மனோஜின் காலை நள்ளிரவில் அமுக்கிய டைரக்டர் பாரதிராஜா.. "என்னப்பா செய்றீங்க?" உருகிய தந்தை பாசம்
சென்னை: தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, கிராமத்து மண்ணின் வாசனையையும் மனிதர்களின் உணர்வுகளையும் திரையில் கடத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. திரைக்குப் பின்னால் இருக்கும் அவரது உணர்ச்சிப்பூர்வமான பக்கங்களையும், தொழில் பக்தியையும், பாசமிக்க தந்தை பாத்திரத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாலாஜி பிரபு அந்த பேட்டியில், "பாரதிராஜா என்ற மாபெரும் ஆளுமையின் முதல் புள்ளி '16 வயதினிலே' படமாகும்.. இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, சினிமா பின்புலம் ஏதுமற்ற ஒரு தேங்காய் வியாபாரி.

35000 பணமும், பாரதிராஜாவின் உண்மையும்
பாரதிராஜாவின் கதையை மட்டுமே நம்பி, அன்றைய தனது வியாபார வசூல் தொகையான 35,000 ரூபாயை அப்படியே அவரிடம் கொடுத்து, "உங்களை நம்பிப் பணத்தைத் தருகிறேன், படத்தை எடுங்கள்" என்று கூறி மைசூர் அருகில் உள்ள கொள்ளேகால் கிராமத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு பாரதிராஜா வீட்டிற்கு வந்தபோது, அங்கு வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரது மகன் மனோஜிற்கு அப்போது ஒரு வயது இருக்கும். வீட்டில் குழந்தைக்குக் கொடுக்கப் பால் டின் வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லாமல் அவர் மனைவி தவித்துக்கொண்டிருந்தார்.
"குழந்தை பசியால் அழுகிறான், பால் டின் வாங்க வேண்டும்" என்று மனைவி கூறியபோது, பாரதிராஜாவின் கையில் தயாரிப்பாளர் கொடுத்த 35,000 ரூபாய் பணம் இருந்தது. அதிவிலிருந்து 10 ரூபாய் எடுத்து பால் டின் வாங்கியிருக்க முடியும். ஆனால், அந்த நேர்மையான கலைஞன் அப்படிச் செய்யவில்லை.
பால் வாங்க பணம் இல்லை
தன் மனைவியிடம், "எனது தொழிலையும் கதையையும் நம்பி ஒரு தயாரிப்பாளர் கொடுத்த பணம் இது. இதிலிருந்து ஒரு ரூபாய் கூட நமது சொந்தத் தேவைக்காக எடுக்கக் கூடாது. தொழிலுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். எப்படியாவது நிலைமையைச் சமாளி, எனது நண்பன் பணம் கொண்டு வந்து தருவான், அதன் பிறகு பால் டின் வாங்கிக்கொள்" என்று சொல்லிவிட்டு அந்தப் பணத்தை அப்படியே எடுத்துக்கொண்டு ஷூட்டிங்குக்கு கிளம்பினார்.
தன் பிள்ளை பசியால் அழுதுகொண்டிருந்த போதும், தொழிலுக்காக அவர் காட்டிய அந்த அசாத்திய நேர்மைதான் அவரை 'இயக்குனர் இமயம்' என்ற உயரத்தில் அமரவைத்தது.
மகன் மனோஜ் மீது பாசம்
ஆனால் தொடக்கத்தில் நடிகராக வேண்டும் என்ற ஆசை பாரதிராஜாவிற்கு இருந்தது. தான் அடைய முடியாத அந்த உயரத்தைத் தன் மகன் மனோஜ் அடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். அதுக்காக சினிமா தொழிலின் அடிமட்ட கஷ்டங்களை மகன் கற்றுக்கொள்ள வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் மனோஜை உதவி இயக்குனராகச் சேர்த்துவிட்டார்.
முதல் நாள் கடுமையான வேலைக்குக் பிறகு நள்ளிரவு 10.30 மணியளவில் வீடு திரும்பிய மனோஜ், "அப்பா, நான் வந்துவிட்டேன், தூங்க போறேன்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய ரூமுக்கு போய் படுத்துவிட்டார். ஒரு உதவி இயக்குனராக நாள் முழுவதும் நின்றுகொண்டே வேலை செய்வது எவ்வளவு ரணமானது என்பது பாரதிராஜாவிற்கு நன்றாகவே தெரியும். செல்லமாக வளர்ந்த தன் மகனின் கால்கள் எவ்வளவு வலிக்கும் என்பதையும் ஒரு தந்தையாக அவர் உணர்ந்தார்.
என்னப்பா செய்றீங்க
நள்ளிரவு 11 மணியளவில், மெதுவாக மனோஜின் ரூமுக்கள் சென்ற பாரதிராஜா, தூங்கி கொண்டிருந்த மகனின் கால்களைத் தன் கைகளால் மெதுவாக அமுக்கிவிடத் தொடங்கினார். திடீரென விழித்துப் பார்த்த அப்பா தன்னுடைய கால்களை அமுக்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, "என்னப்பா செய்றீங்க? என் காலையா அமுக்கிவிடுறீங்க?" என்று பதறி எழுந்தார்.
அவரைப் படுக்க வைத்த பாரதிராஜா, "நீ அமைதியாக இரு, நான்தானே உன்னைத் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தேன். உனக்குக் கால் வலிக்கும் என்பது எனக்குத் தெரியும், நீ தூங்குப்பா, நான் அமுக்கிவிடுகிறேன்" என்று சொல்லி உள்ளார்..
கோலிவுட்டையே தன் விரல் அசைவில் ஆட்டிய இயக்குனர் இமயம், நள்ளிரவில் தன் மகனுக்காகக் கால் அமுக்கிவிட்ட இந்தச் சம்பவம், திரைக்குப் பின்னால் அவர் எவ்வளவு பாசமிக்க ஒரு தந்தை என்பதை உணர்த்துகிறது என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நெகிழ்ச்சியோடு அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
பாரதிராஜா செய்ததை மறக்க முடியுமா? கதறிய நெப்போலியன்! சரத்குமார், குஷ்பூ, ரேவதி வருத்தம் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி











Click it and Unblock the Notifications