நித்யாவுடன் இணைந்து விட்டார் பாலாஜி.. பிக் பாஸ் செஞ்ச ஒரே நல்ல காரியம்!
பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின்மூலம் பிரிந்த தம்பதியான பாலாஜி-நித்யா மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
நித்யா-பாலாஜிக்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முன்பிருந்தே பிரிவினை ஏற்பட்டுவிட்டது. எதற்காக இருவரும் பிரிந்தார்கள் என்பதற்கு இரு தரப்பிலும் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
இந்த குடும்ப விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. யார் மீது தவறு என்றே தெரியாமல் மக்கள் குழம்பினர். இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நடிகர் சிம்புவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியில்தான் முடிந்தது.

கவனித்த மக்கள்
இந்த நிலையில்தான் தம்பதி இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளர்களாக நுழைந்தார்கள். டி.ஆர்.பி. ரேட் ஏற்றத்தான் விஜய் டிவி இந்த தந்திரத்தை கையில் எடுத்துள்ளது என்று பார்வையாளர்கள் அனைவருமே நினைத்தார்கள். அதன்படியே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாலாஜி-நித்யாவின் நடவடிக்கைகளை மக்கள் கொஞ்சம் ஆர்வத்துடனே கண்கள் அலைபாய்ந்து பார்த்தார்கள், உன்னிப்பாக கவனித்தார்கள்.

கமலின் அறிவுரைகள்
அப்போதுதான் ஒருசில நிஜங்களை மக்கள் உணரதொடங்கினார்கள். நித்யாவின் மீது கரிசன பார்வை விழ ஆரம்பித்தது. பாலாஜி மீது கமல் உட்பட அனைவருக்கும் கண்டன வார்த்தைகள் எழ ஆரம்பித்தன. இவர்களின் இருவருக்குள் இருக்கும் விரிசல், காரணங்கள், போன்றவற்றை கமல் கவனித்ததாலோ என்னவோ, நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே பாலாஜியை மூத்த சகோதரர் என்ற முறையில் கண்டிக்க ஆரம்பித்தார், அறிவுரைகளை அள்ளி வழங்கினார்.

அவமானத்தில் பாலாஜி
பொதுமக்கள் முன்னிலையிலும், கமலின் முன்னிலையிலும், ஏன் பெற்ற குழந்தை பௌசிகா முன்னிலையிலும் பாலாஜி ரொம்பவே அவமானப்பட்டார். போதாக்குறைக்கு ஐஸ்வரியாவின் குப்பை கொட்டும் சம்பவமும். ஒட்டுமொத்தமாக பாலாஜி தன்னை பற்றி நிறையவே உணர ஆரம்பித்திருக்கிறார். தன் மீதும் உள்ள தவறுகளை தனிப்பட்ட முறையில் யோசித்து பார்த்திருக்கிறார்.

பகிரங்க அறிவிப்பு
நிம்யா, பௌசிகாவின் நினைவும், அவர்களுடன் வாழ வேண்டும் என்ற உந்துதலும் பாலாஜிக்கு நிறையவே ஏற்பட தொடங்கியது. ஒருகட்டத்தில் ஆதங்கமாகவும் வெளிப்பட்டது. ஆனால் 9 வருடம் குடும்பம் நடத்திய நித்யாவோ, பாலாஜியின் மனம் திருந்திய பேச்சை எடுத்தவுடன் நம்பவில்லை. பாலாஜி யோசிக்கவும், தன்னை மனப்பூர்வமாக இன்னும் உணரவும் நிறைய அவகாசம் கொடுத்தார். அதன்படியே காலமும் கூடி வந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் மகளுக்காக பாலாஜியுடன் இணைவதாக பகிரங்கமாக அறிவித்தார். பாலாஜி மீண்டும் தண்ணி அடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது, சந்தேகப்படுவது போன்றவற்றை விடுவார் என தான் நம்புவதாகவும் கூறினார்.

ஜெயித்தது நித்யாதான்
காலம் சிறந்த ஆசிரியர் என்பதற்கு பாலாஜியின் மனம் திருந்துதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதில் பிக்பாஸ் மற்றும் கமலின் பங்கு அதிகமாக இருந்தாலும் நித்யாவின் அணுகுமுறை, நித்யா பாலாஜிக்கு அளித்த காலஅவகாசம், மனம் திருந்திய கணவனை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை போன்றவையே ஜெயித்து நிற்கிறது. இன்றைய இளம் பெண்கள் நித்யாவின் இந்த செயல்பாட்டை நிச்சயம் கவனித்து கற்றுக் கொள்ள வேண்டும்!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications