உன்னை எல்லாம் கதாநாயகனாக போட்டதுக்கு இது தேவை தான்! பாரதி கண்ணம்மா 2 இயக்குனர் வெளியிட்ட பதிவு
பாரதி கண்ணம்மா 2 சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வுகளை பற்றி இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: பாரதி கண்ணம்மா 2 சீரியல் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது.
இதில் கதாநாயகனாக சிபு சூரியன் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இயக்குனர் பிரவீன் பெண்ணட் தான் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிபு சூர்யன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வில்லனோடு மோத சொன்னால் தன்னை தாக்கி விட்டார் என்று இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டாவது பாகம்
விஜய் டிவியில் நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் கடந்த வாரம்தான் முடிவடைந்தது. இந்த நிலையில் இதைத்தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த திங்கள்கிழமைகளில் இருந்து தொடங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த சீசனில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி இந்த சீசனிலும் கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாரதி கேரக்டரில் சன் டிவி ரோஜா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த சிபு சூர்யன் நடித்து வருகிறார்.

சீரியலின் கதை
கடந்த சீசனில் டாக்டராக பாரதி இருந்த நிலையில் இந்த சீசனில் கிராமத்து பணக்கார இளைஞராக சிபு பாரதி இருக்கிறார். பாரதி குடித்துவிட்டு ஊர் சுற்றும் நபராக இருந்தாலும், ஏழைகளிடத்திலும் ஊர்காரர்கள் இடமும் பாசமாக இருக்கிறார். கண்ணம்மா வாக ரேஷ்மா முரளிதரன் அறிமுகமான நிலையில் சித்ரா கேரக்டரில் வினுஷா தேவி நடித்து இருக்கிறார். அவர் ஜெயிலிலிருந்து விடுதலை ஆகி வெளியே வந்திருக்கிறார். குழந்தையாக இருக்கும்போது எதற்காக ஜெயிலுக்கு சென்றேன் என்பது தெரியாத நிலையில் ஜெயிலுக்கு சென்று இப்போது தான் வெளியாகி வருகிறேன் என்று சித்ரா கூறி இருக்கும் நிலையில் கண்ணம்மாவை சிலர் கொலை செய்துவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக இனி சித்ரா கண்ணமாவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குனரின் பதிவு
இந்த நிலையில் இந்த சீரியல் தொடங்கிய முதல் நாளே பாரதிக்கு 25-வது பிறந்தநாள் ஊர்காரர்களும் ஊர் பெரிய மனுஷங்களும் சிறப்பாக கொண்டாடி இருந்தனர். அப்போது அவர் அவர்கள் எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு பாருக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கே சில ரவுடிகளோடு ஏற்பட்ட தகராறில் இவர் குடித்துவிட்டு ரவுடிசம் செய்கிறார். அதை ஒரு நபர் வீடியோவும் எடுத்து இருக்கிறார். இந்த எபிசோடு இரண்டாவது நாளில் ஒளிபரப்பானது. ஆனால் இது சூட்டிங் எடுக்கப்படும் போது வில்லனை பாரதி அடிக்கும்போது தவறுதலாக இயக்குனர் மீதும் பட்டிருக்கிறது. அதை தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்த இயக்குனர் பிரவீன் பெண்ணட், உன்னை கதாநாயகனாக போட்டதுக்கு எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்டப்பா! என்று சிபு சூர்யனை டேக் செய்திருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

பாரதியின் பதிவு
இந்த நிலையில் இந்த சீரியலில் மது அருந்துவது போன்ற காட்சியில் தான் நடித்ததால் அதிகமான ரசிகர்கள் தனக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள் என்று, பாரதியாக நடிக்கும் சிபு உங்கள் அக்கரைக்கு அனைவருக்கும் நன்றி. புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் எந்த வகையிலும் இவற்றை ஆமாதிப்பது இல்லை. ஆனால் கேரக்டருக்கு தேவையானவற்றை பின்பற்றுகிறேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்பொழுது இந்த பதிவும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications