விசித்ராவிற்கு நான் போன் பண்ண மாட்டேன்.. காரணம் இதுதான்.. பிக் பாஸ் ரகசியத்தை அம்பலப்படுத்தி அர்ச்சனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஜெயித்த அர்ச்சனா முதல்முறையாக பேட்டியில் பேசி கொண்டிருக்கிறார். அதில் தனக்கு ஆரம்பத்தில் பாதுகாப்பாக இருந்த விசித்திரா குறித்து பேசி இருக்கிறார்.

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிலர் என்னிடம் ஃபோன் பண்ணி பேசினார்கள். ஆனால் விசித்திரா இன்னும் போன் பேசவே இல்லை. அவருக்கு நான் போன் பேச மாட்டேன். ஆனால் அவர் போன் செய்தால் என்னுடைய மனநிலை இதுதான் என்பது பற்றி தெளிவான தன்னுடைய விளக்கத்தை அர்ச்சனா கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அவர்களுடைய வேலையை பார்க்க தொடங்கிவிட்டனர். ஒரு சில போட்டியாளர்கள் இப்போதுதான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சனா இப்போதுதான் பேட்டி கொடுக்க தொடங்கியிருக்கிறார்.

Bigg Boss 7 Archana say about Vicithra still didnt call

டைட்டில் வெற்றி பெற்ற பிறகும் அது குறித்து எந்த பதிவுகளையும் வெளியிடாமல் இருந்த அர்ச்சனா இப்போது பேட்டிகளில் தனக்கு வாக்கு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு தான் பிஆர் டீம் வைத்து தான் ஜெயித்தேன் என்று பரவி வந்த வதந்திகளுக்கும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பித்துள்ள தனக்கு அதிகமான பாதுகாப்பு கொடுத்து தான் உடைந்து போன நேரத்தில் ஆறுதல் கூறிய விசித்திரா பிறகு மாறிய விதம் குறித்தும் பேசி இருக்கிறார்.

அதாவது விசித்திரா அம்மா மட்டும் ஆரம்ப நேரத்தில் எனக்கு துணையாக இல்லாமல் இருந்திருந்தால் நான் அப்போதே உடைந்து போய் இருப்பேன். இந்த அளவிற்கு நான் வெற்றி பெற்றிருக்கவும் மாட்டேன். இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருக்கவே மாட்டேன். அந்த அளவிற்கு எனக்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தார். ஆனால் அதற்கு பிறகு ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டு மனம் மாறிட்டாங்க.

நான் விசித்திரா அம்மாவை பற்றி அவர் இல்லாத நேரத்தில் தவறாக பேசுவதாக சிலர் விசித்திராவிடம் ஏற்றி விட்டிருக்காங்க. அதை அவரும் நம்பிவிட்டார். என்னிடம் அப்பப்போ நீ என்ன பற்றி புறம் பேசுற என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் எந்த இடத்திலையும் தெளிவா நான் சொல்றதை அவங்க நம்பவே இல்ல. மாயா குரூப் எப்போதுமே ஜாலியா பேசிக்கிட்டு இருப்பாங்க. அவங்க கூட விசித்திரா மேடம் அப்படியே செட் ஆகிட்டாங்க.

நானும் கூட மாயா குரூப் பேசுவதை கேட்டு சிரித்து இருக்கேன். அவங்க ஜாலியா இருக்கிறது எல்லாருக்குமே பிடிக்கும். அதுக்காக என்னை அப்படியே விட்டுட்டாங்க. நான் அதை குறித்து தான் பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை விசித்ரா மேம் கிட்ட நேரடியாகவே சொல்லி இருக்கேன். அவரிடம் ஒருமுறை கூட கயிறை கொடுத்து உங்களை யாரோ இந்த கயிறால் கட்டி போட்டு இருக்காங்க. விசித்திரா மேடம் நீங்க அதுல இருந்து வெளியே வாங்க என்றுலாம் சொல்லி பார்த்தேன்.

ஆனா அவங்க மாறல பிக் பாஸுக்கு பிறகு எனக்கு பல போன் பண்ணாங்க அதாவது தினேஷ், கூல் சுரேஷ், பூர்ணிமா, விஜய் ப்ரோ,விஷ்ணு என பலர் போன் பண்ணாங்க விசித்ரா மேடம் மட்டும் இன்னும் போன் பண்ணல. நான் அவங்களுக்கு போன் பண்ண மாட்டேன். ஏனென்றால் அவங்க என்ன மாதிரி மன நிலையில் இருக்கிறாங்கனு எனக்கு தெரியாது. அவங்க என்கிட்ட பேசணும்னு நினைக்கிறாங்களா? இல்லையானு தெரியல? அதனால அவங்களா போன் பண்ணா கண்டிப்பா நான் அவங்க கிட்ட பேசுவேன். அவங்கள மீட் பண்ண போவேன் என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+