம் போடுவது என யோசித்து கொண்டிருக்கும்போது லட்சுமி இன்னைக்கு பாட்டியுடன் நினைவு நாள் என சொல்கின்றார். பாரதி என் மாமியார் நினைவு நாளை கொண்டாடி கண்ணம்மா மனசை மாற்றலாம் என முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+