நாங்க தான் அப்பவே சொன்னோம்ல..!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் தீயசக்திகள் இருப்பதாக மும்தாஜ் இப்போது தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த மாதமே இது குறித்து நாம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளோம்.
பிக்பாஸ் சீசன் 2விற்காக சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட வீடு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதே இடத்தில் தான் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை பிக்பாஸ் வீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர்.
சீசன் 2 ஆரம்பிப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை அழைத்து போட்டியாளர்கள் தங்கப் போகும் வீட்டை காண்பித்தார்கள். அப்போது அங்கு கிடைத்த தகவலின்படி, அவ்வீடு வாஸ்துப்படி உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அப்பவே சொன்னோம்ல:
கூடவே, தீயசக்திகள் அவ்வீட்டை நெருங்காமலிருக்க, அங்கு தாயத்து, தகடு போன்றவை புதைக்கப்பட்டிருப்பதாகவும் காது வழிச் செய்தி கிடைத்தது. இது குறித்து அப்போதே நாம் செய்தியும் வெளியிட்டோம்.

பேயைப் பார்த்த மும்தாஜ்:
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவ்வீட்டில் பெண்கள் தங்கும் அறைப் பகுதியில் தீயசக்தி இருப்பதாக போட்டியாளர்களின் ஒருவரான மும்தாஜ் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் நமக்குக் காட்டப்படவில்லை. ஆனால், மும்தாஜும், ரித்விகாவும் இது குறித்துப் பேசியதை பாலாஜி, டேனியிடம் கூறினார்.

ரகசிய டாஸ்கா?
நிஜமாகவே மும்தாஜ் பேயைப் பார்த்தாரா அல்லது நடிப்பா என்பது குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஏற்கனவே தண்ணீர் டாஸ்கின் போது, மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் அவர் ரகசிய டாஸ்க் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

பேய்:
இதேபோல், கடந்த முறையும் போட்டியாளர்களுக்கு பேய் டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது. அதேபோல், இம்முறையும் தரப்படலாம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எது எப்படியோ நிச்சயம் பிக் பாஸ் சீசன் 2வில் இப்படி ஒரு பேய்க் காட்சி வரும் என நாம் முன்பே சொல்லி இருந்தது இங்கே நினைவுக் கூரத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications