பிக் பாஸ் 6: தலையில் அடிபட்ட மகேஸ்வரி..தளராமல் சண்டை .. இதுதான் அதுவாம்? யாரை சொல்கிறார் தெரியுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இன்று நடந்த நிகழ்வுகளில் சண்டை கோழியாகவும் சமாதான புறாக்களாகவும் மாறி மாறி விஜே மகேஸ்வரியும் சாந்தியும் பேசிக் கொண்டது பிக் பாஸ் ரசிகர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

தலையில் அடிபட்ட மகேஸ்வரிக்கு ஆதரவாகவும், மண்ட வீங்கினாலும் தொண்டை கிழிய வம்பு இழுக்கும் மகேஸ்வரியை கலாய்தும் கமெண்ட்களில் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

 வம்பு இழுக்கும் போட்டியாளர்கள்

வம்பு இழுக்கும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் ஆரம்பம் முதலில் இருந்து இதுவரை சில போட்டியாளர்களின் பெயர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் தெரிந்திருக்கும் பட்சத்தில் தங்களது ஆட்டிட்யூட் மூலம் தங்கள் தனித்தன்மையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு பல போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் வம்பு இழுக்கும் செயலை மேற்கொண்டு வருகின்றனர்.அதிலும் விஜே மகேஸ்வரி தன் சக அணியை சேர்ந்த சாந்தியுடன் வாய் வார்த்தையில் மோதிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

கமலின் தீவிர ரசிகை

கமலின் தீவிர ரசிகை

இன்று காலையில் அனைத்து போட்டியாளர்களும் சகஜமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தான் கமலின் தீவிர ரசிகை என்றும் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் பணியாற்றி இருந்தாலும் கமலுடன் இணைந்து அன்பே சிவம் படத்தில் ஒரு பாட்டிற்கு மட்டுமே பணிபுரிவதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அதையும் கமல் ஞாபகம் வைத்திருப்பாரோ!? என்னவோ!? என்று சாந்தி புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், டாஸ்க்கின் படி பஸர் அழுத்துவதற்கான அலாரமை பிக் பாஸ் ஒலிக்க விட்டார்.

தலையில் ஏற்பட்ட வீக்கம்

தலையில் ஏற்பட்ட வீக்கம்

பஸர் அழுத்துவதற்காக போட்டியாளர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த வேளையில் விஜே மகேஸ்வரியும் ஓட முயற்சித்து கதவில் பலமாக முட்டிக் கொண்டார். இதைப் பார்த்து பதறிய சக போட்டியாளர்கள் விஜே மகேஸ்வரியின் தலையில் ஏற்பட்ட வீக்கத்தை தேய்த்து விடுவதும், பிக் பாஸ் இடம் மருந்து கேட்பதுமாக பரபரப்பாக அவரை சுற்றி நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பின்பே இதை கவனித்த சாந்தி, மகேஸ்வரியிடம் தலையில் அடிபட்டதை குறித்து விசாரிக்க, பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரமாக வந்து கேட்டுவிட்டீர்களே!? என்று நக்கலாக கூறுகிறார்.

பாச சண்டை

பாச சண்டை

விஜே மகேஸ்வரியின் நக்கலான பதிலைக் கேட்டு அப்சட்டான சாந்தி வழக்கம்போல் சக போட்டியாளர்களிடம் அமர்ந்து கொண்டு வருத்தப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். பின்பு அவராகவே அவரை சமாதானப்படுத்திக் கொண்டு விஜே மகேஸ்வரியிடம் சென்று, 'நான்.. நீ கூறிய பதிலை கேட்டு முதலில் வருத்தப்பட்டாலும்.. அது என் மீது இருக்கும் பாசத்தை தான் காட்டுவதாக கூறி சமாதானம் ஆகியுள்ளார். அதுதான் உண்மை என்று ஆமோதித்த விஜே மகேஸ்வரியும் சாந்தியுடன் சமாதானம் ஆகி இருக்கிறார். இதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்கள் "ஓ.. இதுதான் பாசத்துல சண்டை போடுறதோ..!?? என்று கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+