இந்தியன் 3 குட்நியூஸ்.. ஏவிஎம்மில் பதறி ஓடிய ரஜினி.. புவனா ஒரு கேள்விக்குறி.. கமலின் நட்பு: பிரபலம்
சென்னை: டெல்லியில் ராஜ்யசபா எம்பியாக வரும் 25ல் பதவியேற்க உள்ளார் கமல்ஹாசன். முன்னதாக, இந்த தகவலை தனது அன்பு நண்பர் ரஜினிகாந்த்திடம் சொல்லி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடந்திருந்தது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் ரஜினி-கமல் இடையேயான நட்பு குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப்பில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "நண்பரை சந்தித்து விட்டு, புதிய பயணத்தை தொடங்குகிறேன்" என்று கமல் சொல்வதிலிருந்துதான், ரஜினியுடனான நட்பு வெளிப்படுகிறது.. எலியும் பூனையுமாக தங்களை பார்த்து வரும் ரசிகர்களுக்கு, சிறந்த நட்புக்கான முன்னுதாரணமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது..

நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதை, பல மேடைகளில், பல இடங்களில் இருவருமே நிரூபித்துள்ளனர்.. இதற்கு பின்னணியில் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது..
டைரக்டர் சங்கர்
டைரக்டர் சங்கரால் தனக்கு 100 கோடிக்கு நஷ்டமாகிவிடடது என்று தயாரிப்பாளர் தில்ராஜ் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.. மேலும் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என எந்த படமும் ஓடவில்லை என்று சங்கரை பலரும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில்தான் சமீபத்தில் நடந்த வேல்பாரி புத்தக வெளியீட்டு விழாவில் சங்கரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்... இதற்கு காரணம், இந்தியன் 3 பட விவகாரத்தில் ரஜினி தலையிட்டு, சுமூகமாக பேசி முடித்துவிட்டாராம்.. சுபாஷ்கரனிடம் பேசி இதற்கான உத்தரவாதத்தையும் ரஜினி தந்துள்ளாராம்..
இந்தியன் 3 ஹேப்பி நியூஸ்
ஒருவேளை இந்தியன் 3-ல் ரஜினி ஏதாவது கெஸ்ட் ரோல் செய்கிறாரா? அல்லது வாய்ஸ் தருகிறாரா? தெரியவில்லை. ஆனால், பஞ்சாயத்தை சுமூகமாக பேசி முடித்துவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியன் 3 படத்துக்காக ஷங்கரும், கமலும் சம்பளம் வாங்க போவதில்லையாம்..
ரஜினியின் வளர்ச்சியை கமல் மறைமுகமாக தடுத்துள்ளதாகவும், கமலை வாழ்த்துவது போல பேசி, ரஜினி காலை வாரி விடுவார் என்றெல்லாம் விமர்சனம் உண்டு..அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது..
கதையிலும், கதை தேர்வையும் இருவருமே விட்டுக் கொடுத்ததில்லை.. மகரிஷி எழுதின ஒரு நாவல், மிகப் பிரபலமாகி கொண்டிருந்தது.. அதை படமாக எடுக்க பலரும் நினைத்தார்கள்.. அந்த நாவலை, மறைந்த பிரபல டைரக்டர் ஆர்.சி. சக்தி படித்து பார்த்தார்.. பிறகு கமலை அழைத்து,, மகரிஷி நாவலை படமாக எடுக்க நினைக்கிறேன் என்று சொல்லி உள்ளார்..
கமல் ரஜினி நட்பு
உடனே கமல், படமாக எடுக்க சாத்தியமில்லை என்றார்.. ஆனாலும், ஆர்.சி. சக்திக்கு அதை படமாக எடுத்தாக வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி கொண்டேயிருந்தது.
இந்த நேரத்தில் ஏவிஎம் புரடக்ஷன் மேனேஜராக இருந்த மணி என்பவர், ஏவிஎம்மிலிருந்து வெளியே வந்து சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க முடிவெடுத்தார்.. இதற்காக பஞ்சு அருணாசலத்தை சென்று சந்தித்து பேசினார்.. அப்போது பஞ்சு அருணாசலம், மகரிஷி நாவலை படமாக எடுக்கலாம் என்றார்.
சிவக்குமார் வில்லன்
இதையடுத்து நாவல் உரிமையை பெற்று, படவேலைகளில் இறங்கினார்கள்.. சம்பத் என்ற ஹீரோ கேரக்டருக்கு சிவக்குமாரும், நாகராஜ் என்ற ஹீரோ வில்லன் கேரக்டருக்கு ரஜினியும் முடிவானது.. பிறகு திடீரென பஞ்சு அருணாசலம், சிவக்குமாரை வில்லனாகவும், ரஜினியை ஹீரோவாகவும் போடலாமே? என்று மாற்றி யோசித்தார். இதை சிவக்குமாரிடம் சொல்லவும், தனக்கு அது சரியா வருமா? என்று சந்தேகத்திலேயே ஒப்புக் கொண்டாராம்.
பிறகு ரஜினியிடம் சொல்லவும், அவரும் தனக்கு இந்த கேரக்டர் பொருந்துமா? ஹீரோவாக தான் நடிப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா? என்றும் தயங்கி சம்மதித்துள்ளார்..
முதல்நாள் ஷூட்டிங்கில் ரஜினிக்கான நீளமான டயலாக்கை, ரஜினியிடம் படித்து காட்டினார் அசோசியேட் டைரக்டர் எஸ்பி முத்துராமன்.. இதைக்கேட்டதுமே செட்டிலிருந்து வெளியேறி, ஏவிஎம் வாசலை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாராம் ரஜினி..
இது சரிப்பட்டு வராது
பிறகு மீண்டும் திரும்பி வந்து, எஸ்பி முத்துராமனிடம், "இது நமக்கு சரிப்பட்டு வராது? இவ்வளவு பெரிய வசனத்தை பேச முடியாது.. கமல் செய்ய வேண்டியதை எனக்கு தர்றீங்களே? என்று கேட்டாராம்..
அப்போது எஸ்பி முத்துராமன், டயலாக்கை பிரித்து பேசினாலும் பரவாயில்லை என்று சொல்லி தைரியம் தந்துள்ளார். அந்த படம்தான் புவனா ஒரு கேள்விகுறி..
அடர்த்தியான அந்த கதைக்கு, கமல்தான் சரி என்று அன்றே சொன்னவர் ரஜினிகாந்த்.. வேறு எந்த நடிகரின் பெயரையும் ரஜினி சொல்லவில்லை.. கமலின் நடிப்பின் மீதிருந்த நம்பிக்கையே இதற்கு காரணம்.
புவனா ஒரு கேள்விக்குறி
எனினும், பஞ்சு அருணாசலம், எஸ்பி முத்துராமன் தந்த ஊக்கம்தான், ரஜினியால் அந்த படத்தில் நடிக்க முடிந்தது. ரஜினிக்கு நடிக்கவும் வரும் என்பதை முதன்முதலில் நிரூபித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி.
அதனால்தான், பஞ்சு அருணாசலத்தை கடைசிவரை மறக்காமல் இருந்தார் ரஜினி.. இப்படி பல சாதனைகளை புரிந்த கமலும், ரஜினியும், தொடர்ந்து நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதைதான் நேற்றைய சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications