பிக் பாஸ் எனக்கு மாமியார் வீடு, அபிஷேக்கின் அட்ராசிட்டி... வெங்கட்பிரபுவின் அறிவுரை
சென்னை: பிக் பாஸ் பற்றி அபிஷேக் ராஜா பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
இரண்டு முறை உள்ளே சென்று வந்ததால் இந்த மாதிரி பேசுகிறாரா? ?என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் எனக்கு மாமியார் வீடு என்று அபிஷேக் கூறியதை கேட்டு நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கலாய்க்க தொடங்கி விட்டார்கள்.

நெகட்டிவ் கமெண்ட்களுக்கு கவலை இல்லை
சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும் ஒரு யூடியூபராகவும், படங்களை ரிவ்யூ செய்பவராகவும் இருக்கும் அபிஷேக் தன்னைத்தானே சினிமா பையன் என்று அழைத்துக் கொண்டு பலருக்கும் பரிச்சயமாக இருக்கின்றார். அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அதுவரைக்கும் திரைத்துறையினரும் ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருந்த அபிஷேக் ராஜா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத் திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் மாறிவிட்டார். எவ்வளவு தான் நெகட்டிவ்வர்ஸ் இவரை கலாய்த்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றிக் கூட கவலைப்படாமல் தன்னுடைய கருத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் இவருக்கு நிகர் இவர் மட்டும் தான் என்று பலர் கூறிவருகின்றனர்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசனில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அபிஷேகத்திற்கு கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக ஆரம்பத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், இவர் அதிக நாட்கள் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இல்லை. ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவருடைய துடுக்குத்தனம் மற்றும் யதார்த்தமான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுக்கும் ஒரு போட்டியாளராக இவர் இருந்ததால் மீண்டும் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி
இரண்டாவது முறை இவர் உள்ளே வந்ததும் பலருக்கு அதிர்ச்சியாகவும், ஒருசிலருக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் மீண்டும் இரண்டு வாரத்தில் இவர் வெளியேறுவார் என்று இவர் கூட நினைத்திருக்க மாட்டார். என்னதான் இவர் கத்திப் பேசி கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தாலும் எதற்காக ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை என்பது பலருக்கும் கேட்கக்கூடியதாக தான் இருந்துவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் தன்னுடைய ரிவ்யூவை தொடங்கிவிட்டார். அதுவும் தற்போது டாப்பில் வலம் வந்து கொண்டிருக்கும் மாநாடு திரைப்படத்தை பற்றி இன்னும் ரிவ்யூ கொடுக்கவில்லை என்று அந்தப் படத்தைப் விரைவில் கொடுத்து விடுவேன் என அபிஷேக் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் அறிவுரை
நான் மாநாடு படத்தை பார்த்து விட்டேன் அந்த படத்த பத்தி ரிவ்யூ இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அருகில் வெங்கட்பிரபு வந்து விடுகிறார். மாநாடு படத்தைப்பற்றி என்று இழுத்துக் கொண்டிருக்கும் போது நீ பண்ணாமல் இருந்தால்தான் மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். தயவுசெய்து பண்ணாதே என்று கூறியிருக்கிறார். அதற்கு தனக்கே உரிய மழுப்பல் தனத்தோடு படம் சூப்பராக இருக்கிறது என்று ஆரம்பித்து கொண்டிருக்கிறார். உடனே வெங்கட்பிரபு நீ இப்படி வந்தால் நான் அந்த பக்கமா வருகிறேன் என்று, எப்படி நீ பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு முறை போய் வெளியே வந்தாய் என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதற்கு அபிஷேக் பிக்பாஸ் வீடு எனக்கு மாமியார் வீடு அதனால்தான் அடிக்கடி போயிட்டு வருகிறேன். இப்போது மூன்றாவது முறையாக அழைத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் வழக்கம்போல நெட்டிசன்கள் அபிஷேக்கை கழுவி ஊற்றி வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications