பிக் பாஸ் 7: மீண்டும் மீண்டும் தன்னை பற்றி பேசும் தினேஷ்.. ரச்சிதா வெளியிட்ட திடீர் பதிவு.. இதுதான் பதிலாம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 15ஆம் தேதிக்கான அந்த மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் தினேஷ் தன்னுடைய மனைவியான ரச்சிதாவை குறித்தும், கடந்த சீசனில் தனக்கு இருந்த ஏமாற்றங்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய "பதில்கள்" என்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் பல வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். கடந்த சீசனில் ரச்சிதா போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்த நிலையில் தினேஷ் தன்னுடைய ஆதரவை முழுமையாக தெரிவித்து இருந்தார்.
இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதா தினேஷ் மீது திடீரென்று போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதற்கு பிறகும் ரச்சிதாவை பற்றி தினேஷ் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார்.
அதோடு தன்னுடைய காதல் எப்போதும் குறையாது என்றும் தான் செய்த தவறால் தான் எங்களுக்குள் இந்த பிரிவு ஏற்பட்டது அது பேசி தீர்த்துவிடும் வகையில் தான் இருக்கிறது. ஆனாலும் அதற்கு இன்னும் சில காலங்களாகும் என்று நினைக்கிறேன் என்று பேட்டிகளில் தினேஷ் பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக தினேஷ் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
முதல் நாளே கமல்ஹாசன் முன்பு எனக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே முக்கியம். கடந்த சீசனில் எனக்கு ரொம்ப பிடித்தவங்களுக்கு இந்த டைட்டில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.ஆனால் அது கிடைக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் நான் அந்த டைட்டிலை வாங்கி அவருக்கு கொடுக்க நினைக்கிறேன் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் கதை சொல்லும் டாஸ்க்கில் தினேஷ் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்தும் அதில் ரச்சிதா பிரிந்த பிறகு தான் பெற்ற கஷ்டங்கள் குறித்து பேசி இருந்தார். அதற்கு ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலி ஏற்படுத்தியவர்கள் அதை மறந்து விடலாம், ஆனால் வலியை அனுபவித்தவர்களுக்கு தான் அதோட கஷ்டம் என்னவென்று தெரியும் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இப்போது இன்று வெளியான ப்ரோமோவில் தினேஷ் போன பிக் பாஸ் ஆறாவது சீசன் எனக்கு ரொம்ப கனெக்டட்ஆக இருந்துச்சு. அதுல ஒரு சின்ன எமோஷன் இருக்கு. அதை இப்போ பேசுனா டோட்டலா அவுட் ஆகிடுவேன். சின்ன சின்னதா நிறைய விஷயங்கள் நடந்தது, இதிலிருந்து ஒரு டேனிங் பாய்ண்டா இருக்கும் இந்த பிபி 7 என்று நான் நினைக்கிறேன் என தினேஷ் பேசி இருந்தார்.
இதே நேரத்தில் ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய வீடியோவை போஸ்ட் செய்து, அதற்கு என் மௌனம் என்றால் நான் எல்லாவற்றிலும் சோர்வாக இருக்கிறேன் என்று அர்த்தம்... என் மௌனம் என்றால் நான் என் மீது கவனம் செலுத்தி நகர்கிறேன் என்று அர்த்தம்...

என் மௌனம் என்பது பதில்கள் நிறைந்தது என்று பொருள்... என் மௌனம் என்றால் வார்த்தைகள் நிறைந்தது.. அதோடு நான் "முடித்து விட்டேன்" என்பதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து," என் மௌனம் என்றால் நான் என் மனதில் உறுதி செய்து விட்டேன்" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் ரச்சிதா தன்னுடைய கையில் தினேஷ் உடைய பெயர் போட்டு இருந்த டாட்டூவை அழித்து அதற்கு பதிலாக அந்த இடத்தில் வேறு ஒரு டாட்டூ போட்டு இருக்கிறார். அது குறித்தும் இந்த பதிவில் அதிகமான ரசிகர்கள் ரச்சிதாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications