"ஹே கருகருவா".. பவதாரணியின் கடைசி பாட்டு.. "புயலில் ஒரு தோணி" படத்தில் இசையமைத்த பாடல் வெளியானது
சென்னை: மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியாகியுள்ளது. அவர் இசையமைத்த 'புயலில் ஒரு தோணி' என்ற படத்தின் பாடலைத்தான் படக்குழுவினர் இப்போது யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இந்தாண்டு ஜனவரி மாதம் இலங்கையில் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சையும் மேற்கொண்ட வந்த பவதாரணி, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. பவதாரணியின் இந்த மரண செய்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி போட்டது.

தேனியின் லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் வீட்டிலேயே, அவரின் அம்மா சின்னதாய், மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபம் இருக்கிறது.. இங்குதான், பவதாரணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது...
இறுதிச்சடங்கு: இறுதி சடங்கின்போது பவதாரணி பாடி, தேசிய விருது பெற்ற "மயில் போல பொண்னு ஒண்ணு" பாடலை அவரது குடும்பத்தினர் பாடி நிறைவு செய்தனர்.. இறுதிச்சடங்கு செய்யப்பட்டு முடிந்ததுமே, கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு உள்ளிட்டோர் பவதாரணியின் உடலை சுமந்து வந்து, நல்லடக்கம் செய்தார்கள்.
இந்நிலையில், பவதாரணியின் கடைசி பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.. அவர் கடைசியாக இசையமைத்த 'புயலில் ஒரு தோணி' என்ற படத்தின் பாடலைத்தான் படக்குழுவினர் இப்போது யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். ஈசன் டைரக்ட் செய்யும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கார்த்திக் ராஜா: இந்த படத்திற்காக "ஹே கருகருவா" என்ற அந்த பாடலை கவிஞர் சிநேகன் எழுதியுள்ளார்... இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், மானசி இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.. இந்த படத்தில் மொத்தமே 2 பாடல்கள்தானாம்.. இதில், இன்னொரு பாடலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடியிருக்கிறார்.
'புயலில் ஒரு தோணி' படத்தின் இயக்குநர் ஈசன் ஒருமுறை பேட்டியில் சொன்னதாவது: "பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
2 பாடல்கள்: நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார்.
இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யபடுத்தினார். இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னணி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.
பெரிய பலம்: படம் வெளிவருவதிற்கு முன்பாக இப்படியெல்லாம் நடக்கும் என்று துளியும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை.. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர்.. பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைர கல்.. எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications