சிதைக்கப்பட்ட பாலியம்.. அவனை சமாளிக்கவே முடியல! வெளியில அவ்வளவு வன்மம்.. பவா செல்லதுரை எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழுத்தாளராகவும் நடிகராகவும் இருக்கும் பவா செல்லதுரை சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பாதியிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்தும் தன்னுடைய அனுபவம் குறித்தும் பவா செல்லதுரை வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று தன்னுடைய முடிவை சொன்னபோது பிக் பாஸ் அணியினர் மட்டுமல்லாமல் கமலும் அவரை தடுத்து பார்த்தனர். ஆனாலும் பவா செல்லத்துரை தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும் என்று கூறியிருந்தார்.

Bhava Chelladuraii has openly talked about bigg boss program and his experience

பிறகு பிக் பாஸ் குழுவினர் அவரை வெளியேற்றி வைத்தனர். இந்த நிலையில் அவர் சமீபத்தில் பேசியிருக்கும் பேட்டியில் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியாலும் அங்கிருந்த போட்டியாளர்களாகவும் எந்த ஒரு விதமான இடையூறுகளும் ஏற்படல. அவர்கள் என்னை மிகவும் மரியாதையாக தான் நடத்துனாங்க. ஆனால் இன்னும் கொஞ்சம் காலம் உள்ளே இருந்திருந்தால் என்னுடைய மரியாதை இன்னும் குறைந்திருக்குமோ என்று எண்ணம் எனக்கு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது நான் பெரிய ரைட்டர் என்ற விதத்தில் எல்லாம் நான் இருக்கவே இல்லை. நானும் அந்த வீட்டில் இருந்த 18 போட்டியாளர்களில் ஒருவர்தான் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வெளியே வந்த பிறகுதான் எனக்கு ஷாக்காக இருந்தது. காரணம் வெளியே அந்த நிகழ்ச்சியை பற்றியும் என்னைப் பற்றி அவ்வளவு சர்ச்சைகள் போய்க் கொண்டிருந்தன.

அதிலும் இந்த நிகழ்ச்சியில் தோல்வி அடைந்தவர்களின் வன்மம் மிக அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இலக்கியத் துறையில் இந்த மாதிரி ஆட்களை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். வாழ்க்கை முழுவதும் நான் பாசிட்டிவான மனிதர்களை பார்த்து வளர்ந்தவன். ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது தான் எனக்கு நெகட்டிவ்வான மனிதர்களை அடையாளம் காட்டியது.

அதனாலேயே எனக்கு மாரடைப்பு வரை போனதா? என்று தெரியவில்லை... அதுபோல ஒரு நாள் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது சிறிய பாஸ் வீட்டிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தேன். அங்கு ஒருவர் என்னை சோம்பேறி என்று அழைத்தார். அது என்னை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டது. அதனால் தான் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகிறேன் என்று சொன்னதை கேட்டு பிக்பாஸ் மட்டுமல்லாமல் கமலும் என்னை இருக்க சொல்லி எவ்வளவோ சொன்னார். ஆனால் என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். நான் பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு முன்பு அங்கே போனால் நிறைய பேசலாம், நல்ல உரையாடல்கள் நிகழும்... கோடிக்கணக்கான மக்களுக்கு நம்முடைய பேச்சு சென்றடையும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு என்பதே அதற்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. என் சின்ன வயசிலிருந்தே நான் போட்டிகளில் அதிகமாக கலந்து கொள்ள மாட்டேன். போட்டிகள் என்றாலே விலகி தான் இருப்பேன். எனக்கு போட்டிகள் என்ற உடன் ஒரு அசவுகரியமாக வந்துவிடும். அப்படி இருந்த எனக்கு பிக் பாஸ் வீடு ஒரு போட்டி களமாக இருந்தது.

அதுபோல பிக் பாஸ் உள்ளே இருந்த பிரதீப்பின் பாலிய காலமானது பயங்கரமாக சிதைக்கப்பட்டு இருந்தது. அவனை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. அவன் அந்த வீட்டில் ஒவ்வொரு நிமிடமும் கேம் கேம் என்று விளையாடிக் கொண்டிருந்தார் என்று அந்த பேட்டியில் பவா செல்லதுரை பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+