என்னை சிகரெட் பிடிக்காதுன்னு சொன்ன விசித்திரா இப்படி பண்ணலாமா? கடும் கோபத்தில் ஷகிலா
சென்னை: நடிகை ஷகிலா பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்திரா பற்றி கோபத்தில் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதாவது நான் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்ற போது அங்கு சிகரெட் பிடிக்காத என்று விசித்திரா கூறி இருந்தார். ஆனால் இப்போ விசித்திரா செய்தது சரியா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தெலுங்கு நடிகர் ஒருவர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்து விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் வெளிப்படையாக பேசியதை வைத்து இப்போது ஷகிலா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இதுவரைக்கும் சண்டை சச்சரவுகளோடு இருந்து வந்த நிகழ்ச்சி கடந்த வாரம் முழுக்க உறவினர்களின் வருகையால் கலகலப்பாக மாறி இருந்தது. பல செண்டிமெண்ட் காட்சிகளும் கண்ணீர் காட்சிகளும் அலைமோதிய பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லா போட்டியாளர்களும் தங்களுக்குள் இருந்த கோபம் வன்மத்தை மறந்து ஒரே அணியாக. மாறி இருக்கின்றனர்.

இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா கூட்டணி, அர்ச்சனா கூட்டணி என்று இரண்டு கூட்டணி தனித்தனியாக இருந்த நிலையில் இப்போது எல்லோரும் ஒன்றாக ஒரே கூட்டமாக மாறி இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகிலா விசித்ராவை பற்றி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்கு நான் இப்போ போனால் விசித்திராவை நல்லா கேட்பேன்....
ஏன்னா பிக் பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்கில் விசித்திரா சொன்ன அந்த தெலுங்கு நடிகர் பற்றி தான்.... எதுக்காகன்னா தமிழ் பிக் பாஸை ஆந்திர மக்களோ கேரளா மக்களோ பார்ப்பதில்லை. ஆனாலும் இந்த விஷயம் லீக் ஆனதும் அவர்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் தெரியுமா? எனக்கு பயமா இருக்கு விசித்ராவுக்கு எதுவும் நடந்திருமோன்னு! ஆனா எனக்கு விசித்திரா மேல பொறாமை எல்லாம் கிடையாது.

அவ மேல இருக்கிற அக்கறையில் தான் நான் இப்போ இதை பத்தி பேசுறேன். விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் போய் அவளுக்கு நடந்த அந்த விஷயத்தை பேசி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.... ஆனால் நான் தெலுங்கு பிக்பாஸுக்குள் போகும்போது என்னிடம் தயவு செய்து சிகரெட் பிடிக்காதே என்று விசித்திரா சொல்லித்தான் அனுப்புனா.
ஆனாலும் என்னால அங்க சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியல. நான் சிகரெட் பிடித்த அந்த போட்டோ வெளியாகி வைரலானது. நாங்க என்ன நடந்தாலும் அன்பாக தான் இருக்கிறோம். ஆனால் இப்போ விசித்திராவுக்கு எதுவும் நடந்திட கூடாது என்கிற பயம் எனக்கு இருக்கு என்று அந்த பேட்டியில் ஷகிலா பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications