மாயாவுக்கு போஸ்ட் போட 100 ரூபாய் பேரம்.. இணையத்தில் வலம் வரும் ஸ்க்ரீன் ஷாட்.. பிக் பாஸ் வைத்த செக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மாயாவிற்கு ஆதரவு அளித்து போஸ்ட் போட சொல்லி இணையத்தில் பேரம் பேசப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரல் ஆக வருகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பி ஆர் டீம் பற்றி கேள்வி கேட்டு பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

பிக் பாஸ்சில் ஓட்டு போடுவதற்கு யாரெல்லாம் பணம் கொடுத்து பிஆர்டீம் செட் பண்ணி வைத்திருக்கிறார்கள் என்று நீங்க நினைக்கிறீர்களோ அவர்களை பற்றி சொல்லுங்க என்று பிக் பாஸ் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் எல்லா போட்டியாளர்களும் அர்ச்சனாவை டார்கெட் செய்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வெளியே மாயாவிற்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் போடுவதற்காக ஒரு ஃபேன்ஸ் பேஜியிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரிடம் 100 ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் அர்ச்சனாவுக்கு அளவுக்கு அதிகமான ஓட்டுகள் கிடைப்பதால் அவருக்கும் வெளியே பி ஆர் வேலை செய்து இருக்கிறார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கும் நிலையில் பல ரகசியங்கள் இன்று அம்பலமாக இருக்கிறது.

bigg boss 7 contestant bargain of 100 rupees to post Maya Screen shot that is crawling

சமீப காலமாக பி ஆர் வைத்து வேலை பார்ப்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. தங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களில் தொடங்கி இப்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் வரை பலர் பி ஆர் வைத்து வேலை செய்து வருகிறார்கள். இதுகுறித்து அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஆதாரத்தோடு யாரும் மாட்டாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மாயாவிற்கு குறிப்பிட்ட ஒரு பேன்ஸ் பேஜிலிருந்து இன்னொரு நபரிடம் நீங்கள் மாயாவுக்கு ஆதரவாக ஒரு போஸ்ட் மற்றும் ஸ்டோரி வைப்பதற்காக நாங்கள் 100 ரூபாய் கொடுப்போம் என்று பேரும் பேசி இருக்கிறார்கள். அதற்கு அந்த நபர் எனக்கு இந்த பணம் போதாது என்று சொல்ல மேலும் தாங்கள் பணம் கொடுக்க இருப்பதாகவும் அந்த பேஜிலிருந்து பேசப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிக் பாஸ் இன்று காலையில் மார்னிங் டாஸ் ஒன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதில் நீங்கள் யாரெல்லாம் வெளியே ஓட்டு போடுவதற்காக பிஆர் செட் பண்ணி வைத்துவிட்டு வந்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களை பற்றி சொல்லலாம் என்று சொல்ல அதற்கு விஜய் வர்மாவில் தொடங்கி விசித்திரா வரைக்கும் அனைவரும் அர்ச்சனாவின் பெயரை சொல்லி இருக்கிறார்கள்.

இதனால் அர்ச்சனா கோபமாகி எனக்கு பிஆர்க்கு பணம் கொடுத்து ஓட்டு போட வைக்கிற அளவுக்கு வசதி கிடையாது. நானே ஒரு வருஷமா எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் இருக்கிற பெயரும் கெட்டுப் போகும் என்று எனக்கு தெரியும்... இருந்தும் நான் வந்ததுக்கு காரணமே எனக்கு பணம் தான்.

அந்த பணம் என்னிடமிருந்து இருந்தால் நான் என்னுடைய பிசினஸில் போட்டு இருப்பேன். நான் பிஆர்க்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குற அளவுக்கு பெரிய ஆள் கிடையாது என்று சொல்லி இருந்தார். ஆனாலும் கடைசியில் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு இடையே வாக்குவாதம் வெடித்தது. இப்ப வரைக்கும் அந்த வாக்குவாதம் லைவில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

bigg boss 7 contestant bargain of 100 rupees to post Maya Screen shot that is crawling

ஆனால் வெளியே மாயா பற்றிய ஸ்கிரீன் ஷாட் வைரல் ஆகி வருவது உள்ளே தெரியாமல் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சேர்ந்து அர்ச்சனாவுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கூட விசித்ராவிற்கு ஆதரவாக அர்ச்சனாவிடம் மாயா பேசியிருக்கும் நிலையில் உங்க குட்டு உடைந்து போச்சு நீங்க எதற்காக இன்னொருவருக்கு விளக்கம் கொடுக்குறீங்க என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் இந்த வாரம் விசாரிப்பாரா? அல்லது வழக்கம் போல மாயா குரூப்புக்கு ஆதரவாக பேசுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+