Bhavani : வதந்திகளுக்கு பதிலடி! திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த பாவனி! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையான பாவனி ரெட்டி மற்றும் நடன இயக்குநர் அமீர் இருவரும் இந்த ஆண்டுத் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போதுத் தங்களது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் கனவு இல்லத்தைக் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளனர்!

பாவனி ரெட்டி சீரியல் முதல் பிக் பாஸ் வரை
பாவனி ரெட்டி தெலுங்கு மற்றும் தமிழில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டை வால் குருவி' மற்றும் 'சின்னத்தம்பி' போன்ற சீரியல்கள் இவருக்கு நல்லப் பெயரைக் கொடுத்தன. சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், வெள்ளித்திரையில் இவரால் பெரிய அளவில் பிரபலமாக முடியவில்லை.
விபரீத சோகம்
பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும்போது, அதில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் என்பவரைக் காதலித்து 2017ஆம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். ஒரு சின்ன பிரச்சனை காரணமாகப் பிரதீப் விளையாட்டாகத் தற்கொலை செய்வது போல் பாவனியைப் பயமுறுத்த நினைத்த நிலையில், அது விபரீதமாக முடிந்து, போதையில் இருந்ததால் அவர் கழுத்து இறுகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பாவனிக்கு கடும் அதிர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தியது.
பிக் பாஸ் 5
இந்த வலியில் இருந்து வெளியே வருவதற்காகவும், பெற்றோரின் வற்புறுத்தலாலும், பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்ட டான்ஸ் மாஸ்டர் அமீர், பாவனி மீது தனக்கு இருந்த காதலை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில், 'கன்டென்ட்' கொடுப்பதற்காக அமீர் இப்படிச் செய்கிறார் என்று ரசிகர்கள் நினைத்தனர்.
காதலை நிரூபித்த அமீர்
ஆனால், அமீர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தனதுக் காதலைப் பாவனிக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார். அதன் பிறகு, 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனமாடியபோது, அமீரின் உண்மைக் காதலுக்குப் பாவனி சம்மதம் தெரிவித்தார். பின்னர் இவர்களின் காதல் லிவிங் ரிலேஷன்ஷிப்பாக மாறியது. சுமார் மூன்று வருடங்கள் லிவிங்கில் இருந்த இவர்கள், இந்த ஆண்டுத் திருமணம் செய்து கொண்டுத் தங்கள் காதலை நிரூபித்தனர். அந்த நேரத்தில் இவர்கள் காதல் திருமணத்தில் முடியாது இவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுவார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் பரவி வந்தது.

குட் நியூஸ்: கனவு இல்லம் ரெடி
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தற்போதுப் பாவனி ஒரு முக்கியமான 'குட் நியூஸ்'ஸை வெளியிட்டுள்ளார். பாவனி - அமீர் திருமணம் முடிந்த கையேடு, தங்களின் கனவு இல்லத்தைக் கட்டத் துவங்கினர். தற்போது இவர்களின் சொந்த வீடு முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதுகுறித்தப் புகைப்படத்தைப் பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களைப் பற்றிய வதந்திகளுக்கும் இப்போது இந்த ஜோடி பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பாவனி, அமீருடன் சேர்ந்து தனதுக் கனவு இல்லத்தில் இனி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க இருப்பது, அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications