Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேற்று பிக் பாஸில் நடந்த “அந்த” சம்பவம்.. பலருக்கும் ‘பாடம்’ இதை தவிர்த்து இருக்கலாம்.. மாற்றம் வருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில சம்பவங்கள் நடைபெற்றது. அது பலருடைய வாழ்க்கையிலும் நடைபெற்று கொண்டிருப்பது தான். அதை லைவாக பார்க்கும் போது நாமும் இந்த மாதிரி தப்பு செய்து விடக்கூடாது என்று மக்களுக்கு புரிந்து இருக்கும். அதனாலையோ என்னவோ பிக் பாஸ் அதை கட் பண்ணாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது நேற்று தன்னிடம் வேலை சொன்ன ரவீனாவை திட்டுவதற்கு பதிலாக விசித்ரா தினேஷை சம்பந்தம் இல்லாமல் அவருடைய பர்சனல் வாழ்க்கையை குறித்தும் பேசி இருந்தார்.

நமக்கு பிடிக்காதவர்கள் எப்போதும் நம்மை பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள், நமக்கு எதிராகத்தான் திட்டம் தீட்டி கொண்டு இருப்பார்கள் என்று நேற்று விசித்திரா பேசிக் கொண்டிருந்த விதத்தைப் பார்க்கும்போது பல சம்பவங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.

Bigg Boss 7 contestants Vichithra also scolding Raveena and Dinesh

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு உளவியல் சார்ந்த நிகழ்ச்சி தான். என்னதான் படித்து பெயரும் புகழோடு இருந்தாலும் இந்த வீட்டிற்குள் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்து பெயரும் புகழையும் இழந்தவர்கள் ஏராளம். காரணம் இங்கே உண்மையாக ஒருவர் மனநிலை எப்படி இருக்குமோ அப்படியே வெளிப்படுத்தி விடுவார்கள்.

ஒரு சில நாட்கள் வேண்டும் என்றால் யாராலும் நடிக்க முடியும். ஆனால் 24 மணி நேரமும் தினமும் யாராலும் நடித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் பலருடைய உண்மை குணங்கள் வெளிச்சத்துக்கு வந்து விடுவது இயல்புதான். அதுபோல சமுதாயத்தில் படித்தவர்களும் தெரியாமல் பல தப்புகளை செய்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டவும் செய்திருக்கிறது.

அந்த வகையில் நேற்று நடந்த சில சம்பவம் குறித்து தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகை விசித்திரா தான் உளவியல் படிப்பில் பட்டம் பெற்று இருக்கிறேன் என்று கூறியிருக்கும் நிலையில் நேற்று அவர் நடந்து கொண்ட விதம் பலரையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது. அதாவது கடந்த வாரம் முழுக்கவே விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் வேலைகளை செய்வதற்கு சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார்.

Bigg Boss 7 contestants Vichithra also scolding Raveena and Dinesh

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் காய்கறி எல்லாம் வெட்டி, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டால் நான் அதை சமைத்து மட்டும் வைப்பேன் என்கிற மனநிலையிலே பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதுபற்றி விசித்திராவின் கணவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது சொன்னது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அதாவது விசித்திரா வீட்டில் சீப் குக் மாதிரி தான் செயல்படுவார். எல்லா காய்கறிகளும் வெட்டி கொடுத்து விட்டால் அவர் சமைத்து வைத்து விடுவார் என்று சொல்லி இருந்தார். அதுபோலத்தான் பிக் பாஸ் வீட்டிற்கும் விசித்திரா நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் நேற்றைய தினத்தில் ரவீனா டாஸ்க் முடிந்த நேரத்தில் சமைக்க வேண்டும் என்பதற்காக பாத்திரங்களை கழுவுவதற்காக விசித்ராவை கூப்பிட்டு இருந்தார்.

அப்போது மாயா கூட்டணியில் தீவிரமான பேச்சுவார்த்தையில் இருந்த விசித்திரா தன்னை வேலை செய்வதற்கு ரவீனா கூப்பிட்டதால் கோபப்பட்டு இருந்தார். கூடவே கோபத்தில் வந்த விசித்திராவை பார்த்ததும் ரவீனா ஒரு சில பாத்திரங்களை மட்டுமே கழுவ சொல்ல, அதனால் பாத்திரத்தை கழுவும் போது கோபத்தில் புலம்பி கொண்டு இருந்தார்.

அதாவது முதலில் இவங்களாம் கல்யாணத்தை பண்ணிக்கிட்டு என்னத்த கிழிக்க போறாங்கன்னு தெரியல என்று ரவீனாவே திட்டினார். அதைத்தொடர்ந்து ரவீனா தன்னிடம் வேலை சொல்வதற்கு காரணம் தினேஷ் தான் என்று தவறாக புரிந்து கொண்டு தினேஷ் உடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும் விமர்சித்து இருந்தார்.

Bigg Boss 7 contestants Vichithra also scolding Raveena and Dinesh

அதாவது இந்த மாதிரி ஆளுக எல்லாம் கூடல்லாம் மூணு மாசமே வாழ முடியல. எப்படித்தான் வாழ்க்கை பூரா வாழ முடியும்? யம்மா நீ திரும்பி கிரும்பி வந்துடாதம்மா என்று கேமராவை பார்த்து தினேஷ் மனைவிக்கு மறைமுகமாக எச்சரிக்கை எடுத்திருந்தார். ஏற்கனவே தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை நான் ரச்சிதா உடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

ஆனால் தினேஷுடைய வாழ்க்கையில் வெடிவைக்கும் விதமாக நேற்று விசித்திரா செய்த செயலை பலரும் திட்டி வருகின்றனர். அதிலும் நமக்கு பிடிக்காத ஒருவர் எப்போதும் நம்மை பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார். நமக்கு எதிராக தான் திட்டம் தீட்டு கொண்டு இருப்பார் என்று நம்மை அறியாமலே நமக்குள் ஒரு எண்ணம் வருவது போன்று தான் நேற்று சைக்காலஜி படித்த விசித்திராவிற்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் எழுந்திருக்கிறது.

அதனாலேயே தினேஷை பற்றி அப்படி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இதையெல்லாம் மௌனமாக கவனித்திருந்த தினேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அது பாராட்டக் கூடியது தான். காரணம் தன்னைப்பற்றி தான் விசித்திரா பேசுகிறார் என்று தனக்கு தெரிந்தாலும் அவர் நேரடியாக என்னிடம் பேசினால் மட்டும்தான் நான் அதற்கு பதில் கொடுக்க முடியும்.

Bigg Boss 7 contestants Vichithra also scolding Raveena and Dinesh

சின்ன பிள்ளை மாதிரி நீங்க பேசுனது என்ன பத்தி தான் என்று நானா போய் பேச முடியாது என்று தினேஷ் பிறகு விளக்கம் கொடுத்திருந்ததும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ரவீனா தான் வழக்கம் போல தினேஷ் இடம் விசித்திரா உங்களை பற்றி தான் பாத்திரம் கழுவும் போது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி இருந்தார் என்று போட்டுக் கொடுத்திருந்தார்.

உண்மையில் நேற்று நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்து இருக்கும் அதாவது இது நம்ம வாழ்க்கையிலும் எப்போதும் நடப்பது தான்.. ஆனால் இந்த மாதிரி நாமும் இனி செய்யக்கூடாது என்ற ஒரு சிந்தனை வந்து இருந்தால் சிறப்பாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+