மதத்தை சொல்லி விமர்சித்த நபர்... தான் வில்லி என்பதை நிரூபித்து பதிலடி கொடுத்த நடிகை ஃபரீனா
முஸ்லிமாக இருந்துவிட்டு இப்படி செய்யலாமா என நடிகை ஃபரீனாவிடம் விமர்சித்த நபருக்கு ஃபரீனா பதில் எழுதி கொடுத்து இருக்கிறார்.
சென்னை: நடிகை ஃபரீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு சீசனிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஃபரீனா வெளியிட்ட ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர் ஒருவர் திட்டி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ஃபரீனா தன்னுடைய பாணியில் அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

சின்னத்திரையின் நீலாம்பரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா 2 சீரியலின் மூலமாக வெண்பா எனும் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா, இதற்கு முன்பு சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தார். தற்போது சின்னத்திரையில் ஒரு நீலாம்பரியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருடைய கேரக்டருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்கள் எல்லாமே இவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவர் கண்டுகொள்வதில்லை.

அதிகரித்த நெகட்டிவ்வர்ஸ்
ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடிக்கும் போது, இவர் தான் கதாநாயகி என்று இவருக்கு அதிகமாக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இவர்தான் வில்லி என்று தெரிந்ததும் இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் தோன்ற ஆரம்பித்து விட்டனர்.

ஆண் குழந்தை பிறந்துள்ளது
சீரியல்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு திருமணம் முடிந்தது பல ரசிகர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. இவருடைய கர்ப்பமான செய்தியை கேட்டு பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு தற்போது இவர் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து இருக்கும் நேரத்தில் சீரியல்களில் இருந்து இவர் விலகி விடுவார் என்று ஒரு சில ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். ஆனால் அப்படி எல்லாம் நான் போக மாட்டேன் என்று இவர் தெளிவாக கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

மோசமான வார்த்தைகள்
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய பிரமோ ஒன்றை போட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்து ஒருவர் மோசமாக எழுதி இருந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து இது என்னுடைய வகையிலான காலை வணக்கம் என்று பதிவிட்டு இருந்தார்.

வெண்பாவின் அதிரடி
மேலும் அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு ஃபரீனா பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒருவர் நீங்கள் முஸ்லிம் தானே தினமும் தொழுகுவீர்கள் அல்லவா, பின்ன ஏன் இப்படி கெடுதல் செய்கிறீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஃபரீனா, சமூக ஊடகங்களில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின்தொடர்வது மற்றும் அவரை கேள்வி கேட்பது எல்லாமே கெடுதல் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. உன்னுடைய பின்புறத்தை சுத்தமாக வைத்து விட்டு என்னிடம் கேள்வி கேள் என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications