பிக்பாஸ் 2: நடிக்கத் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் ‘கையும் களவுமாக’ மாட்டிக் கொண்ட ஓவியா!
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சில மணி நேரங்கள் நடித்தார் நடிகை ஓவியா.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவு குறைவாகத் தரப்படும் என்ற உண்மையை பப்ளிக்காக போட்டுடைத்துள்ளார் நடிகை ஓவியா.
பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இரண்டாவது சீசனில் சிறப்பு விருந்தினராக சில மணி நேரங்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இவர் வசித்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் போட்டியாளர்களில் ஒருவராக நடிக்க வேண்டும் எனச் சொல்லி தான் ஓவியாவை கமல் உள்ளே அனுப்பினார். ஓவியாவும் கையில் பெட்டியுடன் போட்டியாளர் போன்றே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

அப்செட்:
ஆரம்பத்தில் சக போட்டியாளர்கள் அவரை நிஜமாகவே சீசன் 2 போட்டியாளர் என்றே கருதினர். இதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்குமே என்ற கவலை அப்பட்டமாக அவர்கள் முகத்தில் தெரிந்தது.

சமாளிப்பு:
ஆனால், நீண்ட நேரம் இந்த நிலை நீடிக்கவில்லை. மகத் உள்ளிட்டோர் ஓவியாவைச் சுற்றிச் சுற்றி வந்து அவர் நிஜமாகவே இம்முறையும் போட்டியாளரா என விசாரித்தனர். ஓவியாவும் முடிந்தவரை சமாளித்தார்.

ஒரு பெட்டி தானா?
போட்டியாளர் என்றால் ஏன் ஒரு பெட்டியுடன் வந்துள்ளீர்கள்? எங்களுக்கெல்லாம் இரண்டு தந்துள்ளார்களே என அவர்கள் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு ஓவியா கொஞ்சம் பதில் சொல்ல தடுமாறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகமானது.

குட்டு உடைந்தது:
அதன் தொடர்ச்சியாக அவரது பெட்டியைப் பிடுங்கி அவர்கள் சோதித்துப் பார்த்தனர். உள்ளே வெறும் வாட்டர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்பது உறுதியானது.

பிக்பாஸ் உத்தரவு:
ஓவியாவும் அப்ரூவராக மாறி, பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் அவரை உடனடியாக வீட்டில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். ஓவியாவும் அதன்படி வீட்டை விட்டு வெளியேறினார்.

பைனல் டச்:
முன்னதாக வீட்டில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு குறைவாகத் தான் கிடைக்கும் என்ற உண்மையைப் போட்டுடைத்தார். முதல் சீசனின் போது, 55 கிலோ எடையுடன் வந்த தான், வெளியேறும்போது 50 கிலோவாக எடை குறைந்ததாகத் தெரிவித்தார். அதோடு, வீட்டை விட்டு வெளியேற மெயின் கதவு அருகேச் சென்ற ஓவியா, அங்கிருந்த போட்டியாளர்களைப் பார்த்து, ‘உங்களை எல்லாம் பார்க்க பாவமாக இருக்கிறது. இங்க என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்' என போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் சென்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications