ஏதோ தெய்வம் சதி செய்தது! உருக்கமாக தினேஷ் செய்த செயல்.. கடைசி நேரத்தில் இப்படி ஆகிட்டே!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையோடு முடிவுக்கு வர இருக்கிறது. இன்று இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்த சீசனுக்கு இறுதி சூட்டிங் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நடக்காத ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றது இருக்கிறது. அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது இந்த சீசன் முடிவடைய இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பாடகர்கள் போட்டியாளர்கள் மனம் விரும்பும் பாடல்களை யாருக்கு அவர்கள் டெடிகேட் செய்கிறார்களோ அது குறித்து பாடி இருந்தனர். அந்த வரிசையில் பிக் பாஸ் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் பாடி இருந்தார். அதுவும் அர்ச்சனா பாடிய அதே பாடலை பாடி அனைவரையும் அசர வைத்திருந்தார்.

bigg boss 7 Dinesh dedicated only a few lines for Rachitha Kanne Kalaimane song

அதைத்தொடர்ந்து தினேஷ் ரச்சிதாவிற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர்களிடம் கண்ணே கலைமானே என்ற பாடலை பாட சொல்லி அதிலும் குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் ரச்சிதாவிற்காக டெடிகேட் செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிகள் போட்டியாளராக இருக்கும் தினேஷ் சின்னத்திரை நடிகையான ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய காதல் திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சீசனில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

அப்போது தினேஷ் அவருக்கு அதிகமான சப்போர்ட் கொடுத்து இருந்தார். அதனால் இவர்கள் இருவரும் மீண்டும் புரிந்து கொண்டு ஒன்றாக சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் அது நடக்காமல் இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றிருக்கும் தினேஷ் தன்னுடைய மனைவியோடு தான் சேர்ந்து வாழ நினைப்பதாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதோடு கடந்த சீசனில் டைட்டில் வின்னரானதும் அதை ரச்சிதாவிடம் கொடுக்கப் போகிறேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில்தான் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் இதுவரைக்கும் இல்லாத அளவில் பிரபல பாடகிகள் வந்து பாடி உள்ளிருக்கும் போட்டியாளர்களை என்கரேஜ் செய்திருந்தனர். அப்போது தினேஷ் தன்னுடைய மனைவிக்காக கண்ணே கலைமானே என்ற பாடலை பாட சொல்லி டெடிகேட் செய்திருந்தார்.

அதிலும் "ஏதோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது" என்ற வரியை பாடும் போது தினேஷ் கண் கலங்கியபடி அதை ரசித்து உண்மை என்று சொல்கிற மாதிரி தலையை அசைத்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் தினேஷ் இந்த சீசனில் கலந்து கொண்ட நாளிலிருந்து தினேஷுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் விசித்திராவிற்கு ரச்சிதா தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுபோல தினேஷ் மக்கள் மத்தியில் பாராட்டு வாங்கும் நாட்களில் எல்லாம் தினேஷை தாக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை இப்போதைக்கு முடிகிற மாதிரி இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி அந்த பிரச்சனையை முடித்துக் கொள்வதை விட்டுவிட்டு இப்படி இணையதளத்தில் கண்ணாமூச்சி எதற்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+