நிக்சன் விஷயத்தில் நான் பேசியது தப்புனா பிக் பாஸ் மட்டும் அப்படி செய்யலாமா? அர்ச்சனா கேட்ட கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அர்ச்சனா இன்று முதல் முறையாக பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் தான் இதுவரைக்கும் எதனால் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்பது பற்றியும் விரிவாக பேசியிருந்தார். அதில் நீங்கள் வினுஷாவை பற்றி நிக்சனிடம் பேசியது சரியா தவறா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு நிக்சனிடம் நான் விஷ்ணுவோடு சண்டை போடும்போது வினுஷாவை பற்றியது பேசியது தவறு என்று சொன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் வினுஷா பற்றி வினுஷா இல்லாத நேரத்தில் கேள்வி கேட்டதும் தவறு தானே என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் மேலும் சில விஷயங்களையும் அர்ச்சனா பகிர்ந்திருந்தார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடத்த ஜனவரி 14-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்திருந்தது. இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் இது இணையத்தில் இப்போதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் அர்ச்சனா வெற்றி பெற்றதை ஆதரித்து வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சில அர்ச்சனா பி ஆர் டீம் வைத்து ஜெயித்து விட்டார் என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையிலும் அர்ச்சனா எந்த பேட்டியும் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அர்ச்சனா பதில் அளித்திருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிக்சன் மற்றும் விஷ்ணு இருவரும் சண்டை போடும் போது நீங்கள் வினுஷாவை பற்றி பேசியது சரியா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதாவது கமல்ஹாசன் கூட வினுஷா இல்லாத இடத்தில் அவரைப் பற்றி நீங்க இங்கே பேசியது தவறு என்று குறிப்பிட்டு இருந்தார் அதைப்பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டிருந்தனர். இந்த நிலையில் அதற்கு அர்ச்சனா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது நான் விஷ்ணு மற்றும் நிக்சன் சண்டை போடும்போது வினுஷாவை பற்றி பேசியது தவறு என்று பலர் சொல்கிறீர்களே அதற்கு முந்தைய நாள் ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதாவது கல்லூரி டாஸ்க் அப்போது நிக்சன் நான் ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது அழுததை பற்றி அப்போதும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நான் பேசினால் மட்டும் தவறா. அதுபோல வினுஷா இல்லாத இடத்தில் வினுஷாவை பற்றி பேசியது தவறு என்று எல்லோரும் சொல்கிறார்கள். அப்படி என்றால் வினுஷா இல்லாத நேரத்தில் தானே அந்த ஸ்கிரீனில் வினுஷாவை பற்றி நிக்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது அது மட்டும் சரியா? வினுஷாவை பற்றி பிக் பாஸ் ஸ்கிரீனில் கேள்வி கேட்ட பிறகு தானே நானும் கேட்டேன்.
எனக்கு வெளியே இந்த விளையாட்டு எந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியாது. உள்ளே நடக்கும் நிகழ்வுகளை வைத்து நான் பேசியது சரி என்று நினைத்து அப்போது நிக்சனிடம் கேள்வி கேட்டேன் ஆனால் நிக்சன் ஒரு கட்டத்தில் ரொம்ப கோபமாகி எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு போய்விட்டார். அதனால் நான் அதை விட்டு விட்டேன். என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications