அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ரெடியான்னு ஓபன் ஆக கேட்டாங்க.!? உண்மையை உடைத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை
சீரியல்களில் நடிப்பதற்கும் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்கள் பற்றி பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளிப்படையாக பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் மது கேரக்டரில் ரேஷ்மா பிரசாத் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ரேஷ்மா பிரசாத் நடிப்பதற்காக பலர் தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்கிறார்கள் என வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
வெள்ளி திரை போலவே சின்னத்திரையிலும் நடக்கும் அவலங்களை பற்றி பல தகவல்களை நடிகை ரேஷ்மா பிரசாத் கூறி இருக்கிறார்.

தொடரும் அட்ஜஸ்மென்ட்
அட்ஜஸ்மென்ட் என்பது சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இருக்கிறது என்று பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மது என்கிற கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பிரசாத் சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஓகேவா என்று தான் தன்னிடம் நேரடியாக சிலர் கேட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி யிருக்கிறார். தற்போது ரேஷ்மா பிரசாத் கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இவருடைய துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.

தொடர்ந்து அதே கேள்வி
அந்த வகையில் அந்த பேட்டியில் அவர் சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க இருந்தாலும் அட்ஜஸ்மென்ட் பண்ண ஓகேவா? உங்களுக்கு இந்த ரோல் ஈசியா கிடைக்கும்னு சொன்னாங்க. எல்லோருமே இதைதான் கேட்டாங்க. அப்போ போங்கடா உங்களுக்கு வேற வேலையே இல்லையா? அட்ஜஸ்மென்ட் பண்ணி தான் எனக்கு அந்த ரோல் வேணும், கிடைக்கனும்னு அவசியமே இல்லை. வரும்போது வரட்டும் பார்த்துக்கிறேன் என்று ஒரு கட்டத்தில் நான் ஆடிஷன் போறதையே நிறுத்தி விட்டேன் என்று கூறி இருக்கிறார்.

போன் செய்து தொல்லை
அதோடு அவர் நமக்கு அனுப்பப்படும் ப்ரொபைலில் அட்ஜஸ்மெண்டுக்கு ஓகேவா? இல்லையான்னு கேட்டிருந்தாங்க, நான் அதற்கு நோ என்று டிக் செய்து அனுப்பி இருந்தேன். ஆனாலும் அதற்குப் பிறகு நோன்னு குறிப்பிட்டு அனுப்பிய பின்னரும் அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா உங்களுக்கு என்று போன் பண்ணி வேற கேக்குறாங்க. இதெல்லாம் ஷாக்காக அதான் இருந்தது என்று கூறியிருக்கிறார். நான் பல ஆடிஷனுக்கு நான் போயிருக்கேன். அங்கு எல்லாம் என்ன ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். டேலண்ட் இல்லை என்று ரிஜெக்ட் செய்திருந்தால் பரவாயில்லை. ஆனால் பேஸ் சரியாக இல்லை. ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்றெல்லாம் கூறுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

கண்ணம்மாவின் தோழி
ரேஷ்மா பிரசாத் ஒரு சில ஷார்ட் பிலிம் களிலும் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். தற்போது முதல் முறையாக அவர் பாரதி கண்ணம்மா சீசன் இரண்டில் பாரதியின் நெருங்கிய தோழியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் கண்ணம்மாவிற்கு அடிக்கடி டெஸ்ட் வைக்கும் உயிர் பிரண்டாகவும் மது கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே சமூக வலைதளத்தின் மூலமாக இவர் இளைஞர்களுக்கு பரீட்சையமான நபர்தான். இவரை 115k ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications